Strike today to protest against the Power cut | வர்த்தகர்கள், தொழில் அமைப்பினர் போர்க்கொடி! * மின் தடையை கண்டித்து இன்று ஸ்டிரைக் | Dinamalar
Advertisement
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (51)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

தமிழகம் முழுவதும் சீரான மின் வினியோகம் கோரி, சென்னை தவிர்த்து, மாநில அளவிலான வர்த்தகர்கள், தொழில்துறையினரின் கதவடைப்பு போராட்டம் நடத்தினர். பெரும்பாலான அமைப்புகள் கதவடைப்பில் பங்கேற்றதால், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு உற்பத்தி இழப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.

தமிழகத்தில் சென்னை மண்டலம் தவிர்த்த, பிற பகுதிகளில் தினமும், 14 முதல் 18 மணி நேரம் வரை மின் வெட்டு ஏற்பட்டு வருவதால், தொழில் முனைவோர், தொழிலாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் பொது மக்கள் என, அனைத்துத் தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொழில் வளர்ச்சி மிக்க கொங்கு மாவட்டங்களான கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்பு, கணக்கிட முடியாது.சென்னையிலுள்ள பன்னாட்டு நிறுவனங்களுக்கு, தங்கு தடையற்ற மின்சாரத்தை வழங்கி வரும் தமிழக அரசு, தமிழகத்தில் பாரம்பரியமாக தொழில் செய்து வரும் சிறுதொழில் முனைவோரைப் பற்றி சிறிதும் கவலைப்படுவதேயில்லை என்ற குமுறல், தொழில் முனைவோரிடம் உள்ளது. புதிய மின் உற்பத்தி நிலையங்களைத் துவங்குவதும், தாமதமாகிக் கொண்டே வருவதால், மின் நிலைமை இப்போதைக்கு சீராகும் என்ற நம்பிக்கை, யாரிடமும் காணப்படவில்லை.

அதுவரையிலும், இருக்கும் மின்சாரத்தை சமமாகப் பங்கிட்டுத் தர வேண்டுமென்று, மாநிலம் முழுவதும் உள்ள தொழில் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன; மின் நிலைமை சீராகும் வரையிலும், பன்னாட்டு நிறுவனங்களுடன் புதிதாக புரிந்துணர்வு ஒப்பந்தம் எதையும் போடக் கூடாது என்ற தொழில் அமைப்புகளின் கோரிக்கையையும் அரசு ஏற்கவில்லை. இதனால், சென்னை தவிர்த்த தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் உள்ள மக்கள் அனைவரும், அரசின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த பாரபட்சத்தை எதிர்த்து,

தனித்தனியாக போராட்டங்கள் நடத்தியதற்கு பலன்கிடைக்கவில்லை. அதனால், தமிழகத்தில் சென்னை மண்டலம் தவிர்த்த அனைத்து மாவட்டங்களில் உள்ள தொழில், வர்த்தகம் மற்றும் சமூக அமைப்புகளை ஒருங்கிணைத்து, தமிழ்நாடு மின் நுகர்வோர் கூட்டுக்குழுஅமைக்கப்பட்டுள்ளது.

மின்சாரத்தை சென்னை உட்பட எல்லா பகுதிகளுக்கும், அனைத்து நுகர்வோருக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்க வேண்டுமென்ற ஒரே கோரிக்கையை வலியுறுத்தி, இன்று காலை 6:00 மணியிலிருந்து மாலை 6:00 மணி வரை, ஒரு நாள் கதவடைப்பு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த போராட்டத்துக்கு, தொழில் மாவட்டமான கோவையில் பலத்த ஆதரவு கிடைத்துள்ளது. கொடிசியா, தொழில் வர்த்தக சபை, சீமா, சைமா, சைகா, டாக்ட், காட்மா உட்பட 39 தொழில் அமைப்புகள் இதில் பங்கேற்றன

கூட்டுக்குழுவில் பங்கேற்றுள்ள தொழில் வர்த்தக சபை கோவை கிளையின் நிர்வாகி பழனிச்சாமி கூறுகையில், ""கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 50 ஆயிரத்துக்கும் அதிகமான சிறு, குறுந்தொழில் கூடங்கள், பல லட்சம் விசைத்தறிக் கூடங்கள் இன்று மூடப்படுகின்றன. ஐந்து லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் இதில்

Advertisement

பங்கேற்பர். கோவையில் மட்டுமே, இன்று ஒரே நாளில் 500 கோடி ரூபாய்க்கு உற்பத்தி இழப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது,'' என்றார்.
தமிழ்நாடு மின் நுகர்வோர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மகேந்திர ராமதாஸ் கூறுகையில், ""கடந்த மாதம் 8ம் தேதியன்றுதான், இந்த கூட்டுக்குழு துவக்கப்பட்டது;ஒரே மாதத்தில், ஏராளமான அமைப்புகள் இதில் இணைந்துள்ளன. மதுரை, திருச்சி, கடலூர், விருதுநகர் என பல மாவட்டங்களிலும் ஆதரவு அதிகமாகவுள்ளது. குறிப்பாக, கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற தொழில் மாவட்டங்கள் ஸ்தம்பிக்கும் வாய்ப்புள்ளது. இந்த கதவடைப்பு, அரசின் கவனத்தை ஈர்க்குமென்று நம்புகிறோம்,'' என்றார்.

பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால், ஜவுளி, ஓட்டல் மற்றும் நகைத் தொழில்களைச் சேர்ந்த அமைப்புகள், இந்த கதவடைப்பில் பங்கேற்க இயலவில்லை என்று கூறியுள்ளன; அடுத்த கட்டப் போராட்டத்தில், தங்களை இணைத்துக் கொள்வதாக வணிகர் அமைப்புகள் உறுதியளித்துள்ளன. ஒரு வாரத்துக்குள் தீர்வு காணப்படாவிட்டால், அடுத்த கட்டப் போராட்டம் பற்றி ஆலோசிக்கப்படுமென்று கூட்டுக்குழு நிர்வாகிகள் தெரிவித்தனர். -நமது நிருபர் குழு-

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (51)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
09-ஜன-201319:31:07 IST Report Abuse
Pugazh V சட்ட மன்ற தேர்தலுக்கு முன்னாள் தெருத் தெருவை மீட்டிங் போட்டு, அ தி மு க விற்கு ஓட்டு போட சொன்னீங்க, வரிசையில் நின்று ஓட்டுப் போட்டீங்க. இப்போ, போராட்டமா, அதுவும் முதல்வர் தலை நகரில் இல்லாத போது? ரொம்ப தைரியம் தான். நீங்கல்லாம் நல்லா வருவீங்க பாஸ்.
Rate this:
3 members
0 members
27 members
Share this comment
Cancel
Raghu V - chennai,இந்தியா
09-ஜன-201319:22:00 IST Report Abuse
Raghu V ஜெயா பதவிஎற்ற பொது மின் வாரிய கடன் 45000 கோடி.உண்மைய இல்லையா..?இந்த நிலைமையில் எவரும் கடன் கொடுக்க முன் வர வில்லை .இதில்லிருந்து மீள்வது லேசில்லை .தூத்துக்குடிக்கு வந்துகொண்டிருந்த மிஷின் கால்வாயில் விழுந்தது பேரிடி .அதையும் தாண்டி கன்வேயர் பெல்டில் தீ .அதையும் தாண்டி ஒரு சாதாரண அனுமதியையும் தாமத படுத்தும் மதிய அரசு .தடைகள் குறையும் வேளையில் இந்த மின்சாரம் வந்து விடுமோ என்று காய்கிறார்கள் .வரவதற்கு முன் வேறுஎதாவது செய்து முட்டுக்கட்டை போட பார்கிறார்கள் .
Rate this:
29 members
0 members
5 members
Share this comment
Cancel
v j antony - coimbatore,இந்தியா
09-ஜன-201318:40:44 IST Report Abuse
v j antony அரசாங்கத்தின் வருவாயை முறையாக வளர்ச்சி திட்டங்களுக்கு செலவிட முறையான தன்னிச்சையான ஆணையம் ஒன்றை அமைத்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது
Rate this:
0 members
0 members
60 members
Share this comment
Cancel
Arul - Chennai,இந்தியா
09-ஜன-201318:26:12 IST Report Abuse
Arul மின் பிரச்சனை வைத்து சாதிக்கலாம் என்று திமுக நினத்தால் அது அவர்களைத்தான் முட்டாளுக்கும் .. மக்கள் ஒன்றும் முட்டல்ல ......... இது 1996 ஆல் சன் டிவிவை மட்டும் பார்த்து மக்கள் நாட்டுநலனை அறிந்துகொள்ளுவதற்கு .. என்று எண்ணிலன்டங்க தகவல் தொலைதொடர்பு சாதனங்கள் உள்ளது .. இதில் எது உண்மை எது பொய் என்று அடையாளம் காணுவார்கள் .கருணாவின் குள்ளநரித்தனத்தை கலகமுட்டவதை ,நதிநீரில் ,மின்சாரத்தில் ,தமிழக நலனில் முதல்வரை பழிவாங்குவதாக நினைத்து தமிழக மக்களை வஞ்சிப்பதை மக்களும் நடுநிலையாளர்களும் கவனித்துக்கொண்டுதான் உள்ளார்கள் என்பதை திமுகவும் கருணாவும் புரிந்துகொல்வர்கள ?
Rate this:
38 members
0 members
4 members
Share this comment
Cancel
Kalignardaas - Thiruvannamalai,இந்தியா
09-ஜன-201313:52:22 IST Report Abuse
Kalignardaas கலைஞர் அய்யா இருந்து இருந்தால் இப்பேற்பட்ட போராடதிருக்கு அவசியமே இருந்து இருக்காது. அவர் பல இடங்களில் இருந்து கரி வாங்கி நமக்கு மின்சாரமாகி குடுத்து இருப்பாரு மத்திய அரச பாத்து ஒரு சிம்ஹ கர்ஜனை விட்டார்ன அங்கேர்ந்து நமக்கு கரண்ட் வந்து இருக்கும்.
Rate this:
5 members
0 members
54 members
Share this comment
Cancel
Ulagarasan - Kolkatta,இந்தியா
09-ஜன-201313:39:24 IST Report Abuse
Ulagarasan நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனை
Rate this:
2 members
0 members
76 members
Share this comment
Cancel
Rajasekaran Palaniswamy - georgia,யூ.எஸ்.ஏ
09-ஜன-201312:09:01 IST Report Abuse
Rajasekaran Palaniswamy இந்தியாவை பொருத்தவரையில் மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் , இந்தியா என்றால் டெல்லியுடனும், தமிழ்நாடு என்றால் சென்னையுடனும் முடித்துக்கொள்கின்றது. அப்படி இருக்க நாம் ஏன் வரிகளை செலுத்தவேண்டும். இல்லை அவர்கள் நம்மைவிட அதிக வரிகளை செலுத்துகின்றார்களா?.
Rate this:
2 members
0 members
44 members
Share this comment
Cancel
Vijayakumar Iyyadurai - THOOTHUKUDI,இந்தியா
09-ஜன-201312:08:40 IST Report Abuse
Vijayakumar Iyyadurai powercutina அணைத்து தரப்பினரும் பதிக்கபடுகின்றனர்
Rate this:
0 members
0 members
46 members
Share this comment
Cancel
Bava Husain - riyad,சவுதி அரேபியா
09-ஜன-201311:43:47 IST Report Abuse
Bava Husain மாற்றம் வேண்டுமென்று ஓட்டளித்த மக்களுக்கு, ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது... மின்வெட்டு பிரச்சினைக்கு யார் காரணம் என்று பிறகு சாவதானமாக ஆராயலாம்.. இப்போது இந்த பிரச்சனைக்கு தீர்வுதான் என்ன? அதைப்பற்றி சிந்தியுங்கள்....மின்வெட்டிற்கு காரணம்,யாராகவோ அல்லது எதுவாகவோ இருந்துவிட்டு போகட்டும்..ஆளும் அரசால் என்ன செய்ய முடியுமோ அதை செய்து காட்டுங்கள்...அல்லது செய்பவர்களுக்கு வழிவிடுங்கள்....
Rate this:
4 members
1 members
106 members
Share this comment
Cancel
makkaliloruvan - Erode,இந்தியா
09-ஜன-201311:23:59 IST Report Abuse
makkaliloruvan சென்னையில் தான் கோட்டை இருக்கு இங்க அவ்வளவு நேரம் போச்சுன்னா அவ்வளவுதான் கோட்டை ஓட்டை ஆயிடும்
Rate this:
6 members
0 members
67 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.