மதுரை: ""காவிரி பிரச்னையை இரு மாநில முதல்வர்களும் பேசி தான் தீர்க்க வேண்டும்,'' என<, கர்நாடகா துணை முதல்வரும், அம்மாநில பா.ஜ., தலைவருமான ஈஸ்வரப்பா தெரிவித்தார்.
மதுரையில் அவர் நமது நிருபருக்கு அளித்த பேட்டி...
தனிப்பட்ட பயணமாக வந்துள்ளேன். காலையில் மேல்மருத்துவத்தூர் சென்றேன். ஷிமோகா தொகுதியிலிருந்து மூவாயிரம் பேர் வந்திருந்தனர். அங்கு தரிசனம் செய்த பின், அவர்கள் திரும்பி விட்டனர். நான், குடும்பத்தினருடன் மீனாட்சி கோயிலில் தரிசனம் செய்ய வந்தேன்.
கர்நாடகாவில் பா.ஜ., முன்பை விட வலுவாக உள்ளது. கடந்த சட்டசபை தேர்தலின் போது, கட்சி வலுவாக இல்லை. தற்போது எந்த பிரச்னையும் இல்லை.
பா.ஜ., ஒரு தொண்டர்கள் இயக்கம். மூன்று மாதங்களில் வரவுள்ள சட்டசபை தேர்தலில் 224 தொகுதிகளையும் கைப்பற்றி, மீண்டும் ஆட்சியில் அமரும் என்ற நம்பிக்கை தொண்டர்களிடம் உள்ளது. அவர்கள் எழுச்சியுடன் உள்ளனர். எடியூரப்பா தனிப்பட்ட மனிதர் அவ்வளவு தான்.
தனித்து நின்றே, 224 தொகுதிகளையும் கைப்பற்றும்.
தற்போதைய முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரை முன்னுறுத்தி, பிரசாரம் செய்வோம்.
தமிழகம், கர்நாடகாவும் சகோதரத்துவ மாநிலங்கள். இப்பிரச்னை குறித்து இரு மாநில முதல்வர்கள், சம்பந்தப்பட்டவர்கள் உட்கார்ந்து பேசி தான் தீர்வு காண வேண்டும். கோர்ட் எல்லா பிரச்னைகளையும் தீர்த்து விடாது. காவிரி பிரச்னை எழும்போதெல்லாம், இரு மாநிலங்களிலும் சில கட்சிகள் அரசியல் லாபநோக்குடன் செயல்படுகின்றன. ஏற்கனவே திருவள்ளுவர் சிலை பிரச்னை எழுந்த போது, இரு மாநில அரசுகளும் கூடி பேசி செயல்பட்டு, தீர்வு காணப்பட்டது. இவ்வாறு பேட்டியளித்தார். மீனாட்சி கோயிலில் அவர் குடும்பத்தினருடன் தரிசனம் செய்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
உண்மை...//ஏற்கனவே திருவள்ளுவர் சிலை பிரச்னை எழுந்த போது, இரு மாநில அரசுகளும் கூடி பேசி செயல்பட்டு, தீர்வு காணப்பட்டது. // இங்கு ஒரு சிலையை அனுமதித்தும் அங்கு நமது சிலை திறக்கப்பட்டது... அதாவது நீ ஏதாவது கொடுத்தால் நான் ஏதாவது தருவேன் என்ற பாலிசி.. அப்படி என்றால் எங்களுடைய பங்கான தண்ணீரை தாருங்கள் உங்களுடைய பங்கான கூடங்குளம் மின்சாரம் தருகின்றோம் என்று பேசி தீர்க்கவேண்டும்...
இத்தனை நாளாக எங்க இருந்திங்க Mr ஈஸ்வரையா.... பேசி தீர்க்கத்தான் எங்க முதல்வர் வந்தாங்க, உங்க கட்சியின் தலைமையில் இயங்கும் முதல்வர், ஒரு சொட்டு தண்ணிர் கூட தர முடியாதுன்னு சொல்லிட்டார்... அப்போ நீங்கவந்து சமரசம் செஞ்சி, ஏதோ கொஞ்சம் தண்ணி கெடைக்க செஞ்சிருக்கலாமே..... எங்கடா உச்ச நீதிமன்றம் கர்நாடகவுக்கு எதிர திரும்பிடுமொன்னு பயமா??? அதனால் தான் எங்களை நீதிமன்றத்துக்கு போகதிங்கனு சொல்ல வந்துட்டார்.... வந்தியா சாமி கும்பிட்டியா னு போயிட்டே இருக்கணும், அத விட்டுட்டு இங்க வந்து தீர்ப்பு சொல்ற வேலைய விட்டுடுங்க....
இது ஒருவகையில் பேசி தீர்க்க வேண்டியதே...சட்டத்திற்கு கட்டுப்பட்டால் அவரது ஆட்சி கவிழும்...அதனாலேயே ஒருவகையில் சுய லாபத்திற்காகவே நமக்கு தீங்கிழைகின்றனர்... அவர்கள்,(அங்குள்ள அனைத்து கட்சிகளும்) அந்த மக்கள் மத்தியில் அண்டை மாநிலத்தின் சகோதர தத்துவத்தை, ஒற்றுமையை விளக்கிக்கூறினால் மட்டுமே எதிர்ப்பு நிலை தவிர்க்கப்படும்... அதனால் அவர்களின் ஆட்சிக்கு பாதகம் ஏற்படாது... அந்த நிலையை அடைய இரு மாநிலங்களும் முக்கியமாக அனைத்து கட்சிகளின் ஆதரவுகளுடன் பேசி மட்டுமே தீர்க்க வேண்டும்....எதிரி என்ற பார்வை இருமாநிலங்களுக்கு நடுவில் விலகவேண்டும் .....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.