Advertisement
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்: இன்று எம்.ஜி.ஆர்., நினைவு தினம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2012,23:47 IST

மக்கள் திலகம்' என புகழப்பட்ட, மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., 1917 ஜன., 17 ல் பிறந்தார். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என, பன்முகம் கொண்டவர். மக்களின் மனங்களை கொள்ளை கொண்டவர்.

பெற்றோர், மருதூர் கோபால மேனன் - சத்தியபாமா. வேலை நிமித்தமாக இலங்கை கண்டியில் வசித்தனர். தந்தை மறைவிற்கு பின், தாய் மற்றும் சகோதரருடன், கும்பகோணத்திற்கு இடம் பெயர்ந்தார். வறுமையால் படிப்பை தொடர முடியாமல் தவித்த எம்.ஜி.ஆர்., சகோதரர் சக்ரபாணியோடு இணைந்து, நாடகங்களில் நடித்தார். அரிதாரக் கலையின் அரிச்சுவடியை அறிந்து கொண்ட எம்.ஜி.ஆர்., அந்த அனுபவத்தின் அடிப்படையில் திரைத்துறையில் கால்பதித்தார். அயராத உழைப்பு, கவர்ந்திழுக்கும் சிரிப்பு, கனிவான பார்வை, கருணை உள்ளம், உயர்ந்த கருத்துக்களை பிரதிபலிக்கும் பிடிவாதம் என பல பரிணாமங்களில் ஜொலித்தார். "பிஞ்சு மனதில் நஞ்சை கலக்கக் கூடாது' என்பதில் உறுதியாக இருந்த எம்.ஜி.ஆர்., சினிமாவில் குழந்தைகளுக்கு அறிவுரை கூறுவதையும், நல்வழிப்படுத்துவதையும் கொள்கையாக கொண்டிருந்தார்.

தேசிய விருது :



எம்.ஜி.ஆர்., நடித்த முதல் படம் "சதிலீலாவதி', 1936ல் வெளி வந்தது. இருப்பினும் 1947ல் வெளிவந்த "ராஜகுமாரி' தான், எம்.ஜி.ஆருக்கு புகழை ஈட்டித் தந்தது. 1971ல் வெளியான "ரிக்ஷாக்காரன்' படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகருக்கான "தேசிய விருது' பெற்றார். நாடோடி மன்னன், அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய படங்களை தயாரித்த எம்.ஜி.ஆர்., நாடோடி மன்னன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன், உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய படங்களை அவரே இயக்கி நடித்தார். தி.மு.க., உறுப்பினராகவும், பொருளாளராகவும் நீண்டகாலம் பணியாற்றினார். "என் இதயக்கனி' என, அண்ணாதுரையால் உச்சிமோந்து போற்றப்பட்டார். 1967ல் முதல்முறையாக எம்.எல்.ஏ., ஆனார். அண்ணாதுரை மறைவிற்கு பின், முதல்வரான கருணாநிதியுடன் ஏற்பட்ட "கருத்து வேறுபாடு' காரணமாக, தி.மு.க.,வில் இருந்து வெளியேறினார்,

தமிழக முதல்வர் :



1972ல் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை (அ.இ.அ.தி.மு.க., ) தொடங்கினார். 1977 சட்டசபை தேர்தலில், இவரது கட்சி வெற்றி பெற்று எம்.ஜி.ஆர்., முதல்வரானார். 1980 ல், 2 வது முறையாக முதல்வரானார். இதன்பின் 1984 தேர்தலில், நோய்வாய்ப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., பிரசாரத்தில் ஈடுபடவில்லை. அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்து கொண்டே, ஆண்டிபட்டி தொகுதியில் வென்றார்; முதல்வர் பதவியையும் தக்க வைத்தார். "படுத்துக் கொண்டே ஜெயித்தவர்' என, மக்கள் புகழாரம் சூட்டினர். பதவியில் இருந்த போதே, உடல்நலக்குறைவால், 1987 டிச., 24 ல் மறைந்தார்.

பாரத ரத்னா:



முதல்வராக இருந்த போது, பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு உள்ளிட்ட நல திட்டங்களை அறிமுகப்படுத்தினார். மறைவுக்குப் பின் இவருக்கு, 1988 ல், உயரிய விருதான "பாரத ரத்னா' வழங்கப்பட்டது.


தொடர்புடைய செய்திகள்:


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (105)
Ravi - Chennai,இந்தியா
24-டிச-201213:45:21 IST Report Abuse
Ravi திரு மரியா அவர்களே 5 முறை ஆட்சிகட்டிலில் சுகம் கண்டு தன் குடும்பத்திற்கு தேவைக்கும் மேலாக சொத்து சேர்த்த தி.மு.க வினர் இன்றுவரை அண்ணாவின் பேரையும் பெரியாரின் கொள்கையையும் மட்டுமே சொல்லி வாக்கு கேட்கிறார்கள். அப்படிஎன்றால் இந்த 5 ஆட்சி காலங்களின் அவர்கள் ஒரு ஆணியும்............... என்று உங்களுக்கு புரிகிறதா? அல்லது நீங்களும் அது புரியும் அளவுக்கு அறிவில்லாத பகுத்தறிவாதியா?
Rate this:
3 members
0 members
39 members
Share this comment
Matt pillai - nashville,tn ,யூ.எஸ்.ஏ
24-டிச-201213:37:49 IST Report Abuse
Matt pillai அம்மா சத்யபாமா ...இரு பிள்ளைகளையும் வீட்டில் அடைத்து கையில் திறவு கோலை வைத்து கொண்டு வீட்டு வேலைகளை செய்து வருவாராம். ..வீட்டில் இவர்களை அடைத்து வைக்காவிட்டால் பக்கத்துக்கு வீட்டில் சென்று பிச்சை எடுத்து விடுவார்களோ என்ற எண்ணத்தால் ...அந்த அம்மாவுக்கு பிறந்த குழநதைகள் ...உழைப்பால் உயர்ந்து ...பிறருக்கு உதவும்படியாகவே வளர்ந்திருக்கிறது. ...தி மு க வின் பொருளாளராக இருந்த எம் ஜி ஆர் ...கட்சிய தலமையிடம் கணக்கு கேட்டதால் தி மு க விலிருந்து பிரிக்கபட்டார். ...அண்ணா தி மு க ஆரம்பிக்க பட்டதால் ....தி மு க மீது வூழல் குற்றச்சாட்டுகள் சாட்டப்பட்டு தி மு கவின் வூழல்கள் அம்பலத்துக்கு வந்தன. .....நல்ல மனிதர் ...நல்ல நடிகர் ...நல்ல அரசியல்வாதி ...
Rate this:
6 members
2 members
35 members
Share this comment
G.J.Prabudass - Chennai,இந்தியா
24-டிச-201213:35:35 IST Report Abuse
G.J.Prabudass அள்போன்ஸ் அவர்கள் ஒரு தி மு க கட்சிக்காரரை போல் தான் அவர் விமர்சனம் உள்ளது, உங்களுக்கு வேற வேலையே இல்லையா, எப்போதும் இன்டர்நெட் முன்னாடி உட்கார்ந்து அதுவும் வாழும் தெய்வம் எம்.ஜி.ஆர் அவர்களை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும்.
Rate this:
14 members
0 members
28 members
Share this comment
Abdhul Rauf - Doha,கத்தார்
24-டிச-201213:34:10 IST Report Abuse
Abdhul Rauf This Nallavan (Jubail, KSA) and Mr. Alphonse both remind me as if they are Parthiban and Vadivelu in comedy. Ha...Ha...Ha....
Rate this:
1 members
0 members
17 members
Share this comment
Siva Kumar - Juba,சூடான்
24-டிச-201213:29:37 IST Report Abuse
Siva Kumar இதயக்கனி, பொன்மனச் செம்மல்...
Rate this:
4 members
0 members
19 members
Share this comment
Abdhul Rauf - Doha,கத்தார்
24-டிச-201213:27:39 IST Report Abuse
Abdhul Rauf ஒருவரது இறப்பிற்குப் பின்னரே அவரைப் பற்றிய சரியான கண்ணோட்டம் உலகோரால் முன்னிறுத்தப்படும் என்று சொல்வார்கள் "எம்.ஜி.ஆர். உள்ளும் புறமும்" பற்றி புத்தகம் உள்ளதாக திரு. அல்போன்ஸ் குறிப்பிடுகிறாரே, அவர் யாரை உயர்வாக இது வரை இங்கே குறிப்பிட்டு வந்தாரோ, யாருக்காக இங்கே வக்காலத்து வாங்கி வந்தாரோ அவரது மறைவிற்குப் பின்னர் உலகம் (பெரும்பான்மையோர்) அவரைப் போற்றுமா / தூற்றுமா? அவரே விளக்க வேண்டும்.
Rate this:
1 members
2 members
24 members
Share this comment
Shaikh Miyakkhan - jeddah,சவுதி அரேபியா
24-டிச-201213:20:55 IST Report Abuse
Shaikh Miyakkhan அவர் பெயரை சொல்லி கருப்பு எம்ஜிஆர், சிவப்பு எம்ஜிஆர் என்று கட்சி நடத்துபவர்கள் அவர் சுட்டி காட்டிய சுய நலமிகளுடன் கூடி குலாவி உறவாட துடிக்கிறது
Rate this:
2 members
0 members
21 members
Share this comment
Shaikh Miyakkhan - jeddah,சவுதி அரேபியா
24-டிச-201213:16:15 IST Report Abuse
Shaikh Miyakkhan சகோதரர் அமனுல்லாஹ் கருத்துக்கள் சூப்பரோ சூப்பர். அதுதானே உண்மை
Rate this:
1 members
0 members
13 members
Share this comment
Shaikh Miyakkhan - jeddah,சவுதி அரேபியா
24-டிச-201213:12:14 IST Report Abuse
Shaikh Miyakkhan வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்கள் மனதில் நிற்பவர் யார் ? தி கிரேட் எம் ஜி ஆர் என்று சொன்னால் அது மிகையாகாது . முன்று எழுத்தில் என் மூச்சி (பெயர்) இருக்கும் அது முடிந்த பின்னாலும் பேச்சி இருக்கும் . அன்றே சொன்னார் அந்த கோமான்.அவர் மறைந்த பிறகும் என் பெயர் பேச்சி இருக்கும். அவர் சும்மா வா சென்றார். மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவர் தம் மக்கள்(திருவாவூர் திருட்டு கும்பல் ) நலம் ஒன்றைத்தான் நினைவில் கொள்ளுவர் என்று அன்றே தமிழ் நாட்டின் தீயசக்தியை தமிழக மக்களுக்கு அடையாளத்தை காட்டிவிட்டு அல்லவா சென்றார். அவர் இருக்கும் வரை அந்த தீய சக்தி அதிகார பக்கமே வரமுடியாமல் செய்தார். மேலும் அவர் பெயரை சொன்னால் தான் ஒட்டு வாங்க முடியும் என்ற நிலைமையில் அவர் இறந்த பிறகு நடந்த தேர்தலில் நாற்பது கால நட்பு எம் ஜி ஆர் எனது உற்ற நண்பர் எனக்கு வாக்கு அளிக்கவும் என்று கேட்டவரும் ,சொன்னவரும் உண்டு. இல்லை என்று வருபவர்களுக்கு இல்லை என்று கூறாமல் கொடுத்து கொடுத்து சிவந்த கரத்திற்கு சொந்த காரர், கோடானா கோடி மக்களின் இதயத்தில் குடி கொண்ட கோமான் நம்பியவருக்கு நங்கூரம், மனித புனிதர், அவரை போற்றுவோர் போற்றட்டும் துற்றோவர் துற்றட்டும் அதானல் அவர் புகழ் கெடுவது இல்லை , அவர் தம் பூத உடல் அழிந்தலூம் அவர் புகழ் உடல் அழியாது.
Rate this:
2 members
0 members
38 members
Share this comment
E.BHARATHIRAJA - tampinise,சிங்கப்பூர்
24-டிச-201212:30:05 IST Report Abuse
E.BHARATHIRAJA ஜோசியக்காரன்... தனது சொந்த விலாசம் கூட தெரியாதவனின் கோமாளித்தனமான கருத்து. ஒரு மிகப்பெரிய மக்கள் சக்தியின் துணையோடு அனைவரையும் கவர்ந்த நல்ல உள்ளம் படைத்த மாமனிதர் எம்.ஜி.ஆர். ( பல வெளிநாட்டினர் இன்றுவரை நல்லவர் என்று வியந்து கூறுகின்றனர் )
Rate this:
4 members
0 members
25 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.