90 year Husband got angry after young wife refused to open door in First Night | சிறுமியை மணந்த 90 வயது மணமகன் முதலிரவில் கதவை திறக்காததால் கோபம்| Dinamalar

சிறுமியை மணந்த 90 வயது மணமகன் முதலிரவில் கதவை திறக்காததால் கோபம்

Added : ஜன 08, 2013 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

துபாய்: சவுதி அரேபியாவை சேர்ந்த, 90 வயது நபர், 15 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். சவுதி அரேபியாவை சேர்ந்த செல்வந்தர்கள், ஏழை நாடுகளை சேர்ந்த சிறுமிகளை திருமணம் செய்து கொள்வது வழக்கமாக நடக்கிறது. இந்த வகையில், அரேபியாவை சேர்ந்த, 90 வயது நபர், 15 வயது பெண்ணை, சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். மணமகளின் தந்தை, ஏமன் நாட்டை சேர்ந்தவர்; தாய், சவுதி அரேபியாவை சேர்ந்தவர். முதலிரவு அன்று, மணமகன் ஆர்வத்துடன், படுக்கை அறைக்கு செல்ல முயன்றார். ஆனால், பயந்து போன மணமகள், கதவை உள்பக்கம் தாழிட்டு கொண்டார். பலமுறை கதவை தட்டி பார்த்து ஓய்ந்து போன கிழவர், தனியாக படுத்து உறங்கினார். மறுநாளும் இந்த மணமகள், படுக்கை அறை கதவை உள்பக்கமாக தாழிட்டு கொண்டு, கிழ மணமகனை, உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டார்.
அதுமட்டுமல்லாது, அங்கிருந்து தப்பி, பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டாள். இதனால், வயதான மணமகன் கொதித்து போயுள்ளார். ""மணமகளுக்கு வரதட்சணையாக, 10 லட்ச ரூபாய், கொடுத்துள்ளேன். எனவே, இந்த திருமணம் சட்டபூர்வமானது. பணத்துக்காக என்னை, மணமகளின் பெற்றோர் மோசம் செய்து விட்டனர். சிறுமியை என்னுடன் அனுப்பாவிட்டால், வரதட்சணை தொகையை திருப்பி தர வேண்டும்,'' என, தெரிவித்துள்ளார். கொள்ளு பேத்தி வயதுடைய பெண்ணை, திருமணம் செய்த, இந்த கிழவரை, இணைய தளத்தில் பலர், திட்டி தீர்த்துள்ளனர். மனித உரிமை அமைப்புகள், இந்த திருமணத்தை கண்டித்துள்ளன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
singaravelu - thiruvarur ,இந்தியா
08-ஜன-201317:50:49 IST Report Abuse
singaravelu உலகில் மானுடமும் ஒரு ஜீவராசி...அதனால் படைக்கப்பட்ட சட்டம், சம்பிரதாயங்களை அதுவே மீறினால் என்ன ஆகும் என்பதற்கு இது ஒன்றே தக்க சான்று.. சந்தர்ப்பம் மட்டுமே மனிதனை யோக்கியனாகவும் அயோக்கியனாகவும் பிரித்துப் பார்க்கிறது....என்ன சொல்ல..?மனிதனுக்கு நல்லதை மட்டுமே கற்றுக் கொடுக்க அனைத்துமதக் கடவுளரும் அருள் புரியட்டும்...வேறென்ன சொல்ல..?
Rate this:
Share this comment
Cancel
K.Balasubramanian - Reading RG5 1DG ,யுனைடெட் கிங்டம்
08-ஜன-201317:33:36 IST Report Abuse
K.Balasubramanian இந்த செய்தியால் யாருக்கு என்ன தண்டனையோ ?நல்ல வேளை, நம் நாடு தப்பித்தது.
Rate this:
Share this comment
Cancel
mangaidaasan - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
08-ஜன-201316:42:07 IST Report Abuse
mangaidaasan இதுகூட ஒருவகையில் பாலியல் வன்கொடுமைதான். இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் குற்றவாளிகளே. தண்டனை கிடைக்குமா?
Rate this:
Share this comment
Cancel
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
08-ஜன-201316:23:03 IST Report Abuse
Rangarajan Pg அப்படியே கதவை திறந்து விட்டாலும்..... என்னாவாகி இருக்க போகிறது? அந்த 90 வயது முதியவருக்கு தனது மகளை பணம் பெற்று கொண்டு திருமணம் செய்து வைத்த பெற்றோர்களுக்கு எந்த திட்டுக்களும் விழவில்லையா? அவர்களும் தானே இதற்க்கு துணை போய் இருப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
08-ஜன-201316:04:39 IST Report Abuse
Pugazh V இந்த முதியவர் சொல்வது நிஜம் எனில், mudhalil 10 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு திருமண நிகழ்ச்சியை நடத்திய பெற்றோரையும், அதற்க்கு சம்மதித்த பெண்ணையும் தண்டிக்க வேண்டும். அப்புறம் இப்போதுதான் தெளிவும் அறிவும் வந்தது எனில், 10 லட்சத்தை திருப்பிக் கொடுத்து, போய் வா என்று முதியவரை அனுப்பி விடவும்.
Rate this:
Share this comment
LAX - Trichy,இந்தியா
08-ஜன-201319:05:34 IST Report Abuse
LAXநீங்கள் கூறுவது சரியல்ல, இன்றும் வயது வந்த பெண்களின் சம்மதமில்லாமல் திருமணம் நடப்பது வாடிக்கைதான். இங்கும் எத்தனை பள்ளி செல்லும் சிறுமிகள் தப்பிவந்து கட்டாயத் திருமணம் குறித்து புகார் செய்கின்றனர். பார்த்ததில்லையா என்ன?...
Rate this:
Share this comment
Cancel
JALRA JAYRAMAN - chennai,இந்தியா
08-ஜன-201316:04:26 IST Report Abuse
JALRA JAYRAMAN பணத்தை வைத்து எதையும் வாங்கலாம் என்பதற்கு உதாரணம். ஒரு ஆண் மற்றும் பெண்னுக்கு ஒரே உறவு தான் என்பது சரி ஆனால் இது ரொம்ப ஓவர்.
Rate this:
Share this comment
Cancel
sekar - salem,இந்தியா
08-ஜன-201311:03:00 IST Report Abuse
sekar 75 வயசு வித்யாசத்தில அவனக்கு கல்யாண ஆச வந்ததே தப்பு பணத்த திருப்பி வேற கேட்பான உலகில் ஏழைகளின் நிலைமை இப்படித்தான் என்பது தெளிவாகிறது பாதுகாப்பு தருவது ஓர் அளவிற்கு பண வசதி படைத்தவர்களுக்கு மட்டும் தான் மேலும் அவர்கள் விழிப்புணர்வு இல்லாதவர்கள் என்பதால் அவர்களை ஏமாற்றுவது எளிதாகிறது இதை அதிகாரம் படைத்தவர்களும் பணகரர்களும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் அவல நிலையை என் கண்ணால் கூட கண்டிருக்கிறேன் என்ன செய்வது அவர்களை அரசுதான் கவனிக்க வேண்டும் அவர்களுக்கும் நேரம் போதவில்லை போல ஏழைகளின் குறை தீர்க்க ............ அவல நிலை மனம் கொதிக்கின்றது .......
Rate this:
Share this comment
LAX - Trichy,இந்தியா
08-ஜன-201319:07:32 IST Report Abuse
LAXஇந்த லொள்ளு/ஜொள்ளு கிழவன் புகார் செய்ய வேண்டியது கன்ஸ்யூமர் கோர்ட்டில்தான். ஏனெனில் அவன் வாங்கியது பொருள் என்று நினைத்துதானே தவிர உயிருள்ள ஒரு சிறுமி என்று நினைத்திருந்தால் இப்படி செய்திருப்பானா பாதகன்....
Rate this:
Share this comment
Cancel
Pachiappan - bengaluru,இந்தியா
08-ஜன-201308:39:21 IST Report Abuse
Pachiappan சௌதியில் சட்டங்கள் மிகக் கடுமையானவை என்று கூறி, இங்கு குற்றம் செய்யும் ஆட்களை அங்கே அனுப்ப சொன்னவர்கள் எங்கே? உலகெங்கும் ஏழைகள் (எந்த விதத்தில் இருந்தாலும்) ஏழைகளே. ஏய்ப்பவர்கள் எல்லா விதத்திலும், மிருகங்களை விட மோசமாக நடந்து கொண்டுதான் இருக்கிறார்கள். "கலி முத்திப் போச்சு.."
Rate this:
Share this comment
Maheswari - madurai,இந்தியா
08-ஜன-201316:10:17 IST Report Abuse
Maheswarivery correct comment...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை