புதுடில்லி: பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக புது டில்லியில் பல்வேறு அமைப்புகள் ஜனாதிபதி மாளிகை, அரசியல் கட்சி தலைவர்கள் இல்லங்களை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தி வந்தனர். இதனையடுத்து புதுடில்லி போலீசார் தலைநகரில் உள்ள ஒன்பது மெட்ரோ ரயில் நிலையங்களை மூட உத்தரவிட்டனர். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக மூடப்பட்டு இருந்த மெட்ரோ ரயில் நிலையங்களை மீண்டும் திறக்க போலீசார் உத்தரவு பிறப்பித்தனர். அதே சமயம் ராஜிவ் சவுக் பகுதி மெட்ரோ ரயில் நிலையத்திற்கு மட்டும் தடை உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுகிழமை திறக்கப்பட்ட ராஜிவ் சவுக் மெட்ரோ ரயில்நிலையம் மீண்டும், திங்கள், செவ்வாய் ஆகிய இரு தினங்களில் மீண்டும் மூடப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.