பாட்னா : ""ஈவ்-டீசிங் தொந்தரவுகளில் இருந்து தப்பிக்க, தற்காப்பு கலைகளை, பெண்கள் கற்று கொள்ள வேண்டும்,'' என, பீகார் முதல்வர், நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.பாட்னாவில், பள்ளி மாணவர்களுக்கான, டேக்வாண்டோ தற்காப்பு கலை, தேசிய போட்டியை துவக்கி வைத்த முதல்வர், நிதிஷ்குமார் கூறியதாவது:ஜுடோ, கராத்தே, டேக்வாண்டோ போன்ற தற்காப்பு, சண்டை பயிற்சிகளை அனைவரும் கற்று கொள்ள வேண்டும். ஈவ்-டீசிங் தொந்தரவுகளில் இருந்து தப்பிக்க, பெண்கள் கண்டிப்பாக, இந்த பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.இதன் மூலம், நல்ல உடல் நலம், உஷார் நிலை, சுயபாதுகாப்பு போன்றவை பெண்களுக்கு கிடைக்கும். அதனால் தான், சில ஆண்டுகளுக்கு முன், பள்ளிகளில், தற்காப்பு கலை பயிற்சி வகுப்புகளை என் அரசு துவக்கியது.இவ்வாறு, நிதிஷ்குமார் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
உணமைதான். இவர் கொஞ்சம் நல்ல முதலமைச்சராக இருக்கிறார். மக்கள் அடுத்த முறையும் இவரை தேர்ந்தெடுக்க வேண்டும். சார் ஆனா மோடியோட முறைத்துக்கொண்டு இருக்காதீர்கள். மக்கள் அவருடைய செயல் முறையை பாராட்டி தான் திரும்ப திரும்ப முதல்வர் ஆக்குகிறார்கள். நீங்கள் இருவரும் இணைந்து ஊழல் காங்கிரசை மண்ணை கவ்வ செய்யுங்கள்.
ஆக மொத்தத்துல பாதுகாப்பு கொடுக்க வக்கில்லைன்னு தெளிவா தெரியுது. தைரியமான அல்லது வீரப்பெண்மணிகள் கூட திடீர் பாலியல் தொந்தரவுகள் உண்டாகும்போது (எப்படி நாம் தெளிவாக சாலையில் செல்லும்போதும் விபத்து ஏற்படுகின்றதோ) அவர்கள் நிலைகுலைவார்கள் அப்போது எப்படி தற்காப்பு கலையை உபயோகப்படுத்துவார்கள். பெரியோர்களை விட சிறியோர்கள் அதிகம் பாதிக்கப்படுவதை எப்படி தடுப்பீர்கள் ? சரி விடுங்க சிலர் கிழவிகளை கூட விட்டு வைப்பதிலையே ? உங்களோட மாநிலத்துலேயே பாலியல் புகாரில் சிக்கிய நபர்களை அமைச்சராக வைத்திருக்கீர்களே ?

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.