உத்தமபாளையம்: மூன்று பெண்களை மணம் முடித்த, தேனி மாவட்ட கடற்படை அதிகாரி, மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். தேனி மாவட்டம், கோம்பையை சேர்ந்த வையாபுரி மகன் சின்னையா,49. இவர் இந்திய கப்பல் படையில் நாயக் சுபேதாராக பணியாற்றி வந்தார். கோம்பையை சேர்ந்த ஜெயராணியை, சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தார். இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர். பின்னர், கோல்கட்டாவில் பணியில் இருந்தபோது, கல்யாணி என்ற பெண்னை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 10 வயதில் மகன் இருக்கிறார். கல்யாணியுடன், கொச்சி கடற்படை முகாம் குடியிருப்பில் வசித்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு, பணி விடுப்பில் சொந்த ஊரான கோம்பைக்கு வந்திருந்த சின்னையா, விமலா என்ற பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்துள்ளார். அவரை ராயப்பன்பட்டியில் வீடு பிடித்து தங்க வைத்திருந்தார். கொச்சி முகாமிற்கு செல்லும்போது கல்யாணியுடனும், விடுப்பில் ஊருக்கு வரும்போது விமலாவுடனும் குடும்பம் நடத்தி வந்தார். கடந்த வாரம் வருடாந்திர விடுப்பு கிடைத்ததால், கல்யாணியை கோல்கட்டாவில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி விட்டு, ராயப்பன்பட்டியில் உள்ள விமலாவுடன் தங்கியிருந்தார். சில தினங்களாக மனக்குழப்பத்திலும், விரக்தியுடனும் இருந்த சின்னையா, நேற்று முன்தினம் மாலை, மதுவில் விஷம் கலந்து குடித்து இறந்தார். மூன்று மனைவிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராயப்பன்பட்டி எஸ்.ஐ., ராஜசேகர் விசாரணை நடத்தி வருகிறார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.