Advertisement
அரிசி விலையை குறைக்க அதிரடி : மேற்கு வங்கத்தில் இருந்து 7,000 டன் அரிசி கொள்முதல்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2012,00:16 IST
மாற்றம் செய்த நாள் : டிசம்பர் 23,2012,01:24 IST

அரிசி விலை அடிக்கடி உயர்வதை தடுக்கும் வகையில், மக்களுக்கு குறைந்த விலையில், அரிசி வழங்க, மேற்கு வங்கத்தில் இருந்து வந்த, 7,000 டன் அரிசியை, உணவுத்துறை இருப்பு வைத்துள்ளது.

தமிழகத்தில் மழையில்லாததால், நெல் சாகுபடி குறைந்துள்ளது. டெல்டா மாவட்டங்களில், காவிரி நீர் இல்லாமையால், குறுவை சாகுபடி பொய்த்து விட்டது. தற்போது, சம்பா சாகுபடியையாவது காப்பாற்றும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் அரிசி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன், கிலோ 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட, பொன்னி அரிசி, தற்போது, 42 ரூபாய் என்ற அளவிற்கு உயர்ந்து விட்டது. அண்டை மாநிலங்களான, கர்நாடகா, ஆந்திராவில் இருந்து, நெல் வரத்து உள்ளது. இருப்பினும், அரிசி விலை குறைந்தபாடில்லை.

நெல் அரைக்கப்பட்டு, அதில் இருந்து கிடைக்கும் முதல் தர அரிசி, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதே அரிசி விலை குறையாததற்கு காரணமாக கூறப்படுகிறது. தமிழகத்தில் அரிசி மட்டுமின்றி, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட பொருட்களின், தொடர் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில், 50 கோடி ரூபாய் நிதி இருப்புடன், விலைக்கட்டுப்பாட்டு நிதியத்தை, முதல்வர் ஜெயலலிதா கடந்தாண்டு உருவாக்கினார். சமீப காலமாக, உயர்ந்து வரும் அரிசி விலையை கருத்தில் கொண்டு, இந்தாண்டு செப்டம்பர் மாதம், அந்த நிதியத்தை பயன்படுத்தி, நெல் விளைச்சல் அதிகமுள்ள, மேற்கு வங்கத்தில் இருந்து, தமிழகத்தின் பொன்னி அரிசிக்கு இணையான, சொர்ணா, ஐ.ஆர்-36 மற்றும் "மினி கிட்' ஆகிய ரக அரிசிகளை கொள்முதல் செய்ய உத்தரவிட்டார்.

இதில், சொர்ணா மற்றும் ஐ.ஆர்-36 அரிசி கிலோ, 25 ரூபாய்க்கும், மினி கிட் அரிசி கிலோ, 31 ரூபாய்க்கும் விற்பனை செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு பண்டகசாலைகள் மற்றும் அமுதம் அங்காடிகள் மூலம், இந்த அரிசி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த அரிசி, குறிப்பிட்ட அளவிற்கு விற்பனை செய்யப்பட்டு வந்தாலும், வெளிச்சந்தையில் அரிசியின் விலை குறைந்தபாடில்லை. கடந்த மாதம், 27 ரூபாய்க்கு விற்கப்பட்ட ரூபாலி ரக அரிசி, கிலோ, 30 ரூபாய்க்கும், வெள்ளை பொன்னி, 32லிருந்து 35 ரூபாய்க்கும், பொன்னி பச்சை அரிசி, 40லிருந்து 42 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. மழையில்லாத காரணத்தினால், நெல் உற்பத்தி குறைந்து, விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம், ஆரணி உள்ளிட்ட பகுதிகளில் விளையும், குறைந்த அளவு நெல்லும், தென் மாவட்டங்களுக்கு, வியாபாரிகளால் வாங்கிச் செல்லப்படுகிறது. அரிசி தேவைக்காக, மற்ற மாநிலங்களின் அரிசி வரத்தை, நம்பி இருக்க வேண்டியுள்ளது. இதனால், அரிசி விலை தாறுமாறாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு, மேற்கு வங்கத்தில் இருந்து வாங்கப்படும் அரிசியின் அளவை அதிகரிக்க, தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

இது குறித்து, உணவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்போது, மேங்கு வங்கத்திலிருந்து, 7,000 டன் அரிசி கொள்முதல் செய்யப்பட்டு, இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அரிசி விலை அதிகரிக்கும் போது, இந்த அரிசியை, கூட்டுறவு அங்காடிகளில் விற்பனைக்கு, அதிகளவில் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்த அரிசியை வாங்கி, வெளிமார்க்கெட்டில் விற்பதை தடுக்க, ஒருவருக்கு ஒரு மூட்டை என்ற வீதம் மட்டுமே வழங்கவும், அதனை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதவிர, 25 ரூபாய்க்கு இட்லி அரிசியும் விற்பனை செய்யப்படுகிறது. பொங்கலை முன்னிட்டு, அரிசி, பாமாயில், பருப்பு உள்ளிட்டவை அதிகளவில் இருப்பு வைத்திருக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து, 1.25 லட்சம் டன், வெள்ளை பச்சரிசி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.பொதுமக்கள் தேவை பொறுத்து, இந்த அரிசியை வழங்கலாம் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (10)
Guru - Batam,இந்தோனேசியா
23-டிச-201219:43:28 IST Report Abuse
Guru ஹி ஹி..., உலகின் மிக பெரிய விவசாய நாடு நம் இந்திய.., அரிசியை வெளிநாட்டில் வாங்குவது கேவலம்.., அரசாங்கம் விவசாயத்தை கவனிக்கும் லட்சணம்
Rate this:
0 members
0 members
11 members
Share this comment
kamarud - ooty,இந்தியா
23-டிச-201218:40:27 IST Report Abuse
kamarud அப்படியே கொஞ்சம் கரென்ட் ம் கொள்முதல் செய்யுங்களேன் ...........
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
sekar - Muscat,ஓமன்
23-டிச-201215:27:10 IST Report Abuse
sekar 7000 டன்னில் பதுக்கல், கடத்தல், முறைகேடு, 4 கால் எலி, 2 கால் (ஊழல்) பெருச்சாளி எல்லாம் சாப்பிட்டது போகத்தான் நமக்கு....
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Rajasekaran Palaniswamy - georgia,யூ.எஸ்.ஏ
23-டிச-201212:20:05 IST Report Abuse
Rajasekaran Palaniswamy சரி இதில் எவ்வளவு கேரளாவுக்கு கடத்தப்பட உள்ளது?
Rate this:
1 members
0 members
1 members
Share this comment
K.Balasubramanian - Reading RG5 1DG ,யுனைடெட் கிங்டம்
23-டிச-201211:38:19 IST Report Abuse
K.Balasubramanian West Bengal is one of the leading rice production State. Their action to reduce consumer price is laudable. we should take practical lesson from this.
Rate this:
1 members
0 members
0 members
Share this comment
Natarajan Iyer - chennai,இந்தியா
23-டிச-201211:36:16 IST Report Abuse
Natarajan Iyer நம்ம ஆட்களுக்குதான் இலவச அரிசி, இலவச மிக்சி இலவச கிரைண்டர் இலவச மின்விசிறி இலவச சைக்கிள் இலவச மடிக்கணினி (ஜெயிலில் இருக்கும் நாய்களுக்குகூட இலவச கோழி பிரியாணி) (அடுத்த தேர்தல் வாக்குறுதியாக இலவச குழந்தையும் அறிவிக்கப்படும்) கிடைக்கிறதே.............அப்புறம் என்ன..... சம்பாதிப்பதை டாஸ்மாக்கில் கொடுத்துவிட்டு குப்புறபடுத்து குறட்டைவிடு தமிழா.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Chenduraan - kayalpattanam,மாலத்தீவு
23-டிச-201208:15:12 IST Report Abuse
Chenduraan 7000 டன்னால் விலை ஒன்றும் குறைந்து விடாது? அமுதம் சிறப்பு அங்காடி மாதிரி எல்லா ஊர்களிலும் ரேஷன் கடைகளை பல்பொருள் அங்காடிகலாக மாற்றினால் தான் விலை வாசி குறையும்.
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Ambedkumar - Chennai,இந்தியா
23-டிச-201207:48:28 IST Report Abuse
Ambedkumar இந்த நடவடிக்கையின் மூலம், பதுக்கல் மட்டுப்படுத்தப்பட்டு அரிசி விலை குறைய வாய்ப்புள்ளது
Rate this:
1 members
0 members
1 members
Share this comment
மோனிஷா - நாகர்கோயில்,இந்தியா
23-டிச-201207:02:35 IST Report Abuse
மோனிஷா வேலைக்கு ஆட்களும் வெளி மாநிலத்திலிருந்து. அவர்களுக்கு உணவும் வெளி மாநிலத்திலிருந்து. தமிழ்நாடு முன்னேறிடும்.
Rate this:
0 members
1 members
11 members
Share this comment
Chenduraan - kayalpattanam,மாலத்தீவு
23-டிச-201214:06:22 IST Report Abuse
Chenduraanநம்ம எல்லாரும் சோம்பேறி ஆகிவிட்டோம் என்பதற்கு சான்று சோம்பேறி ஆவதற்கு மின்சாரம் ஒரு முக்கிய காரணம் முதல்வருக்கு இது தெரியவில்லை போலும் ...
Rate this:
0 members
0 members
3 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.