சென்னை: சம்பா பயிரை காப்பாற்ற இயலாத விவசாயிகளுக்கு நிவாரணத்தொகையினை தமிழக அரசு அறிவித்துள்ளது. . இது தொடர்பாக இன்று முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்தியில், கருகும் சம்பா பயிர்களை காப்பாற்ற முடியாத விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 13,692 நிவாரணமாக வழங்கப்படும். இதனால் விவசாயிகள் எந்தவித கவலையோ, அச்சமோ அடைய தேவையில்லை. மேலும் விவசாயிகள் விபரீத முடிவினை எடுக்க வேண்டாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.