Real Story | கோயிலில் சங்கு சுத்தம் செய்கிறார் ஒரு சாப்ட்வேர் என்ஜீனியர்| Dinamalar

கோயிலில் சங்கு சுத்தம் செய்கிறார் ஒரு சாப்ட்வேர் என்ஜீனியர்

Added : நவ 24, 2012 | கருத்துகள் (16)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் கடந்த திங்கள் கிழமை கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்கு அபிஷேகம் மூலவர் சுந்தரேசுவரருக்க வெகு விமரிசையாக நடைபெற்றது.
பழுதுபட்ட பழமையான சங்குகளில் புனித நீர் நிற்காமல் ஒழுகுகிறது, யாராவது 1008 சங்கு நன்கொடையாக கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று சொன்ன அடுத்த கணமே ,"நான் தருகிறேன் 'என்று தினமலர் வெளியீட்டாளர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி ஒத்துக்கொண்டு கடந்த ஒராண்டாக, இதற்கான சங்குகளை பல லட்ச ரூபாய் செலவில் சேகரித்து நன்கொடையாக வழங்கினார்.

பளபளக்கும் புதிய சங்கில் நடக்கும் முதல் அபிஷேகம் என்பதால் அதனை தரிசிக்க திரண்டவர்களில் நானும் ஒருவன்.
மேள தாளங்கள் மங்கள ஒலி எழுப்ப, அர்ச்சகர்கள் மந்திரம் சொல்லியபடி ஒவ்வொரு சங்கிலும் இருந்த புனித நீரை சுந்தரேசுவரர் மீது அபிஷேகம் செய்ய பக்தர்கள் மனம் சிலிர்த்தபடி கண்களில் ஆனந்த கண்ணீர் வடிய பார்த்தபடி இருந்தனர்.

இந்த நேரத்தில் ஒன்றை கவனித்தேன்.
கருவறையில் ஒரே நேரத்தில் நூறு சங்குகளைக்கூட வைக்கமுடியாது, ஆனால் 1008 சங்குகளை வைத்து அபிஷேகம் செய்வது எப்படி என்று பார்த்தபோது, அபிஷேகம் செய்வதற்கு ஏதுவாக சங்குகளை மரப்பலகையில் வைத்து அடுக்கி தருவதும், அபிஷேகம் செய்து முடித்த சங்குகளை அதே போல மரப்பலகையில் வைத்து எடுத்து வெளியே கொண்டுவருவதுமான பணியில் வெகு வேகமாக ஒருவர் ஈடுபட்டு இருந்தார்.

பச்சைகலரில் நாலு முழ வேட்டி, இடுப்பில் ஒரு துண்டு, ஒடிசலான தேகத்தில் ஊசலாடியபடி மெல்லிய ருத்ராட்ச மாலை, எங்கும் திருநீறு பூச்சு என்ற தோற்றத்துடன் ஓடி, ஓடி வேலை பார்த்துக் கொண்டிருந்த அவரது முகத்தில் இருந்த தேஜஸ் அவரிடம் ஏதோ விஷயம் இருக்கிறது என்று உள் மனது சொன்னது.
விசாரித்த போது அது உண்மை என்றானது

இன்றைக்கு 40 வயதாகும் நந்தகுமார் மதுரை பந்தடியைச் சேர்ந்தவர்.படிக்கும் காலத்தில் பள்ளியிலும் சரி, கல்லூரியிலும் சரி படு கெட்டி. இதன் காரணமாக மதுரையின் முதன்மையான தியாகராஜா பொறியியில் கல்லூரியில் எவ்வித சிபாரிசும் இன்றி எலக்ட்ரானிக்ஸ் படிப்பில் சேர்ந்து என்ஜீனியரானார். கேம்பஸ் இண்டர்வியூவில் திருவனந்தபுரத்தில் உள்ள டெம் டெக்னோ பார்க் சாப்ட் வேர் நிறுவனத்தில் வேலை கிடைத்து சசாப்ட் வேர் என்ஜீனியரானார். அங்கே தனது திறமை காரணமாக திட்ட தலைவராகவும் ஆனார். திருமணம் குழந்தைகள் என்று ஹையாக வாழ்க்கை போய்க்கொண்டிருந்தது.
இதுதான் வாழ்க்கை என்று நம்மைப் போன்றவர்கள் நினைத்துக் கொண்டிருக்க, இதுவல்ல வாழ்க்கை என்று திடுமென நந்தகுமார் முடிவெடுத்தார்.

மதுரை திரும்பியவர் தனக்கு பிரியமாக மீனாட்சி கோயிலுனுள் நுழைந்து சுந்தரேசுவரரிடம் ஒரு தீர்வு தேடினார், அங்குள்ள லிங்கோத்பவரிடம், சித்தரிடமும், பஞ்சமுகலிங்கேஸ்வரர் முன்பாகவும் மணிக்கணக்கில் தியானம் செய்த பின், என் தேடலுக்கு முடிவல்ல, விடிவு கிடைத்தது என்கிறார் நந்தகுமார்.
இதுவரை படித்தது படிப்பல்ல இனிமேல் படிப்பதுதான் படிப்பு என்று திருவாசசகத்தையும், தேவராத்தையும், சொக்கநாதர் அந்ததாதியையும், திருமந்திரத்தையும், அபிராமி அந்தாதியையும் ஆழ்ந்து படித்தார். அசைவம் சாப்பிடுவதை நிறுத்தினார், சொக்கநாதா என் கடன் உனக்கு பணி செய்து கிடப்பதே என்று புதிய மனிதனாக கோயிலுள் நுழைந்தார்.

அந்த நேரம் சுவாமி பூஜை சாமான்களை சுத்தம் செய்யும் பணிக்கு ஆள் இல்லாமல் இருந்தது, ஆகா இதுதானே அருமையான உழவாரப்பணி என்று கேட்டு வாங்கி அந்த காரியத்தை செய்தார். சில பூஜைப்பொருட்களை சுத்தம் செய்யும் போது காஸ்டிக் சோடா பயன்படுத்த வேண்டும் அப்படி பயன்படுத்தும் போது அது கையின் மென்மையான பகுதியை அரித்துவிடும் ஆனால் இந்த மென்பொருள் பொறியாளர் அதுபற்றி கவலைப்படாமல் ஒரு தேர்ந்த உழவாரப்பணியாளர் போல காஸ்டிக் சோடா, சோப்பு தண்ணீர், ஷாம்பு, கருப்பு புளி போன்றவைகளைக் கொண்டு சுத்தம் செய்து தந்தபோது அர்ச்சகர்கள் சந்தோஷப்பட்டனர் அவர்களைவிட மூலவர் சுந்தரேசுவர் அதிகம் சந்தோஷப்பட்டார்.
அன்றாட பூஜைப்பொருட்கள் போக, சிறப்பு விழா நாட்களில், 1008 சங்காபிஷேகம் நடைபெறும் நாட்களிலும் இன்னும் கொஞ்சம் கூடுதலாக சுத்தம் செய்யும் பணிவரும். அதை இன்முகத்துடன் ஏற்று செய்கிறார்.

குடும்பத்தை நடத்த தந்தையாருடன் துணிமணி வியாபாரம் மற்றபடி பெரும்பாலான நேரம் இறைப்பணியெனும் இந்த உழவாரப்பணியே. இந்த பணியை புனிதமாக நினைக்கும் மனதுடையவர்களை தன்னுடன் சேர்த்துக் கொண்டுள்ளார். இதற்காக நான் தலைவன் என்று அர்த்தம் இல்லை என்றைக்குமே சொக்கநாதரின் தொண்டன் நான் என்கிறார்.
இவரது பணிக்காக ஒரு பைசா கூட யாரிடமும் சம்பளமாகவோ, சம்பாவனையாகவோ, சன்மானமாகவோ வாங்குவது கிடையாது. வற்புறுத்தி தரும்போது அதை அப்படியே சுவாமிக்கு விளக்கு போட எண்ணெய், நெய் வாங்கக் கொடுத்துவிடுவார். இவரது இந்த குணத்தால் இவரை நம்பி பலரும் பல பொறுப்புகளை செய்து தருவார்கள் அதன்படி பள்ளியறை சிம்மாசனம், வெள்ளிப்பலகை, தீபாராதனை வெள்ளித்தட்டு, பைரவருக்கு வெள்ளி கவசம் போன்றவைகளை உபயதாரர் மூலமாக செய்து கொடுத்துள்ளார்.

இறைவனை அடையும் மார்கங்களில் உடம்பால் தொண்டு செய்யும் மார்கத்தை முடிந்த மட்டும் செய்கிறேன். என்னை இந்த தொண்டு செய்ய கடைசிவரை சுந்தரேசுவரர் அருளினால் அதுவே போதும் என்று சொல்லும் நந்தகுமாருடன் பேச அவரது போன் எண்: 9843219991.


- எல்.முருகராஜ்Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayabalan - chennai ,இந்தியா
01-டிச-201214:02:57 IST Report Abuse
jayabalan இவருக்கு நாம் செய்யும் தொண்டு இவரை அவர் போக்கில் விட்டு விடுவதேஅதிக விளம்பரம் துதி எல்லாம் அவரை திசை திருப்பி விடும் இது தான் ஞானானந்தர் போன்ற பெரிய மகான்களுக்கே நிகழ்ந்தது எங்கோ முகையூர் அருகே சின்ன கிராமத்தில் அமைதியாய் ஆனந்தமாய் ஏழை எளியோருக்கு இறைபணி செய்து கொண்டு இருந்தவரை இங்கே கொண்டு வந்து எங்கோ அனுப்பி விட்டார்கள்
Rate this:
Share this comment
Cancel
Purushothaman Mani - Kuala Lumpur,மலேஷியா
01-டிச-201206:50:22 IST Report Abuse
Purushothaman Mani நன்று. இறைப்பணியோடு சமூகப்பணியும் சேர்ந்திருந்தால் மேலும் நலமே
Rate this:
Share this comment
Cancel
Ayyavu P - chennai,இந்தியா
29-நவ-201202:43:38 IST Report Abuse
Ayyavu P இதில் பாராட்ட என்ன இருக்கிறது. இவரால் இந்த சமுதாயதிற்கு என்ன பயன்? கடவுளின் காலடியில் விழுந்து கிடக்கிறார். அவ்வளவு தான்.
Rate this:
Share this comment
sankar - trichy,இந்தியா
01-டிச-201202:07:45 IST Report Abuse
sankarமூச்சு விடுவது கூட சமுதாய தொண்டுதான் . உன் மூச்சால் பல தாவரங்கள் வாழ்கின்றன. தனது பதவி , அதிகாரம் , பணம் அனைத்தையும் துறந்து ஒருவன் வருவதே பெரிய விஷயம் . கோவில் என்பது பலரது தனம்பிகையை துண்டும் இடம் . கடவுள் இருக்கிறார் சரி செய்வார் என்ற நம்பிக்கையில் தான் நாம் அவரிடம் ப்ரிசினைகளை ஒப்படைத்து விட்டு தினம் நம்பிக்கையுடன் செயல் படுகிறோம் . அப்படிப்பட்ட கோயிலுக்கு ஒருவன் தொண்டு செய்கிறான் என்றால் . அது பெரிய விஷயம் தான் . பயன் இல்லாத மனிதரோ மிருகமோ இந்த உலகத்தில் இல்லை . உங்களால் வாரத்தில் ஓர் ரெண்டு மணி நேரம் ஒதுக்கி உளவார பனியோ இல்லை நாலுபேருக்கு இலவசமாக கல்வி கர்பிபதோ எதாவது முடியுமா . முயன்று பாருங்க . குறை சொல்லும் உலகத்தில் சரி செய்ய வாருங்கள் ....
Rate this:
Share this comment
sureshkrish - tirunelveli,இந்தியா
01-டிச-201208:00:17 IST Report Abuse
sureshkrish well said :)...
Rate this:
Share this comment
Cancel
KRV - Male,மாலி
28-நவ-201221:16:21 IST Report Abuse
KRV புனிதமான இறைப்பணிக்கு நல்வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
GOWSALYA - DENHEDLER,நெதர்லாந்து
28-நவ-201202:43:38 IST Report Abuse
GOWSALYA Nagan Srinivasan ,உங்க கருத்து வரவேற்கக் கூடியதே....மாணிக்கவாசகர்,அப்பர்,சுந்தரர் எல்லாரும் அந்தக்கால வேதாந்திகள்.அவர்கள்,வயதாகியும் இறை அருளில் முக்தியடயவில்லை என்றுதான் சொன்னார்கள்.அனால் இது கலிகாலம்.அவர்மனதில் சலனங்கள் வராமல் இருக்க அந்த சோமசுந்தரர் தான் அருள்பாலிக்கணும்.ஆனால், அவர் தன் குடும்பத்தையும் பார்த்துக்கொள்ளணும்....குடும்பத்தாரை கண்கலங்காமப் பார்த்துக்கொள்வதும் ஒரு இறைபணியே.......
Rate this:
Share this comment
Cancel
Vignesh - Coimbatore,இந்தியா
27-நவ-201216:20:02 IST Report Abuse
Vignesh கடவுளிடம் உண்மையான அன்பிருந்தால் அவன் தானாகவே நம்மை அழைப்பான்... நந்தகுமாரை அழைத்தது போன்று..
Rate this:
Share this comment
Cancel
Rajendran Chinnasamy - Coimbatore,இந்தியா
27-நவ-201213:00:22 IST Report Abuse
Rajendran Chinnasamy திரு , நந்தகுமார் மற்றும் தினமலர் வெளியீட்டாளர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி அவர்களுக்கும் எனது வணக்கமும் நன்றிகளும்
Rate this:
Share this comment
Cancel
vaidya - hyderabad,இந்தியா
27-நவ-201212:03:25 IST Report Abuse
vaidya நன்றே செய். நன்றே செய்வதை இன்றே செய். இன்றே செய்வதை இப்பொழுதே செய். எனும் வாசகத்திர்க்கிணங்க தன்னைத் தொலைத்து விட்டு எங்கு எங்கோ தேடும் பலகோடி பேர்களில் மிகச்ச் சிலரே, தான் உள்ளே இருப்பதை உணர்கின்றனர். உணர்ந்து அதனை அடைய விழைகின்றனர். விழைந்து அடையவும் அடைகின்றனர், ரமணரைப் போல், ராமகிரிஷ்ணரைப் போல், பாபாவைப் போல்..
Rate this:
Share this comment
Cancel
periasamy karmegam - Port Morsby,பாபா நியூ கினியா
26-நவ-201204:58:14 IST Report Abuse
periasamy karmegam பட்டினத்தார் மற்றும் " என் கடன் பணி செய்து கிடப்பதே " என்று சொன்ன அப்பர் சாமிகளின் வரிசகவே கருதுகிறேன் - நாதா குமார் சாமிகள் பாதங்களுக்கு என் சமூகத்தின் நமஸ்காரம்.
Rate this:
Share this comment
Cancel
Murugan - utkottai,இந்தியா
25-நவ-201218:51:51 IST Report Abuse
Murugan இறைவா ... இறைவா .. உன் கருணை ஐயா நந்த குமாருக்கு கிடைத்து விட்டது ... உன் கருணையே கருணை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை