பள்ளி மாணவியை கடத்திய இருவர் கைது | பள்ளி மாணவியை கடத்திய இருவர் கைது| Dinamalar

பள்ளி மாணவியை கடத்திய இருவர் கைது

Added : மார் 29, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கும்மிடிப்பூண்டி :பொதுத் தேர்வு எழுத சென்ற பிளஸ் 2 மாணவியை, கடத்திய இருவரை போலீசார் கைது செய்து, மாணவியை பத்திரமாக மீட்டனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த, மஞ்சங்கரனை கிராமத்தைச் சேர்ந்தவர் கீதபிரியா, 17, (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் பொன்னேரி அருகே உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். பொதுத் தேர்வு என்பதால் பள்ளி விடுதியில் தங்கியபடி தேர்வுகளை எழுதி வந்தார்.
கடந்த 21ம் தேதி தேர்வு எழுத சென்றவர் விடுதிக்கு திரும்பவில்லை. கவரைப்பேட்டை போலீஸ் நிலையத்தில் பள்ளி தரப்பில் புகார் அளித்தனர்.


இந்நிலையில் நேற்று முன்தினம், ஆரம்பாக்கம் பகுதியில் மாணவி இருப்பதாக தகவல் கிடைத்ததன் பேரில் கவரைப்பேட்டை எஸ்.ஐ., டில்லிபாபு தலைமையிலான போலீசார் மாணவியை பத்திரமாக மீட்டதுடன் அவரை கடத்திய இருவரை கைது செய்தனர்.
விசாரணையில், இவர்கள் அண்ணாவரம் கிராமத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தி, 26, தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்கிற தமிழ்ச்செல்வன், 40, என்பது தெரிய வந்தது.
சம்பவத்தன்று, மாணவியை வலுக்கட்டாயமாக வெளியே வரவழைத்து அவரிடம் ஆசை வார்த்தை கூறி, மேற்கண்ட இருவரும் கடத்தியதாக தெரியவந்தது.
இதையடுத்து, அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிந்து கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை