Advertisement
லாரி மோதி தந்தை,மகள் பலி : ஷேர் ஆட்டோவால் விபரீதம்
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

22 டிச
2012
00:37

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் முன், தண்ணீர் லாரி மோதியதில், டூவீலரில் சென்ற தந்தை, மகள் பலியாயினர். மதுரை, அய்யர் பங்களாவை சேர்ந்தவர் சிவப்பிரகாசம், 55. தெற்கு ரயில்வேயில், சீனியர் செக்ஷன் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார் . இவரது மகள் ஷர்மிளா, 21. திருமங்கலம் ஓமியோபதி கல்லூரியில், மூன்றாமாண்டு படித்து வந்தார். நேற்று காலை, 9:20 மணிக்கு, கல்லூரிக்கு செல்லும் மகளை பஸ் ஏற்றிவிட, சிவப்பிரகாசம், டூவீலரில், மாட்டுத்தாவணிக்கு வந்து கொண்டிருந்தார். புதூர் சிப்காட்டை தாண்டி, பஸ் ஸ்டாண்ட் எதிரே, வரும்போது, பயணிகளை இறக்கிவிட்ட ஷேர் ஆட்டோ, திடீரென, வலதுபுறம் முன்னேறியது. இதனால், வேகத்தை குறைக்க முடியாத சிவப்பிரகாசம், "ஓவர்டேக்' செய்ய வலதுபுறம் முன்னேறியபோது, பின்னால் வந்த, "ஆதி வாட்டர் சர்வீஸ்' லாரி மோதியது. இந்தவிபத்தில், ஷர்மிளா, சிவப்பிரகாசம், சம்பவ இடத்தில் பலியாயினர். லாரி டிரைவர் தலைமறைவானார். தல்லாகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balasubramaniam Rajangam - MADURAI,இந்தியா
22-டிச-201212:49:41 IST Report Abuse
Balasubramaniam Rajangam தினமலரும் தினம் தினம் இந்த அக்கிரமங்களை சுட்டிக்காட்டி வருகிறது. அதிகாரிகள் தாங்கள் வாங்குகிற சம்பளத்துக்காகவாவது வேலை பார்க்கலாமே., சாமானியர்களின் கண்களுக்கு தெரியும். இந்த அநியாயம் கண்ணிருக்கும் அதிகாரிகளுக்கு தெரியாமலா இருக்கும். சாட்டையை சுழற்றினால் தான் நம்மவர்கள் வழிக்கு வருவார்கள்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Guru - Batam,இந்தோனேசியா
22-டிச-201211:47:13 IST Report Abuse
Guru ஆட்டோவை போல் சாலை விதிகளை மீறுபவர்கள் வேறு யாரும் இல்லை.., இவர்களுக்கு தகுந்த பயிற்சி அளிக்க வேண்டும்
Rate this:
0 members
0 members
11 members
Share this comment
Cancel
Srinivasan Chockalingam - chennai ,இந்தியா
22-டிச-201206:11:49 IST Report Abuse
Srinivasan Chockalingam இது அங்கு மட்டுமல்ல சென்னையில் தினமும் நடக்கும் காட்சி . ஷேர் ஆட்டோ ஓட்டுபவர்கள் சாலை விதிகளை பற்றியோ மற்றவர்களை பற்றியோ நினைப்பதில்லை
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.