கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையை பாதுகாத்திட வலியுறுத்தி, இம்மாதம், 19ம்தேதி, கருணாநிதி தலைமையில், தி.மு.க., ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கான அறிவிப்பில், தி.மு.க., தென் மண்டல அமைப்புச் செயலரான, மத்திய அமைச்சர் அழகிரியின் பெயர் இடம்பெறவில்லை.
தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டம், சென்னை அறிவாலயத்தில், நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்தில், கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள, திருவள்ளுவர் சிலையை பராமரிக்காமல், தமிழக அரசு புறக்கணிப்பதை கண்டித்தும், மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, உடனடியாக பராமரிப்புப் பணிகளை, மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்ட அறிவிப்பு : இதை வலியுறுத்தி, இம்மாதம், 19ம்தேதி, பொதுச் செயலர் அன்பழகன் தலைமையில், பொருளாளர் ஸ்டாலின் முன்னிலையில், ஆர்ப்பாட்டம் நடக்கும் என, முதலில் அறிவிக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியமாகுரி, விருதுநகர் ஆகிய நான்கு மாவட்டங்களை சேர்ந்த தொண்டர்களும், திரளாக பங்கேற்க வேண்டும் என்பதற்காக, கருணாநிதி பங்கேற்க முடிவு செய்துள்ளார். கருணாநிதி தலைமையில், அன்பழகன், ஸ்டாலின் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என, அக்கட்சி நேற்று அறிவித்துள்ளது.
அழகிரி புறக்கணிப்பு :
நேற்று முன்தினம் நடந்த, மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில், மாநில நிர்வாகிகள் சிலர், சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். ஆனால், தென் மண்டல அமைப்புச் செயலர் என்ற அடிப்படையில், மத்திய அமைச்சர் அழகிரி பங்கேற்க அழைப்பு விடுக்கவில்லை. இதனால், மாவட்டச் செயலர் கூட்டத்தில், அழகிரி பங்கேற்கவில்லை. கன்னியாகுமரியில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில், தென் மண்டல அமைப்புச் செயலர் என்ற அடிப்படையில், அழகிரி பங்கேற்க வேண்டும் என, அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், ஆர்ப்பாட்டம் குறித்த அறிவிப்பிலும், அவரது பெயர் அறிவிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
கருணாநிதி கோபம் :
"எனக்கு பிறகு ஸ்டாலின் தலைவராவார்' என்ற கருணாநிதியின் கருத்தை கண்டித்து, "தி.மு.க., சங்கர மடம் அல்ல' என்று அழகிரி பேட்டி கொடுத்ததால், கருணாநிதி அவர் மீது கோபம் கொண்டுள்ளதாக, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், லோக்சபா தேர்தலில், தே.மு.தி.க., வுடன் கூட்டணிக்கு முயற்சிகள் நடந்து வரும் நிலையில், விஜயகாந்த் குறித்து, அழகிரி விமர்சித்ததும், கருணாநிதியின் கோபத்திற்கு காரணமாக கூறப்படுகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
திருவள்ளுவர் அய்யாவையும் இந்த பாழாய் போன அரசியல் கயவர்கள் விடுவதில்லை , அறநெறி வாழ்வின் எதார்த்தத்தை வளமுடன் வாழ வழி தந்த வள்ளுவரை, கல்மனம் கொண்ட கள்வர்கள் கல்லாய் வைத்தது முதல் தவறு , இப்போ இதை வைத்து அரசியல் செய்வது மகா தவறு , ஊழல் செய்ய ஆட்சியில் இல்லை அதனால் தி. மு. க.இப்படி உப்புசப்பில்லாமல் ஊசிவெடி வெடிக்கிறது .திருவள்ளுவர் மக்களின் நெஞ்சில் என்றும் நீங்கா இடம்பெற்றவர் , ஆகையால் கருணாநிதி அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு வேற எதாவது களவு , கொள்ளை , கொள்கையில்லாத விளையாட்டு சொல்லிகொடுத்து விளையாடுங்க ...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.