மதுரை : மதுரையில் அனுமதி வழங்கி 3 ஆண்டுகளாகியும், "டெர்மினல் மார்க்கெட்' பணி துவங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேளாண் விற்பனை வாரியம் மூலம் சென்னை நாவலூர், கோவை பெருந்துறை சிப்காட், மதுரை திருவாதவூர் அருகே முக்கம்பட்டியில் "டெர்மினல் மார்க்கெட்' துவக்க அரசு உத்தரவிட்டது. விவசாய விளை பொருட்களை, அறுவடைக்கு பிந்தைய சேதாரத்தை குறைப்பது, மதிப்பு கூட்டு பொருளாக விற்பனை செய்ய உட்கட்டமைப்பை ஏற்படுத்துவது என்ற நோக்கத்தில், இந்த "வேளாண் விற்பனை முனையங்களை' துவங்குவதாக அரசு அறிவித்தது. இதில் விவசாய விளைபொருட்களின் சேகரிப்பு மையம், தரம்பிரிப்பு, சிப்பம் கட்டுதல், குளிர்சாதன அறை, பழங்களை பழுக்க வைக்கும் வசதி, தரக்கட்டுப்பாடு, மருத்துவ வசதி, கருத்தரங்கக் கூடம், தகவல் தொடர்பு மையம் உள்பட 16 வகையான வசதிகள் ஏற்படுத்தப்படும். மதுரை மாவட்டத்தில் இதற்கென 50 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 24.11.2009ல் வேளாண் விற்பனை வாரியத்திற்கு முன்நுழைவு அனுமதி வழங்கப்பட்டது.
இதையடுத்து அப்போதைய விவசாயத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், மதுரையில் இடத்தை ஆய்வு செய்தார். ஆனால் அதன்பின், இந்த இடத்தைப் பற்றி மாவட்ட நிர்வாகம் மறந்தே போனது.
இந்த மார்க்கெட் அமைந்தால், மிகவும் பின்தங்கிய திருவாதவூர் பகுதி மேம்படும். மதுரை மாவட்டத்தில் உலகத் தரத்திலான மார்க்கெட் வசதி கிடைக்கும். முன்நுழைவு அனுமதி வழங்கப்பட்டு விட்டாலே, வேளாண் விற்பனை வாரியத்திடம் இடத்தை ஒப்படைத்தது போன்றதுதான். எனவே உடனடியாக இதற்கான ஏற்பாடுகளில் அத்துறையினர் இறங்கி
யிருக்க வேண்டும். ஆனால் என்ன காரணத்தாலோ, டெர்மினல் மார்க்கெட்டையே "டெர்மினேட்' செய்து விட்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.