ஆஸ்லோ: நார்வே நாட்டில், மகனை கண்டித்ததால் கைது செய்யப்பட்ட இந்திய பெற்றோருக்கு, கோர்ட் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. இதில் தலையிட வேண்டு என ஆந்திராவை சேர்ந்தவர்கள் ஆதரவுக்குரல் எழுப்பியுள்ளனர்.
ஆந்திர மாநிலம் . ஐதராபாத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் நார்வேயில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிகிறார். இவரது மனைவி அனுபமா. இவர்களது ஏழு வயது மகன், ஆஸ்லோ நகர் பள்ளியில் படிக்கிறான்.சமீபத்தில் இவர்களது மகன், பள்ளியில், பேன்ட்டிலேயே, சிறுநீர் கழித்து ஈரமாக்கிக் கொண்டான். இதற்காக சந்திரசேகர், மகனை கண்டித்துள்ளார். மறுநாள், பள்ளியிலிருந்து ஒரு பொம்மையை எடுத்து வந்து விட்டான். இதனால் கோபமடைந்த சந்திரசேகர், "இது போன்று செய்தால், உன்னை, ஐதராபாத்துக்கு திருப்பி அனுப்பி விடுவேன்' என, மிரட்டியுள்ளார்.இந்த விஷயத்தை சிறுவன், தன் பள்ளி ஆசிரியையிடம் தெரிவித்துள்ளான். சிறுவனை, அவனது பெற்றோர் தொடர்ந்து கொடுமைப்படுத்துவதாக ஆசிரியை, போலீசில் புகார் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஆஸ்லோ கோர்ட் மகனை கொடுமை படுத்தியதாக தந்தை சந்திரசேகருக்கு 18 மாத சிறையும் , தாயார் ணஅநுபமாவுக்கு 15 மாத சிறையும் விதித்து தீர்ப்பளித்தார்.
நார்வே அரசின் சட்ட திட்டங்கள் விஷயத்தி்ல் மத்திய அரசு தலையிட முடியாது என இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் கை விரித்து விட்டது குறிப்பிடத்தக்கது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஏற்கனவே ஒரு குழந்தை விவகாரத்தில் ஒரு இந்திய தம்பதி மாட்டி ஒருவழியாக தப்பித்தார்கள்.. இப்போ இன்னொரு கேஸ் அதுபோல.. மேலை நாட்டிக்கு சென்றால் அந்நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உரிய மரியாதை செய்யவேண்டும்.. அவைகள் என்ன இந்தியாவா.. காசாபும் அஜ்மலும் இஷ்டம் போல் வந்து ஆட்டம் போட.. (ignorance of law has no excuse)..
நீ பெத்துட்ட, உன் புள்ளைய அடிப்ப, திட்டுவ. இது உனக்கு உரிமையோ.யார் கொடுத்தது. இந்தியன் எல்லாரும் புள்ளைய சுய நலத்துக்காக மட்டுமே வளக்குரிங்க. அதற்காக கண்டிப்பு. ஒரு காலத்துல, புள்ளைக்கு மரியாத தெரியலனா கண்டிப்பு. இப்போ உங்க லட்சியத்துக்கு புள்ள othuulaikalenna கண்டிப்பு. இது மனித உரிமை மீறல். அவன் நாட்டுலயும் புள்ளைய வளக்குரான். போய் தெரிஞ்சிக்கணும்....
குழந்தைகளை திட்ட மட்டும் அல்ல, அவைகளை தூக்கவும் கொஞ்சவும் கூட அவர்களிடம் பெர்மிசண் வாங்கி தான் செய்யவேண்டும். இல்லை என்றால் அது கூட பெரிய குற்றம்.
என் நண்பனுக்கு ஏற்பட்ட ஒரு நிஜ சம்பவம், அவன் குடும்பத்துடன் அமெரிக்காவில் ஷாப்பிங் சென்றுள்ளான், அப்போது அவன் பையன் எதையோ வாங்கி தர சொல்லி அடம் பிடித்திருக்கிறான். இவன் வேண்டாம் என்று எடுத்து சொல்லியும் அவன் கேட்கவில்லை, அதனால் லேசாக தட்டியிருக்கிறான். இது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிய, கடை நிர்வாகம் போலிசுக்கு தகவல் தர, கோர்ட் கேஸ் என் ஆகி, ஒரு பெரிய தொகையை அபராதமாக கட்டி தான் இந்த சிக்கலில் இருந்து மீண்டான். அபராதம் மட்டுமன்றி வக்கில் பீஸ் அது இது என்று கிட்ட தட்ட அவன் சம்பாதித்த பணம் அனைத்தும் செலவு செய்ய நேரிட்டது, அந்த குழ்ந்தை கேட்ட பொருளின் விலை 5$...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.