Advertisement
சங்கரன்கோவில் போல் லோக்சபா தேர்தலிலும் சவால் விடுவாரா? ஜெ.,க்கு தே.மு.தி.க.,கொறடா கேள்வி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 07,2013,16:26 IST
மாற்றம் செய்த நாள் : ஜனவரி 07,2013,16:34 IST

ராஜபாளையம் : ""சங்கரன்கோவில் இடைதேர்தல் போல், லோக்சபா தேர்தலிலும் முதல்வர் ஜெயலலிதா சவால் விடுவாரா ,''என, தே.மு.தி.க.,எதிர்கட்சி கொறடா சந்திரகுமார் கேள்வி எழுப்பினார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், மின்தடையை கண்டித்து நடந்த கூட்டத்தில், அவர் பேசியதாவது: சட்டசபை தேர்தலில் 40 இடத்தில் தே.மு.தி.க., போட்டியிட்டது. ஒரு தொகுதியில் கூட, தே.மு.தி.க., விற்கு ஓட்டு போடுங்கள் என, ஜெ., பேசவில்லை. அதேவேளையில், ஜெ., தொகுதியான ஸ்ரீரங்கத்தில், அவருக்கு விஜயகாந்த் ஓட்டு கேட்டார். மின்தடை பிரச்னையை மூன்று மாதத்தில் தீர்ப்போம் என, தேர்தலுக்கு முன் கூறினார், பின் ஆண்டு முடிவில் என்றார், தற்போது 2013 ஜூன் என்கிறார். மின்தடையை நீக்க ஜெ., திட்டமிடவே இல்லை. எல்லாமே கருணாநிதியின் திட்டம் தான். தி.மு.க., வில் குடும்ப ஆட்சி என்றால், அ.தி.மு.க., வில் ஒரு கூட்டமே ஆள்கிறது. சங்கரன்கோவில் இடைதேர்தலில் சவால் விட்ட முதல்வர், வரும் லோக்சபா தேர்தலிலும் ஜெயித்துகாட்டுகிறேன் என, சவால் விட முடியுமா ? தூத்துக்குடியில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரத்தால் கொல்லப்பட்டார். பஸ் பாஸ் இருந்தும், பஸ் வசதி இல்லாததால், பள்ளிக்கு நடந்து சென்றவர் கொலையானார். இதற்கு யார் காரணம் . பாதுகாப்பு பணியில் இருந்த எஸ்.ஐ., கொலை. திருப்பூரில் 14 கோடி மதிப்புள்ள நகை திருட்டு நடந்து உள்ளது. நிர்வாக திறமையின்மையால்,ஜாதி கலவரம் நடக்கிறது. லோக்சபாவில் கேள்விக்கு பயந்து, வெளிநாட்டுக்கு சென்றவர் அமைச்சர் அழகிரி.இவர் ஒரு வெட்கம் கெட்டவர். மக்களை ஏமாற்றும் ஆட்சிதான் தற்போது தமிழகத்தில் நடக்கிறது, என்றார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (3)
K.Sugavanam - Salem,tamilnadu,இந்தியா
08-ஜன-201309:55:36 IST Report Abuse
K.Sugavanam அடுத்த தங்க பேனா யாருக்கு?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Arul - Chennai,இந்தியா
08-ஜன-201306:08:16 IST Report Abuse
Arul காமிடி பிஸ்... இவங்க தலைவரு ஒரு கட்டிங் சேர்த்து உத்திட்டருனு நினைக்கின்றேன் .. ஏறகறதுக்குள் தலைவர்கிட்ட இன்னொரு கட்டிங் ஆடர்பன்னு தலைவரே முடிச்காரபோரர்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Saravanan St - Tirupur,இந்தியா
08-ஜன-201301:05:53 IST Report Abuse
Saravanan St குட் கொஸ்டின் பட் , நீ இங்கேயா இருப்பியா இல்ல ஆ தி மு க வுக்கு மாரிடுவியா ??
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.