Advertisement
கல்யாணசுந்தரத்திற்கு காதுதான் கேட்காது...- எல்.முருகராஜ்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

நகரமும் இல்லாத கிராமமும் அல்லாத அவிநாசி பகுதியில், ஒரு பழைய மொபட் வாகனத்தின் பின்னால் சின்ன, சின்ன பொருட்களை வைத்து விற்பனை செய்துகொண்டு செல்கிறார் பெரியவர் ஒருவர்.
அவரது சட்டையின் பின் பகுதியில் எனக்கு காது கேட்காது என்று எழுதி ஒட்டியுள்ளார்.காரணம் அறிய அவரை நிறுத்தி சைகையால் பேசிய போது, அவர் நம் கண்களையும், உதடுகளையும் பார்த்தே என்ன கேட்கிறோம் என்பதை புரிந்துகொண்டு பதில் தருகிறார்.
பெயர் கல்யாணசுந்தரம்,வயது 74.
திருப்பூர் பகுதியில் நன்றாக வாழ்ந்திருக்கிறார், அவரது மகன் ஒருவர் இன்றைக்கும் நாற்பது பேரை வைத்து திருப்பூரில் தொழில் நடத்திவருகிறார் என்பது பேச்சின் மூலம் தெரியவந்ததே தவிர, பழைய விஷயத்தின் ஆழத்திற்கு போக அவர் பிரியப்படவில்லை.
யார் எங்கே இருந்தாலும் நல்லாயிருக்கட்டும், இப்ப நம்ம கதையை பேசுவோம் என்கிறார் மனைவியோடு அவிநாசி வந்தவருக்கு கவுரமாக, நியாயமாக, எளிமையாக குடும்பம் நடத்த ஒரு தொழில் தேவைப்பட்டது.
ஊக்கு, ஹேர்பின், லஞ்ச்பாக்ஸ், விசிறி உள்ளிட்ட பல்வேறு வித பொருட்களை மொத்தமாக வாங்கி, மொபட்டில் பக்கத்தில் உள்ள கிராமங்களுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகிறார்.
இவரது பொருட்களின் மதிப்பு இரண்டு ரூபாயில் இருந்து இருபது ரூபாய் வரைதான்.
ஒரு நாளைக்கு பெட்ரோல் உள்ளிட்ட செலவு போக நூறில் இருந்து நூற்றைம்பது ரூபாய் வரை கிடைக்கிறது.
அது போதும் இந்த கிழவனும், கிழவியும் (மணைவி) கவுரமாக சாப்பிட்டு வாழ என்கிறார்.
எப்போது என்று சொல்லத் தெரியவில்லை கொஞ்சம், கொஞ்சமாக காது அதன் கேட்கும் திறனை இழந்து விட்டது, ரொம்ப சத்தமாக பேசினால் இடது பக்கம் லேசாக கேட்கும் அதுவும் சில சமயம்தான். அதனால் என்னைப் பொறுத்தவரை காது கேட்காதவன்தான், ஆனால் அதைப் பற்றி கவலையேதும் இல்லை.
இதன் காரணமாக இவர் தான் விற்கும் பொருட்களின் மீது விலையை ஒட்டிவைத்துள்ளார். ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் லாபம் வைத்தே இவர் விற்பது, இவரது வாடிக்கையாளர்களுக்கு தெரியும் என்பதால், யாரும் இவரிடம் பேரம் பேசாமல் பொருளை எடுத்துக் கொண்டு காசு கொடுத்துவிட்டு போய்க்கொண்டே இருப்பார்கள். காசு கொடுக்காவிட்டாலும் இவர் கேட்கமாட்டார், அந்த அளவிற்கு மனிதர் நல்லவர்.
கிராமத்தில் உள்ள ஏழைக் குழந்தைகள் சிலருக்கு இவராகவே நல்ல நாள் போன்ற தினங்களில் இலவசமாக பொருட்கள் தந்து சந்தோஷப்படுத்துவதும் உண்டு.
பழகியவர்களுக்கு என்னைப்பற்றி தெரியும், புதிதாக என்னை பார்ப்பவர்களுக்கு என்னைப்பற்றி தெரியாமல் சிரமப்படக்கூடாது என்பதற்காகவும், ரோட்டில் போகும் போது பின்னால் வரும் வாகன ஓட்டிகள் என் நிலையைத் தெரிந்து கொண்டால் வீணாக "ஹார்ன் சத்தம்' கொடுத்து அவதிப்பட வேண்டாம் பாருங்கள், அதற்காகத்தான் சட்டையின் பின் பக்கத்தில் எனக்கு காது கேட்காது என்று எழுதி "பின்' போட்டுள்ளேன்.
இதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை என்கிறார், உண்மைதானே.. ஒய்வு எடுக்க வேண்டிய வயதில், களைத்து போகாமல் உழைத்து பிழைக்கும் கல்யாணசுந்தரத்தை நினைத்து, உழைக்காமல் "இலவசங்களை' நம்பி வாழ்பவர்கள்தான் வெட்கப்பட வேண்டும், உண்மையில் இவரை நினைத்து நாமும், நாடும் பெருமைப்படத்தான் வேண்டும்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (25)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
tharangai john - DXB,ஐக்கிய அரபு நாடுகள்
25-ஜன-201312:56:53 IST Report Abuse
tharangai john he is one of the real hero, who teaches a golden moral to the youth and all. Govt should be ashamed of this by making their senior citizen to struggle like this hats off to dinamalar,for bringing such a important news to the society.thanks
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
raju anusiya - dindugul  ( Posted via: Dinamalar Android App )
21-ஜன-201309:24:35 IST Report Abuse
raju anusiya super kalyanasundaram.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
குடியானவன்-Ryot - தண்ணீர் இல்லா தேசம் ,இந்தியா
20-ஜன-201311:45:43 IST Report Abuse
குடியானவன்-Ryot இதை படிக்கும்போது என் கண்கள் குளமாகிவிட்டது. வாழ்த்த வயதில்லை 70 வயது இளைஞர் இருக்கும் திசை நோக்கி கரம் கூப்பி சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
padma vathy - Singapore,சிங்கப்பூர்
30-டிச-201211:44:42 IST Report Abuse
padma vathy Very very motivating to read. hatsoff... people like him make this world a beautiful place to live...
Rate this:
0 members
1 members
1 members
Share this comment
Cancel
KARTHI - coimbatore,இந்தியா
29-டிச-201209:41:26 IST Report Abuse
KARTHI சபாஷ்
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
Jawahar Elango - Erode,இந்தியா
29-டிச-201208:47:49 IST Report Abuse
Jawahar Elango மிக்க நன்று. வாழ்க வளமுடன்.
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Cancel
Jawahar Elango - Erode,இந்தியா
29-டிச-201208:46:27 IST Report Abuse
Jawahar Elango நன்று. உங்கள் பணி தொடரட்டும்.
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
Jawahar Elango - Erode,இந்தியா
29-டிச-201208:37:58 IST Report Abuse
Jawahar Elango மனதை நெகிழ வைத்த உண்மை சம்பவம்.... உழைப்பிற்கு ஒரு எடுத்துகாட்டு... வாழ்க பலஆண்டு...
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
Venkataraman Krishnamurthy - Chennai,இந்தியா
28-டிச-201217:38:09 IST Report Abuse
Venkataraman Krishnamurthy அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய மனிதர்.
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
Cancel
T.R. Harihara Sudhan - Bangalore,இந்தியா
28-டிச-201215:11:13 IST Report Abuse
T.R. Harihara Sudhan நான் இந்த "நிஜ கதை சொல்ல போறேனின்" உண்மையான ரசிகன். இந்த பக்கத்தை பார்த்து நிறைய விசயங்களை தெரிந்து கொண்டேன் மேலும் சில பக்கங்கள் என்னை மிகவும் நெகிழ வைத்தது. உதாரணம் : இன்றைக்கு இந்த பக்கம். வாழ்க இந்த பக்கம் புனைவோர் வளர்க நமது தினமலர்
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Lakshmanan Murugaraj - Chennai,இந்தியா
29-டிச-201217:39:11 IST Report Abuse
Lakshmanan Murugarajநன்றி உங்கள் வார்த்தை உற்சாகப்படுத்துகிறது -முருகராஜ் ...
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்