குமரி அனந்தன் நடைபயணம் | குமரி அனந்தன் நடைபயணம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

குமரி அனந்தன் நடைபயணம்

Added : நவ 22, 2011 | கருத்துகள் (3)
குமரி அனந்தன் நடைபயணம்

சென்னை:சென்னையில் நடந்த நிதிகள் இணைப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், காங்., மூத்த தலைவர் பேசியதாவது: இந்தியாவில் கிடைக்கும் மொத்த நீரில், 31 சதவீதம் தான் பயன்படுகிறது. மீதி 69 சதவீத தண்ணீர், கடலுக்குப் போகிறது. நதிகளை இணைத்தால், நீர் வழிச்சாலை கிடைக்கும். கப்பல் பயணம் எளிதாகும். சி.பி.ராமசாமி அய்யர், கே.எல்.ராவ் ஆகியோர், நதிகளை இணைக்க, தொடர்ந்து போராடினர்.நாட்டில் உள்ள நதிகளை இணைப்பதன் மூலம், 1 லட்சத்து 48 ஆயிரத்து 700 மெகா வாட் அளவிற்கு, மின்உற்பத்தி செய்ய முடியும். பல மாநிலங்கள் சிறப்பாக வளர்ச்சியடையும், என்றார்.



Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X