Kudankulam: Tamil Nadu gets 700 MW | கூடங்குளம் : தமிழகத்திற்கு 700 மெகாவாட் மின்சாரம் | Dinamalar

பொது செய்தி

இந்தியா

கூடங்குளம் : தமிழகத்திற்கு 700 மெகாவாட் மின்சாரம்

Updated : ஜன 09, 2013 | Added : ஜன 08, 2013 | கருத்துகள் (78)
Advertisement
Kudankulam: Tamil Nadu gets 700 MW

கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து, தமிழகத்திற்கு, 700 மெகாவாட் மின்சாரம் ஒதுக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பொங்கலை ஒட்டி, அணு மின் நிலையத்தில், மின் உற்பத்தி துவக்கும்' என, மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர், நேற்று தெரிவித்தார்.

நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள, அணுமின் நிலையம், மூன்றாண்டுகளுக்கு முன்னரே, மின் உற்பத்தியை துவக்கியிருக்க வேண்டும். ஆனால், அணுமின் நிலையத்திற்கு எதிராக நடந்த பல்வேறு போராட்டங்கள் காரணமாக, பணிகள் பாதிக்கப்பட்டு, விரைவில் மின் உற்பத்தி துவங்கவுள்ளது. இந்நிலையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தில், எவ்வளவு மின்சாரம் உற்பத்தியாக உள்ளது; அந்த மின் உற்பத்தியில், தமிழகத்திற்கு எவ்வளவு மின்சாரம் வழங்கப்பட உள்ளது என்பது குறித்து, மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் பழுதடைந்த வால்வுகளை சரிப்படுத்தும் பணியில், இந்திய - ரஷ்ய விஞ்ஞானிகள், தற்போது ஈடுபட்டுள்ளனர். இன்னும் ஓரிரு தினங்களில், வால்வுகள் சரி செய்யப்பட்டு, மும்பையில் உள்ள அணுசக்தி கட்டுப்பாட்டு ஆணையத்தின் ஒப்புதல் பெறப்படும். ஒப்புதல் கிடைத்தவுடன், சோதனை ஓட்டம், ஒருவார காலம் நடைபெறும். அணு மின் நிலையத்திலிருந்து, வரும், 14 அல்லது 15ம் தேதிகளில், மின் உற்பத்தி துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அணு மின் நிலையத்தில், முதல் கட்டமாக உற்பத்தி செய்யப்பட உள்ள, 1,000 மெகாவாட் மின்சாரத்தில், தமிழகத்திற்கு, 450 மெகா வாட்; கர்நாடகத்திற்கு, 215 மெகாவாட்; கேரளாவிற்கு, 135 மெகாவாட் ஒதுக்கீடு செய்ய, முதலில் முடிவு செய்யப்பட்டிருந்தது.

தமிழகத்தில் நிலவும் கடும் மின் பற்றாக்குறை மற்றும் மாநில முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையான, இந்த அணுமின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து மின்சாரமும் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, மத்திய அரசு, 700 மெகாவாட்டை தமிழகத்திற்கு ஒதுக்குவது என, முடிவு செய்துள்ளது.இவ்வாறு உயர் அதிகாரி கூறினார். -நமது டில்லி நிருபர்-

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (78)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
neelakantan s - mumbai,இந்தியா
13-ஜன-201300:20:20 IST Report Abuse
neelakantan s பொங்கலை ஒட்டி மின்சார உற்பத்தி தொடங்கும் என்று ஒரு அதிகாரி தான் கூறி இருக்கிறார் சம்பந்த பட்ட மந்திரி கூறவில்லை முதலில் உற்பத்தி நல்ல முறையில் தொடங்க அந்த ஆண்டவனை எல்லோரும் வேண்டிக்கொள்வோம் பிறகு நமக்கு கிடைக்க போகும் பங்கை பற்றி விவாதம் நடத்தலாம்
Rate this:
Share this comment
Cancel
Sundeli Siththar - Hyderabad,இந்தியா
09-ஜன-201300:38:41 IST Report Abuse
Sundeli Siththar தங்கராஜா அவர்களே... இந்தியாவில் எனக்கு தெரிந்தவரை 6 இடங்களில் அணு உலைகள் உள்ளன. தாராபூர் உலை (1961) ராஜஸ்தான் (1973) கல்பாக்கம் (1984 - 2 உலைகள்) , உத்திரப் பிரதேசம் (1991), குஜராத் (1993), கர்நாடகம் (2000). நீங்கள் சொன்னதுபோல எங்காவது ஒரு சம்பவம் நடந்துள்ளதா... இத்தனைக்கும் கல்பாக்கம் அணுமின்நிலையம் சுனாமியால் பாதிக்கப் படவில்லை. கல்பாக்கம் அருகே மீன்வளம் பாதிக்கப்படவில்லையே... கூடங்குளத்தில் 625 மெகா வாட் மின்சாரம் கிடைக்கிறது என்றே வைத்துக் கொள்வோமே.. இன்று நமது தேவையில் ஒரு பகுதி கிடைக்கிறதே. அதை வரவேற்போம்.
Rate this:
Share this comment
Cancel
Prabu.KTK - Coimbatore,இந்தியா
08-ஜன-201319:21:11 IST Report Abuse
Prabu.KTK 1000 மெகா வாட் முழுவதும் தமிழ் நாட்டிற்கே தர வேண்டும் கர்டனாடகா, கேரளா விற்கு ஆப்பு அடிக்க வேண்டும். அப்போது தான் தண்ணீர் தருவார்கள். வழிக்கு வருவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
rajabruno - chennai,இந்தியா
08-ஜன-201317:45:45 IST Report Abuse
rajabruno காங்கிரஸ் தமிழ்நாட்டு மக்களிடம் சேர கூடா( ங்) குளம்தான்
Rate this:
Share this comment
Cancel
Peria Samy - chennai,இந்தியா
08-ஜன-201315:58:14 IST Report Abuse
Peria Samy கூடங்குளம் அணுமின்நிலையம் மின் உற்பத்தியை தொடங்குவதற்குள் எதனை பிரச்சினைகள்,எத்தனை போராட்டங்கள், எத்தனை விஷமப் பிரசாரங்கள் அத்தனை தடைகளையும் வெற்றிகரமாகச் சமாளித்து சட்டம் ஒழுங்கையும் பராமரித்தது தமிழக அரசு.எனவே தமிழகத்தில் மின்பற்றாக்குறை சீராகும் வரை உற்பத்தியாகும் அனைத்து மின்சாரத்தையும் தமிழகத்துக்கே வழங்க வேண்டும்.நிலைமை சீரடைந்தபின் பிற மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக்கலாம்.
Rate this:
Share this comment
babu - tiruchi,இந்தியா
09-ஜன-201301:07:23 IST Report Abuse
babuதமிழ் நாட்டுக்கு மின்சாரம் போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா...
Rate this:
Share this comment
Cancel
ram prasad - Sri rangam,இந்தியா
08-ஜன-201315:13:20 IST Report Abuse
ram prasad இது மத்திய அரசின் திட்டம் . 700 மெகா வாட் வழங்குவதற்கு மத்திய அரசுக்கு நன்றி ஆமாம் இந்த மின்சாரம் கிடைத்தால் சென்னைக்கு முழுதுமாக மின் வெட்டு நீக்கப்படும் இதர பகுதிகளுக்கு அதே நிலைமை நீடிக்குமோ ?
Rate this:
Share this comment
Nallavan - ERODE,இந்தியா
13-ஜன-201300:46:02 IST Report Abuse
Nallavanஇந்த 700 Mega Watt மின்சாரமும் தமிழ்நாட்டிற்க்கா அல்லது சென்னைக்கு மட்டுமா?. ஷாமி எனக்கு உண்ம தெரிஞ்சாகனும்....
Rate this:
Share this comment
Cancel
v j antony - coimbatore,இந்தியா
08-ஜன-201314:11:04 IST Report Abuse
v j antony மத்திய மாநில அரசுகள் இது போல இன்னும் புதிய மின் திட்டங்கள் நிறைவேற்ற முன் வரவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
மறத் தமிழன் - Madurai,இந்தியா
08-ஜன-201314:05:09 IST Report Abuse
மறத் தமிழன் யானை பசிக்கு சோள பொரி....
Rate this:
Share this comment
Cancel
Kuwait Tamilan - Salmiya,குவைத்
08-ஜன-201312:38:08 IST Report Abuse
Kuwait Tamilan இது மத்திய அரசுக்கு கிடைத்த வெற்றி. ஆனால் தமிழ் நாட்டு மக்கள் பயன் அடைய போகிறார்கள். எப்படியோ மின்சாரம் கிடைத்தால் சரிதான்..
Rate this:
Share this comment
S T Rajan - Ettayapuram ,இந்தியா
08-ஜன-201317:14:08 IST Report Abuse
S  T Rajanகர்நாடக அரசு தண்ணி தரமட்டேன்குறான்.....நாம எதுக்கு மின்சாரம் தரனும். இதுல வெற்றி என்ன ? ...
Rate this:
Share this comment
Cancel
Thangaraj - ,இந்தியா
08-ஜன-201312:33:47 IST Report Abuse
Thangaraj இப்படி உள்ளூர் மக்களின் ஆதரவு கொஞ்சம் கூட இல்லாமல், இந்த பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் வகையில், 11 மாத காலத்திற்கு மேலாக 144 தடை உத்தரவு பிறபித்து, 5000 போலீஸ் துணையோடு, துப்பாக்கி முனையில், இவ்வலவு பெரிய திட்டத்தை எத்தனை நாள் தான் ஒட்ட முடியும்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை