Real Story | போலீஸ் உடையில் ஒரு புதுமையான ஆட்டோ டிரைவர்| Dinamalar

போலீஸ் உடையில் ஒரு புதுமையான ஆட்டோ டிரைவர்

Updated : டிச 06, 2012 | Added : டிச 01, 2012 | கருத்துகள் (13)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
போலீஸ் உடையில் ஒரு புதுமையான ஆட்டோ டிரைவர்போக்குவரத்து நெருக்கடிக்கு பஞ்சமில்லாத சென்னை மாநகரின் அபிபுல்லா சாலையில் ஒரு காலை வேளை.
நான்கு பக்கமும் இருந்து பாய்ந்துவரும் வாகன ஒட்டிகள் முந்திச் செல்வதில் காட்டிய ஒழுக்கமின்மையால், ஒருவருக்கு ஒருவர் திட்டிக்கொண்டும், முட்டிக்கொண்டும் இருந்தார்கள்.

போக்குவரத்து சீர்படுவதாகவும் இல்லை, அதுபற்றி யாரும் கவலைப்படுவதாகவும் தெரியவில்லை.
அந்த நேரம் போலீஸ்காரர் போல சீருடை அணிந்த ஒரு வயதான ஆட்டோ டிரைவர், தனது ஆட்டோவில் இருந்து இறங்கிவந்து, போக்குவரத்து நெருக்கடிக்கு நடுவில் நின்றுகொண்டு, வாகனங்களை சீர் படுத்தி, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினார்.

அந்த வழியாக சென்ற ஆம்புலன்ஸ் மற்றும் பள்ளி குழந்தைகளை சுமந்து சென்ற வேன் டிரைவர்கள் உள்பட பலர், " நல்லவேளை பெரியவரே, நீங்க வந்தீங்க, ரொம்ப நன்றி'' என்று சொல்லிவிட்டு சென்றனர்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அந்த இடத்திலேயே நின்று கொண்டு, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், சமூக அக்கறையுடன் செயல்பட்டு, பின் தனது ஆட்டோவை எடுத்துக்கொண்டு சென்ற அந்த பெரியவரின் தோற்றம் மட்டுமல்ல அவரது கதையுமே வித்தியாசமானதுதான்.

இன்றைக்கு 67 வயதாகும் ஆட்டோ டிரைவர் சந்திரன் வெள்ளந்தியாகவும், வெளிப்படையாகவும் தன்னைப்பற்றி சொல்கிறார்.
பசும்பொன் மாவட்டம் கமுதியில் பிறந்தவன் நான், அப்பாவின் கவனிப்பும், வளர்ப்பும் இல்லாததால் மகா மட்டமானவனாக வளர்ந்தேன், யாருக்கும் அடங்காத சேட்டைக்காரனாக விளங்கினேன், இதனால் இரண்டாம் வகுப்பிற்கு மேல் படிப்பு ஏறவில்லை, டான்ஸ் ஆடுவதில் ஆர்வம் ஏற்பட்டது, ரிக்கார்ட் டான்ஸ் குரூப்பில் சேர்ந்து ஊர், ஊராக போய் டான்ஸ் ஆடினேன், டி.ராஜேந்தரின் மனைவியான உஷா ராஜேந்தர் கூட எல்லாம் டான்ஸ் ஆடியிருக்கேன்.

ரிக்கார்ட் டான்ஸ் ஆடுறவன்ங்றதால எனக்கு யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை, என்னடாது நம்ம நிலமை இவ்வளவு மோசமாக இருக்கேன்னு நினைச்சு டான்ஸ் ஆடுறதை விட்டுவிட்டு, கார் டிரைவர் ஒருவரை பழக்கம் பிடிச்சு, அவரது காரை கழுவிக் கொடுத்து கார் ஒட்டக் கற்றேன். 35 ரூபாய் செலவழித்து லைசென்ஸ்ம் எடுத்தேன்.
ஆனால் யாரும் கார் ஒட்ட வாய்ப்பு கொடுக்கலை, அப்புறம் வாடகைக்கு ஆட்டோ எடுத்து ஒட்டுவோம்னு ஆட்டோ ஒட்டத் துவங்கினேன், அப்படி ஆட்டோ ஒட்டத்துவங்கி கிட்டத்தட்ட 37 வருஷமாச்சு, இப்ப சொந்த ஆட்டோ, சொந்த வீடு, மனைவி, மகன், மகள், பேரன், பேத்திகள் என்று நல்லாயிருக்கேன்.

ஆட்டோ ஒட்ட ஆரம்பிச்சு மனைவியோட நிம்மதியா வாழ்வோம்னு நினைச்ச நேரத்தில எனக்கு மஞ்சள் காமாலை நோய்வந்து பொழப்பேனான்னு ஆகிப்போச்சு, இயேசுவிடம் பிரார்த்தித்ததன் அடிப்படையில் பிழைச்சு எழுந்தேன், சபை சகோதரிகள் , "உங்ககிட்ட இருக்கிற கெட்ட பழக்கங்களை ஒழிச்சிங்கன்னா உங்களுக்கு ஒரு பிரச்னையும் இல்லைன்னாங்க, அன்னைக்கு வரை எனக்கு பழக்கமாகியிருந்த மது, கஞ்சா, பீடி, சிகரெட் போன்ற சகல கெட்ட பழக்கங்களையும், "சீ சனியன்களா'' என்று தூக்கியெறிந்தேன், இன்னைக்கு வரை அதை தொடவில்லை, அதே போல எந்த நோய் நொடியும் அதற்கு பிறகு என்னைத் தொடவில்லை.
சமுதாயத்திற்காக நாமும் ஏதாவது செய்யணும்ணு யோசிச்சப்பதான் நான் ஆட்டோவ நிறுத்தற இடமான அபிபுல்லா சாலையில், காலையில் ஏற்படற போக்குவரத்து நெருக்கடியை சரி செய்யலாமேன்னு தோணுச்சு, அதன்படி ரோட்ல நின்னு சரி செய்தேன், எல்லோரும் நன்றி சொல்லி சென்றார்கள். அப்புறம் நான் சவாரி இல்லாம போகும்போது, எங்கே போக்குவரத்து நெருக்கடின்னாலும் உடனே இறங்கி அதை சரி செய்துவிடுவேன்.

இதை அடிக்கடி பார்த்த போக்குவரத்து டிஎஸ்பி ஒருவர், நமக்கு ஒத்தாசையா ஒருத்தன் எப்படி உழைக்கிறான் பாருன்னு சொல்லி ஸ்டேஷனுக்கு கூப்பிட்டனுப்பி பழைய போலீஸ் யூனிபாரம், பூட்ஸ், பெல்ட் போன்றவைகளை கொடுத்துவிட்டாங்க, அதையெல்லாம் போட்டுக்கிட்டதும் ஒரு கம்பீரம் வந்திருச்சு, அப்போதிருந்து என்னோட ட்யூட்டி நேரம் முழுவதும் எப்பவும் இந்த டிரஸ்ஸோடதான் இருப்பேன்.
எனக்குன்னு நிறைய வாடிக்கையாளர் இருக்காங்க, செக்கை கையில கொடுத்து பணமாக்கி கொண்டுவந்து தர்ர அளவிற்கு நான் நம்பிக்கையான ஆளாகிட்டேன், இதுனால ஒருத்தரு மொபைல் போன் கொடுத்தாரு, ஒருத்தரு "ப்ளூ டூத்' கொடுத்தாரு, ஒருத்தரு புதுசாவே காக்கிதுணியில டிரஸ் தைச்சு கொடுத்தாரு. துப்பாக்கி வச்சுக்கிற இடத்துல போன் வச்சுக்குவேன், போலீஸ் ஸ்டார் குத்திக்கிற இடத்துல ஏபிசி என்று சும்மா குத்திக்குவேன். என்னால போலீஸ் உடைக்கு களங்கம் வராம பார்துக்குவேன்.

காலை 8 மணிக்கு ஆட்டோ ஒட்ட ஆரம்பிச்சா மாலை 6 மணிக்கு வீட்டிற்கு போயிடுவேன், வீட்டில் மனைவி பேரன்களுடன் பொழுதை போக்குவேன், ஞாயிறு முழுவதும் சர்ச்சில் இருப்பேன், என் ஏரியாவில எந்த குழந்தை பார்த்தாலும் குட் மார்னிங் தாத்தான்னு சொல்லாம போகாதுங்க, அந்த அளவிற்கு குழந்தைகளிடம் அன்பாக இருப்பேன். பொதுவா எல்லோருக்கும் நல்லவனாக இருப்பதும், எல்லவற்றிலும் நல்லபடியாக இருப்பதுமே வாழ்க்கையின் இனிமை என்பதை அனுபவிக்கிறேன் என்ற சந்திரனின் முகத்தில் அப்படி ஒரு ஆனந்தம்.
- எல்.முருகராஜ்

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gilbert karunagaran - Istres ,பிரான்ஸ்
05-ஜன-201304:01:21 IST Report Abuse
Gilbert karunagaran இயேசுவின் குரலை இதயத்தில் கொண்டு - இணையில்லா பலியில் இறைவனை உண்டு - சென்றிடும் வழியில் சொல்லிடும் மொழியில் - நின்றிட அழைத்தோம் நிற்பாய் தினமும் - நன்றி நன்றி நன்றி ஐயா
Rate this:
Share this comment
Cancel
solaimuthu.j - pondicherry,இந்தியா
25-டிச-201212:07:13 IST Report Abuse
solaimuthu.j indian thatha
Rate this:
Share this comment
Cancel
p.boopathy enkira Boopathiyar - chennai,இந்தியா
08-டிச-201210:30:30 IST Report Abuse
p.boopathy enkira Boopathiyar நல் ஒழுக்கமாக வாழ்க்கை நடத்தும் தங்களை பார்த்து இதர ஆட்டோ ஓட்டுனர்கள் பின்பற்ற வேண்டும்..,மேலும் மீட்டர் கட்டணத்தில் மாதம் Rs 25000 /- சம்பாதிக்கும் தங்கள் நேர்மை குணம் வாழ்த்துகள்.., இதர ஆட்டோ ஓட்டுனர்கள் பொதுமக்களை கசக்கி பிழித்து..,மீட்டர் இன்றி.., அதிக கட்டணம் வாசூல் செய்கின்றனர். அவர்கள் வருமானம் இவரை விட கூடுதலா இருக்கும்.., பெருபான்மை ஆட்டோ ஓட்டுனர்கள்..,குடுப்ப கட்டுபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தம் குழந்தைகள் பெயர்கள் ஆட்டோவில் எழுதி வைக்கின்றன.., தமிழக அரசு..,அரசு ஆட்டோ ஓட்டுனர்கள் ஏற்படுத்தி அரசு ஆட்டோ வாகன பேருந்து தொடங்க வேண்டும்..,பொது மக்கள் நியமான கட்டணத்தில் பயண செய்ய வாய்ப்பும் அரசுக்கு கூடுதல் வருமானம் ஏற்படும்.., பூபதியார்
Rate this:
Share this comment
Cancel
Rajesh - Chennai,இந்தியா
08-டிச-201207:27:42 IST Report Abuse
Rajesh சிறந்த தொண்டு வாழ்துக்கள் பெரியவரே......உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
Rate this:
Share this comment
Cancel
Jeni Isaac - trichy,இந்தியா
07-டிச-201216:28:13 IST Report Abuse
Jeni Isaac தாத்தா you are doing a great job.... May JESUS CHRIST give u a blessing & long life.....
Rate this:
Share this comment
Cancel
arabuthamilan - Manama,பஹ்ரைன்
07-டிச-201205:28:14 IST Report Abuse
arabuthamilan தாத்தா... உங்களைப் பார்த்தா நிஜ போக்குவரத்து கமிஷனர் மாதிரியே இருக்கிறீர்கள். தொடரட்டும் உங்கள் நற்பணி. ஆண்டவர் இயேசு கிறிஸ்து உங்களுக்கு நல்ல ஆயள், பெலன் தந்து உங்களையும், உங்கள் மனைவி, பிள்ளைகளையும் தலைமுறை தோறும் ஆசீர்வதிப்பாராக.
Rate this:
Share this comment
Cancel
ramalingam - chennai,இந்தியா
06-டிச-201205:53:33 IST Report Abuse
ramalingam தங்களின் வாழ்க்கை சரித்திரத்தை படிக்கும் பொழுது ஆச்சரியமாக உள்ளது. மனிதன் மனம் வைத்தால் எதையும் சாதிக்கமுடியும் என்பதற்கு தங்களின் வாழ்க்கை பயணம் ஒரு சிறந்த உதாரணம்.
Rate this:
Share this comment
Cancel
Cheenu Meenu - cheenai,இந்தியா
05-டிச-201221:58:38 IST Report Abuse
Cheenu Meenu மண் பறித்து உண்ணும் இக்காலத்தில், பிரிதி பலன் எதிர்பார்க்காமல் உழைப்பவர். இவரை போற்றி வாழ்த்துவோம்.
Rate this:
Share this comment
Cancel
சிந்திப்பவன் - chennai,இந்தியா
05-டிச-201221:37:53 IST Report Abuse
சிந்திப்பவன் அதெல்லாம் இருக்கட்டும்..இவர் மீட்டர் போடுவாரா மாட்டாரா?
Rate this:
Share this comment
Cancel
jayabalan - chennai ,இந்தியா
04-டிச-201206:26:17 IST Report Abuse
jayabalan We can do more good by being good than in any other way - Rowland Hill
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை