Jaya dreams to as PM : Karuna | பிரதமராகும் கனவு முதல்வரை ஆட்டிப் படைக்கிறது: கருணாநிதி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பிரதமராகும் கனவு முதல்வரை ஆட்டிப் படைக்கிறது: கருணாநிதி

Updated : ஜன 09, 2013 | Added : ஜன 08, 2013 | கருத்துகள் (218)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
"லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும், வெற்றி பெற வேண்டும்; நாட்டின் பிரதமராக வேண்டும் என்ற கனவு, முதல்வர் ஜெயலலிதாவை, அனைத்து வகைகளிலும் ஆட்டிப் படைக்கிறது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

சென்னை: "லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும், வெற்றி பெற வேண்டும்; நாட்டின் பிரதமராக வேண்டும் என்ற கனவு, முதல்வர் ஜெயலலிதாவை, அனைத்து வகைகளிலும் ஆட்டிப் படைக்கிறது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.


அவரது அறிக்கை:

மின் பற்றாக்குறைக்கு தி.மு.க., தான் காரணம் என்கிறார் ஜெயலலிதா. மக்கள் பிரச்னைகளைப் புரிந்து கொள்ளவோ, அவற்றை உரிய முறையில், தீர்க்கவோ இயலாதவர்கள், தாங்கள் தப்பித்துக் கொள்ள, இப்படித் தான் மற்றவர்கள் மீது, பழி சுமத்த முயலுவர். அரசின் பட்ஜெட்டில், வெளி மாநிலங்களில் கிடைக்கும், மின்சாரத்தை, நமது மாநிலத்திற்கு கொண்டு வருவதற்கான, மின் வழித்தட வசதிகளில் நெருக்கடி உள்ளதால், மின்சாரத்தை வெளியிலிருந்து கொண்டு வருவதற்கும் வழியில்லை என, அவர்களே ஒப்புக் கொண்டுள்ளனர்.

இதை தெரிவித்து விட்டு, அவர்களே குஜராத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டதும், மத்திய அரசு டில்லியிலிருந்து மின்சாரத்தை வழங்கவில்லை என்பதற்காக, மத்திய அரசு மீது பழி போடுவதும், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுப்பதும் முறைதானா?


அல்லோகலப் படுத்துகிறது :

தான் தப்பித்துக் கொள்ள, தி.மு.க., மீது பழி சுமத்துகிறார் என, தமிழக மக்களுக்கு தெரியும். லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும், வெற்றி பெற வேண்டும்; நாட்டின் பிரதமராக வேண்டும் என்ற கனவு, ஜெயலலிதாவை அனைத்து வகைகளிலும் ஆட்டிப் படைத்து, அல்லோகலப் படுத்துகிறது.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (218)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vaaimai - Appleton, WI ,யூ.எஸ்.ஏ
09-ஜன-201302:44:47 IST Report Abuse
vaaimai இந்தியாவின் ஜனநாயகத்தில் அரசியலில் உள்ளவர்களைப் பொறுத்தவரையில், தகுதிகளுக்கும் பதவிகளுக்கும் உள்ள சம்பந்தம் பின்அறுபதுகளிலேயே போயே போய்விட்டது.
Rate this:
Share this comment
Cancel
S.Govindarajan. - chennai ,இந்தியா
08-ஜன-201319:15:54 IST Report Abuse
S.Govindarajan. நரசிம்ம ராவ் ,குஜ்ரால்,தேவகௌடா ,இப்போதுள்ள மன்மோகன் என்று பலர் பிரதமராகப் பதவி வகித்தபோது ஜெயாவிற்கு தகுதி உள்ளதா என்பதுதான் கேள்வி ? உண்டு என்பதுதான். கலைஞரும் அவரது குடும்பமும் தமிழ்நாட்டை எப்போதும் ஏகபோகமாய் ஆள நினைக்கும்போது பழமொழி தெரிந்த ஜெயா ஆசைப்பட்டால் அதில் தவறேதும் இல்லை. இதற்குக்கூட தானைத் தலைவரிடம் அனுமதி பெறவேண்டுமா என்ன?
Rate this:
Share this comment
Cancel
Ramesh Rajendiran - CHENNAI,இந்தியா
08-ஜன-201319:05:39 IST Report Abuse
Ramesh Rajendiran அப்படி ஜெயலலிதா சொன்னாரா???
Rate this:
Share this comment
Cancel
Kuppusamy - Erode,இந்தியா
08-ஜன-201318:51:05 IST Report Abuse
Kuppusamy king of the 21st century.. 155 members commented exclusively for this news. Great achievement Keep going......
Rate this:
Share this comment
Cancel
S K RAM - Chennai,இந்தியா
08-ஜன-201318:25:23 IST Report Abuse
S K RAM இங்கிலீஷ் பேச தெரியாத மத்திய அமைச்சர் அழகிரி விட எல்லா வித திறமையும் ஆளும் வல்லமையும் இருக்கும் அம்மா பிரதம மந்திரி ஆகருதுல ஒன்னும் தப்பே இல்ல.. இந்த மஞ்ச தொண்டு கருத்து சொல்லறேன் என்கிற பேருல உளறி கொட்டறது.. வயசு ஆகியும் வாய் செவடல் குறையல...
Rate this:
Share this comment
Cancel
raj tbm - telok blangah,சிங்கப்பூர்
08-ஜன-201317:49:33 IST Report Abuse
raj tbm இந்திய பிரஜை பிரதமர் கனவு காண்பது தவறில்லை. தாங்கள் இதற்குமுன் பிரதமராகவேண்டும், அல்லது தமிழனை பிரதமராக்கவேண்டும்,என்று முயன்டிருக்கலாமே. எத்தனை முறை முதல்வராக்கினோம் முயலாவிடினும் முயலுபவர்களை தடுக்கவேண்டாம். தமிழ்நாடு சார்பாக ஒருவர் பிரதமர் ஆக தங்களும் உதவலாமே. எப்போதுதான் நம் தமிழ்நாடு சார்பாக ஒருவர் பிரதமராவது உங்கள் வாழ்நாளில் அதைக்கானவேன்டாமா.
Rate this:
Share this comment
Cancel
I Love India - Bangalore,இந்தியா
08-ஜன-201317:21:06 IST Report Abuse
I Love India கருணாநிதி தலைபில் எந்த கட்டுரை வந்தாலும் 90% சதவிதம் எதிர்ப்பை பார்க்கும் பொழுது (அந்த 90% முழுவதும் ஜெ ஜெ ஆதரவு அல்ல) மக்கள் இன்னும் தி மு க மேல் கொலை வெறி உடன் உள்ளனர் என்றே தெரிகிறது. கருணாநிதி இன்னமும் முன் செய்த தவறை மறைக்க இது போல் உளருவதல் மக்களிடேயே அனுதாபத்திற்கு பதில், வெறுப்பு இன்னும் 05/2011 இல் எப்படி இருந்ததோ, அதே அளவு இருபத்தற்கு உதவியாக உள்ளது. மேலும் 10% கருத்து கூறுகிறவர்கள் கருணாநிதி மக்கள் பணியாற்றினார் என்று சொல்கிறார்கள், இலவசம், tasmac தவிர்த்து கடந்த 10 ஆண்டுகளில் அவர் என்ன பணி ஆட்டினார் என்று நான்கைந்து தொலைநோக்கு பணிகளை பட்டியல் இட்டால் நன்றாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
P.Lakshminarayanan - chennai,இந்தியா
08-ஜன-201317:06:50 IST Report Abuse
P.Lakshminarayanan ஜெயலலிதாவுக்கு கனவு இருக்கு.. இல்ல... அது வேற கதை.. ஒரு வேளை, ஆகிட்டா என்னாகும்னு உங்க தூக்கம் போய், கனவே இல்லன்னு எங்களுக்கு தெரியும்... தலைவரே...
Rate this:
Share this comment
Cancel
vayalum vazhvum-saravanakumar - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
08-ஜன-201316:54:37 IST Report Abuse
vayalum vazhvum-saravanakumar சரி இந்தியாவுல பிறந்த ஒருத்தர் பிரதமர் ஆக கூடாது, இத்தாலி நாட்டுல பிறந்தவங்க பிரதமர் ஆகலாமா, கரண்ட் பிரச்சனை, தண்ணி பிரச்னைக்கு நீங்களும் உங்க MP க்களும் என்ன செய்து இருக்காங்க, அதான் எங்களுக்கே தெரியுமே, காங்கிரஸ்காரன் பழி வாங்கறான் என்றால் நியாயம் இருக்கு அவனுக்கு தமிழ் நாட்டுல இனி எப்பவுமா வர முடியாது அதுக்கு பழி வாங்கறான், நீங்க செய்யறது எந்த விதத்தில் நியாயம், இருக்கட்டும் காங்கிரஸ் நிலைமையை போல உங்களுக்கும் ஒரு நாள் முடிவு வர தான் போகுது
Rate this:
Share this comment
Cancel
anand - Coimbatore,இந்தியா
08-ஜன-201316:33:04 IST Report Abuse
anand என்ன இவரு சும்மா லொட-லொடன்னு.. இப்போ கரண்ட் பிரச்சினை தி மு க வந்தா சரி ஆயிருக்கமா? சத்தியமா இல்ல.. ஆரம்பிச்சதே இவங்கனால தான்.. அது பத்தாதுன்னு கட்ட பஞ்சாயத்து, நில அபகரிப்பு, 3G/4G பிராடு, பித்தலாட்டம், ஈழத்துக்காக நீலிக்கண்ணீர் எல்லாம் ஓவரா இருந்து இருக்கும்.. அதுக்கு இந்த அம்மா எவ்வளவோ தேவல.. அதான் ஆணியே புடுங்க வேண்டான்னு ஒக்கார வெச்சாச்சு.. ஆனாலும் சும்மா எதாச்சு கொளுத்தி போடறதே வேலையா போச்சு.. இந்த பேச்சை விட்டுட்டு டெல்லி பக்கம் போயி கொஞ்சம் கரண்ட், தண்ணி எல்லாம் வாங்கிட்டு வாங்க.. இந்த அழகுமலை சண்டை, வெட்டிப்பேச்சு, கேனா-பானா அறிக்கை எல்லாத்தையும் அப்பறம் பாக்கலாம்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை