நாகை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 27 பேர் விடுதலை செய்யப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரது படகில் 7 மீனவர்களும், நம்பியார்நகரைச் சேர்ந்த சத்யன் என்பவரது படகில் 7 மீனவர்களும், காரைக்காலைச் சேர்ந்த குணசேகரன் மற்றும் நடராஜன் ஆகியோருக்குச் சொந்தமான படகுகளில் 13 மீனவர்கள் என 27 பேர், கடந்த 23ம் தேதி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் திரிகோணமலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு இன்று விடுதலை செய்யப்பட்டனர். இதையடுத்து இன்று மாலை 5 மணிக்கு அவர்கள் இலங்கையிலிருந்து கிளம்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.