காரைக்குடி: மழையின்மை, நெல்லுக்குரிய விலை கிடைக்காதது போன்ற காரணங்களால், விவசாயிகள் தங்களது நிலங்களை தரிசாக விட்டுள்ளனர். தமிழ்நாட்டில், கடந்த 90-93 ம் ஆண்டுகளில் 20.5 லட்சம் ஹெக்டேராக இருந்த நெல் விவசாய பரப்பளவு, 2008-11 ல், 18.9 லட்சமாக குறைந்துள்ளது. எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு விவசாய பரப்பு குறையவில்லை. இந்தியா முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் 20 லட்சம் ஹெக்டேர் நிலங்கள், தரிசாக மாறியுள்ளன.
நல்ல விளை நிலங்களில் மகசூல் குறைவு, சாகுபடி செலவு அதிகரிப்பு, நெல் விவசாயத்தில் வருவாய் குறைவு, மழையின்மை போன்றவை தான், விவசாய நிலங்கள் தரிசாவதற்கு காரணம் என புள்ளி விபரம் கூறுகிறது.
நெல்லுக்கு, ஒரு குவிண்டாலுக்கு குறைந்த பட்சவிலையாக, 1500 ரூபாய் நிர்ணயம் செய்யப்படுகிறது. இது, நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு, அரசால் அறிவிக்கப்பட்ட விலையாகும். ஆனால், உரங்களின் விலை, இதர செலவுகள் அவ்வப்போது, உயர்ந்து வருகிறது. கிலோ 15 ரூபாய்க்கு வாங்கப்படும் நெல், கடைகளில் அரிசியாக 45 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அரிசி விலை உயர்ந்தாலும், நெல் விலை குறைவாகவே உள்ளது. அழகப்பா பல்கலை நபார்டு வங்கி பேராசிரியர் நாராயணமூர்த்தி கூறியதாவது: இந்திய அளவில் உணவு தானிய உற்பத்தியில், நெல்லின் பங்களிப்பு 43 சதவீதம்.வரும் 2025ல், 3160 லட்சம் டன்னும், 2050ல், 4410 லட்சம் டன்னும் உணவு தானியம் தேவை. தரிசாகும் நிலங்களால் எதிர்காலத்தில் உணவு பற்றாக்குறை ஏற்படும். எனவே, விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும் வகையில், விலை
நிர்ணயம் செய்தால் தான், தரிசு நிலங்களின் பரப்பளவு குறையும். இல்லையேல், உணவு இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்படுவோம், என்றார்.
ஆறுமுகம், விவசாயி, அமராவதிபுதூர்: அமராவதிபுதூர் பகுதியில், 312 ஏக்கரில் விவசாயம் நடந்தது. நீர்நிலை இருந்தும், தற்போது, விவசாயமே இல்லை. கருவேல முட்செடிகள் மண்டி கிடக்கிறது. விவசாய பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை, உரங்கள் வேறு நபர்களுக்கு விற்கப்படுவது. நெல்லுக்கு அரசு தரும் குறைந்த விலை, இவற்றால் விவசாயத்தை கைவிட வேண்டிய நிலை உள்ளது, என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.