புதுடில்லி:டில்லியில், மருத்துவ மாணவி, ஓடும் பஸ்சில், ஆறு பேரால் கற்பழிக்கப்பட்டதை அடுத்து, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையிலும், பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் ஏராளமாக நடந்த வண்ணமாகவே உள்ளன.
நாடு முழுவதும், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், சமீப காலமாக அதிகரித்துள்ளதாக, புள்ளிவிவரம் கூறுகிறது. நேற்று ஒரே நாளில், ஏராளமான பாலியல் குற்றங்கள், நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டு உள்ளன.மத்திய பிரதேசத்தில், குழந்தைக்கு சிகிச்சை பெறுவதற்காக, மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து சென்ற இளம்பெண், கழிப்பறைக்கு சென்ற போது, மருத்துவமனை ஊழியர்கள் மூன்று பேரால் கற்பழிக்கப்பட்டார். டில்லி அருகே உள்ள பைசாபாத் நகரில், காரில் கடத்தப்பட்ட தலித் சமுதாயத்தை சேர்ந்த, மைனர் பெண், டில்லி கொண்டு செல்லப்பட்டு, நான்கு பேரால் கற்பழிக்கப்பட்டு உள்ளார். அந்த சிறுமியை, சாலையோரம் வீசி மறைந்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
கர்நாடகா மாநிலத்தின் குல்பர்கா மாவட்டத்தில், வயலில் வேலை செய்து கொண்டிருந்த, 11 வயது சிறுமியை, மர்ம நபர் கற்பழித்துள்ளார். அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ஜம்மு நகரில், வீட்டில் இருந்த, 18 வயது பெண்ணை, பேருந்து ஓட்டுனர் ஒருவரும், அவரின் நண்பரும் தூக்கி சென்று, கற்பழித்துள்ளனர். மும்பையில், பாந்த்ரா கல்லூரி ஒன்றில் படித்து வந்த, 19 வயது மாணவியை, அவருடன் படிக்கும் மாணவர் ஒருவர், நான்கு நாட்களுக்கு முன், கத்தியால் குத்தியதில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண், தீவிர சிகிச்சை அளித்தும், பலனளிக்காமல் நேற்று இறந்தார். காதலிக்க மறுத்த அந்த மாணவியை, பல இடங்களில் குத்தி கொன்ற மாணவன், சம்பவ நாளிலேயே தற்கொலை செய்து கொண்டான்.
நேற்று மட்டுமல்ல, சமீப காலமாகவே, நாடு முழுவதும் இதுபோன்ற, பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான கற்பழிப்பு குற்றங்கள் அதிகரித்துள்ளன. இத்தகைய குற்றங்களுக்கு, கடுமையான தண்டனை விதிக்கப்படாத வரை, பெண்கள், குழந்தைகள், இத்தகைய கொடுமைகளில் இருந்து தப்பிக்க முடியாது என, பொது நல விரும்பிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
எப்படிங்க இப்படி எல்லாம் யோசிகிறீங்க... இந்தியா'ல இப்போவே சிவப்பு விளக்கு இல்லாத மாநிலமோ மாவட்டமோ இல்ல... அப்படி இருந்தும் ஏன் பாலியல் வன்முறைகள் நடக்குது? நீங்க சொல்றபடி ஒரு படி மேல போய் பாலியல் தொழிலை அங்கீகரிச்சுட்டோம்னே வெச்சுப்போம்... அப்போ மட்டும் ரோட்ல இருட்டுல ஒரு குடும்பப் பொண்ணு தனியா போயிட்டு இருந்தா எவனும் கையைப் புடிச்சு இழுக்கக மாட்டான்றது என்ன நிச்சயம்? யோசிச்சு கருத்து சொல்லுங்க நண்பர்களே......
ஒரு காலத்தில் பாலியல் தொழில் அங்கீகரிக்கப்பட்டு தான் இருந்தது...ஆனால் பணத்துக்காக சொந்த மகளையோ தமக்கையைகோ பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் கும்பல் தான் பெருகும்...பல பெண்கள் விருப்பமே இல்லாமல் அந்த தொழிலில் விடப்படுவர். அந்த குற்றங்களில் ஈடுபடுத்துவோர் எந்த வித தண்டனையும் இல்லாமல் தப்பிக்கவே உதவும்..
ஒரு பெண்ணுக்கு தாலிகட்டி விட்டு வாய்ப்பு கிடைத்தால் யார் கூட வேணுமானாலும் படுக்க கூடிய கயவர்களை திருத்த வேண்டும், ஒடுக்க வேண்டும் ....அதற்காக ஒழுங்கா இருப்பவனை (ஒருவனாக இருந்தாலும்) மாற்ற நெனைக்க கூடாது.....
பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அனைத்து வேலைகள் செய்யுமிடம் மற்றும் பிரிவுகளிலும் நடக்கின்றது. மக்களை காக்கவேண்டிய காவலர்களே பெண்களை மானபங்க படுத்துவதுசமீபத்தில் தேனிமாவட்ட காவல் நிலையத்தில் நடந்தது. அதிகார வர்க்கம் முதல் சாதாரண நபர் வரை பெண்களை இழிவு படுத்துவது தொடர்கிறது. ( படித்தவன் முதல் படிக்காத முட்டாள் வரை ) இது போன்ற பெண்களுக்கு எதிரான வன் கொடுமையை தவிர்க்க மரணதண்டனை மட்டும் தீர்வாகாது. சட்டத்தை பார்த்து மக்கள் பயப்பட வேண்டும். தீர்வு 1. அந்த காம கொடூரன் குடும்பத்தில் இனி யாரும் அரசு வேலையில் சேர தடை விதிக்கலாம். 2. வங்கியில் பண பரிவர்த்தனையை/சொத்துக்களை முடக்கலாம் 3. குறைந்த பட்சம் ஆறுமாதம் தனி இருட்டு அறையிலடைக்க வேண்டும். 4. இந்தியாவை விட்டு நாடு கடத்த வேண்டும்.
வரும் திரைப்படங்கள் எப்படியிருக்கின்றன? வீட்டுக்குள் புகும் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் எப்படி இருக்கின்றன? இரவு விடுதிகள் ஏனிந்த நாட்டில்? களைப்பாறவா? விவசாயி உழைக்கவில்லையா? ஆனால் நாகரிகம் பேசும் பதறுகள் மட்டும் தான் உழைத்து களைப்பாகி இரவு விடுதிகளுக்கு போகிறார்களே எங்கு பார்த்தாலும் சாராயக் கடைகள். எல்லாவற்றை அனுமதிப்பது யார்? அவற்றின் பின் விளைவுகளில் பதறும் நாம், இந்த காரணங்களை விட்டொழித்து வாழ முயலுகிறோமா?????
இப்பொழுதான் பெண்கள் விழித்துள்ளார்கள்.. இதற்க்கு முன் இதைவிட அதிகமாக நடந்திருக்கலாம். ஆனால் வெளியில் சொல்ல பயந்த காலம் அது. இப்போழுதுமே டெல்லி சம்பவம் நடந்திருக்கவில்லை என்றால் இவ்வளவு பதிவுகள் நடந்திருக்க வாய்ப்பில்லை. தண்டனைகள் (தூக்கு) கடுமையாக்க பட்டால் ஒழிய பாலியல் குற்றங்களை குறைப்பது கடினம். தூக்கு, மரணம் என்பது நல்ல தண்டனையாக இருக்க முடியாது. இருப்பினும் அடுத்த தவறினை தடுக்கத்தானே ஒரு எச்சரிக்கை விடுதல் ஆகும். எனவே தூக்கு தண்டனையை அமல்படுத்த வேண்டும். மீடியா ( தணிக்கை செய்யாத ), உலகமயமாக்கலும் இதற்கு ஒரு தூண்டுகோல் .. பெண்களும் ( பொது இடங்களுக்கு செல்லும் பொழுது )தங்கள் உடைகளில் கவனம் கொள்வது அவசியம்.. ஞாயிறு தினமலரில் திரு ராமகோபால் அவர்களின் கருத்துதான் ஞாபகம் வருகின்றது ...
ஆண்களின் சார்பாக நானே கருத்து எழுதுகிறேன்.. தவறு அனைத்தும் அந்தந்த பெண்களின் மீது தான்.. முதல் கேஸ் ல் மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துக்கொண்டு போனோமா வந்தோமா என்று இல்லாமல் ஏன் அந்த பெண் கழிவறைக்கு செல்ல வேண்டும்?? பொது இடத்தில கழிவறை பயன்படுத்துவது தான் நமது கலாச்சாரமா? அப்படி சென்றதன் மூலம் அவள் அந்த மூன்று ஆண்களையும் கற்பழிக்க தூண்டியிருக்கிறாள்.. அப்புறம் ரெண்டாவது கேஸ் ல் காரில் கடத்தப்பட்ட பெண் ஏன் கார் வந்த பாதையில் வந்தாள்? இதிலும் தவறு அவள் மீது தான்.. அப்புறம் மூன்றாவது கேஸ் 11 வயது சிறுமி ஏன் வயல் வேலைக்கு செல்ல வேண்டும்.. அவளை வயல் வேலைக்கு அனுப்பியதற்கு அவள் அப்பனை கொல்ல வேண்டும்.. அப்புறம் நான்காவது காஷ்மீர் கேஸ் பத்தி நாம் பேசவே கூடாது. சர்ச்சை ஓயட்டும்.. பிறகு பேசலாம்.. அப்புறம் கடைசி கேஸ் காதல் விவகாரம். அந்த பெண் தான் அந்த பையனை காதலிக்க தூண்டிவிட்டு காசை கரைத்து விட்டு கழட்டி விட்டு இருப்பாள்.. இதிலும் தவறு அவள் மீது தான்.. தங்கமான ஆண்கள் மீது எந்த தவறும் இல்லை.. ~ நேற்று அமைச்சர் கருத்துக்கு கருத்து சொன்ன அனைத்து ஆண்களுக்கும் இது சமர்ப்பணம்..

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.