Advertisement
பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2013,02:24 IST
கருத்துகள் (20)
தனியார் சொகுசு பேரூந்துக்கு போட்டியாக, தென் மாநில முக்கிய நகரங்களுக்கு, அதி நவீன சொகுசு (மல்டி ஆக்சல் வால்வோ) பேரூந்துகளை இயக்க, போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.
சொகுசு, அதிசொகுசு மற்றும் குளிர்சாதன வசதியுடன் கூடிய @பருந்து, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகம் மற்றும் கேரளா ஆகிய தென் மாநிலங்களுக்கு, 994க்கும் மேற்பட்ட பேரூந்துகளை, அரசு விரைவு போக்குவரத்து கழகம் இயக்குகிறது. சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, தஞ்சை, நெல்லை, கன்னியாகுமரி, நாகர்கோவில் போன்ற நகரங்களில் இருந்து, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு, நவீன வசதிகளுடன் கூடிய பேரூந்துகளை, தனியார் நிறுவனங்கள் இயக்கி வருகின்றன. இதில் புதுச்சேரியும் அடங்கும். நீண்ட தூர பயணத்திற்கு, நவீன வசதிகளுடன் கூடிய பேரூந்து பயணத்தை, பொதுமக்கள் விரும்புகின்றனர்.


பேரூந்துகளில் பயணிகளுக்கான கூடுதல் வசதியோடு, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில், சொகுசு பேரூந்துகளை தனியார் நிறுவனங்கள் வடிவமைக்கின்றன. இதுபோன்ற, பேரூந்துகள் அரசு போக்குவரத்துத் துறையிடம் இல்லை. இதைப்போல, பயணிகளுக்கு கூடுதல் வசதிகளுடன் அரசுப் பேரூந்துகள்


இயக்கப்பட்டாலும், தனியார் பேரூந்துகளில் உள்ள வசதிகள் மற்றும் சேவை போன்று இல்லை என்ற எண்ணம், பொதுமக்களிடம் இருந்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு, அதி நவீன சொகுசு பேரூந்துகளை இயக்க, போக்குவரத்துத் துறை திட்டமிட்டு உள்ளது.இதுகுறித்து, போக்குவரத்து துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தனியார் நிறுவனங்கள் இயக்கும் பேரூந்துகளில், நவீன வசதிகள் உள்ளன. இதற்கு, இணையாக கழிப்பறை, தட்ப வெப்பக் கட்டுப்பாடு, "டிவி' ஆகிய நவீன வசதிகள் அடங்கிய பேரூந்துகளை இயக்க, திட்டமிட்டுள்ளோம். இதற்கான பரிந்துரையை, அரசிடம் சமர்ப்பித்துள்ளோம். அரசின் அனுமதி கிடைத்தவுடன், இயக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -

பொங்கல் பண்டிகைக்கு 5,000 சிறப்பு பஸ்கள் :
பொங்கல் பண்டிகைக்கு, சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்காக, சென்னையில் இருந்து, 5,000க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்களை இயக்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசு செய்திக்குறிப்பு: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து, அனைத்து மாவட்டங்களுக்கும், இம்மாதம், 11ம் தேதி 1,280, 12ம் தேதி, 1,315 மற்றும், 13ம் தேதி, 312 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.



Advertisement
14ம் தேதி, பயணிகள் தேவைக்கேற்ப சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இதே போல், சென்னை தவிர்த்து, மாநிலம் முழுவதிலும் இருந்து, 11ம் தேதி, 730, 12ம் தேதி, 745, 13ம் தேதி, 1,230 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இம்மாதம், 11ம் தேதி முதல், 13ம் தேதி வரை, 5,612 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். மேலும், பொங்கல் பண்டிகையை கொண்டாடி, ஊர் திரும்ப வசதியாக, அதே அளவிலான பஸ்கள், 16ம் தேதிமுதல், 20ம் தேதிவரைஇயக்க ஏற்பாடு செய்யப்படும். பொங்கல் பண்டிகைக்காக, 300 கி.மீ., தூரத்திற்கு மேல் இயக்கப்படும், சிறப்பு பஸ்களுக்கு, "ஆன்லைன்' முன்பதிவு வசதி ஏற்படுத்தப்படும். இது தவிர, கம்ப்யூட்டர் மூலம் உடனடி தள முன்பதிவு செய்யும் வகையில், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், 16 சிறப்பு முன்பதிவு மையங்கள் அமைக்கப்படும்.



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (20)
Pugal - Kovai ,இந்தியா
13-ஜன-201311:07:26 IST Report Abuse
Pugal ஒரு செய்தியில் 5700 கோடி நஷ்டம் என்றும், இங்கே 500 அதி சொகுசு புது பேருந்துகள் என்றும், முரணான செய்திகள். எங்கிருந்து இந்த பேருந்துகள் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்குக் கிடைக்கப் போகிறதாம்? புதிதாக வாங்கப் போகிறார்களா? அல்லது இப்போ இருக்கும் பேருந்துகளில் ஏ சி, டி வி எல்லாம் பிக்ஸ் பண்ணப் போகிறார்களா? செய்தி தெளிவாக இல்லையே. எப்படியோ அடுத்த அறுவடை பை தனியார் பஸ் கம்பெனிகள் ஆரம்பம். (போகல போன்ற பண்டிகைக்கு ஊருக்குப் போகனும்னு வீட்டில சொல்றாங்களா? பரவாயில்லை-இங்க..... வேணாம் விடுங்க.)
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Kuwait Tamilan - Salmiya,குவைத்
09-ஜன-201312:05:34 IST Report Abuse
Kuwait Tamilan இருக்கிற பஸ்களை எல்லாம் சுத்தமா வைதிருங்கள், சரியாய் நேரத்திற்கு பயண நேரத்தை மாற்றி அமையுங்கள் அதுவே போதும்..
Rate this:
0 members
0 members
6 members
Share this comment
christ - chennai,இந்தியா
09-ஜன-201311:37:06 IST Report Abuse
christ அரசாங்க பஸ்கள் என்னதான் சுட்டு போட்டாலும் சுத்தம் என்பது வெறும் வாய் வார்த்தயே
Rate this:
0 members
0 members
7 members
Share this comment
christ - chennai,இந்தியா
09-ஜன-201311:24:49 IST Report Abuse
christ தனியாருடன் போட்டிபோட மல்டி ஆக்சில் வோல்வோ பஸ்களா என்னங்க காமடி பண்றீங்க ?
Rate this:
0 members
0 members
15 members
Share this comment
Divaharan - Tirunelveli,இந்தியா
09-ஜன-201311:21:25 IST Report Abuse
Divaharan முதலில் இருப்பதை ஒழுங்காக வைக்க முடியுமா?
Rate this:
0 members
0 members
18 members
Share this comment
mirudan - kailaayam,இந்தியா
09-ஜன-201310:28:25 IST Report Abuse
mirudan பஸ் விடுவது இருக்கட்டும் அதை ஒரே மாதத்தில் காயலான் கடைக்கு அனுப்பி விடுவார்கள், அப்படியே விடுவதாக இருந்தால் அதை தற்போதைய ஏசி பஸ்களை போன்று போக்குவரத்து துறை அல்லாதவர் வசம் விட்டால்தான் தேறும்
Rate this:
0 members
2 members
43 members
Share this comment
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
09-ஜன-201309:55:34 IST Report Abuse
Baskaran Kasimani நம்மூர் ஸ்டைலில் கழிப்பறைகளை சுத்தமாக வைத்திருக்கவில்லை என்றால் இந்த பேருந்துகள் நடமாடும் கழிப்பறை போல ஆகி விடும்..
Rate this:
1 members
2 members
36 members
Share this comment
suresh kanyakumari - Nagercoil,இந்தியா
09-ஜன-201311:26:42 IST Report Abuse
suresh kanyakumariகழிப்பறையில் தண்ணீருக்கு பதிலா காத்து வைத்து சுத்தம் செய்வார்கள்...
Rate this:
0 members
0 members
7 members
Share this comment
Raj - Chennai,இந்தியா
09-ஜன-201309:34:37 IST Report Abuse
Raj சென்னையில் deluxe , எக்ஸ்பிரஸ் என்று வித விதமான பெயர்களில் ஒரே பேருந்தை இயக்கி மக்களை முட்டாளுக்கும் அதே முயற்ச்சி தான் இதுவும். சரியான பராமரிப்பு இல்லையென்றால் இந்த வகை பேருந்துகள் சவப்பெட்டிகளாய் மாறிவிடும். சமீபத்தில் அரசு குளிர்சாதன பேருந்தில் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது வேறு வழி இல்லாமல் ஒரு பக்கம் முழுவதும் குளிர்சாதனம் வேலை செய்ய வில்லை, ஜன்னல் திறக்கவும் வசதி இல்லை, வெய்யில் வேறு கொளுத்துகிறது ... அனலில் இட்ட புழுவாய் வேதனையுடன் பயணம் செய்தேன்.
Rate this:
2 members
5 members
59 members
Share this comment
தமிழன் - chennai,இந்தியா
09-ஜன-201306:57:16 IST Report Abuse
தமிழன் பிழைக்க ஒரு ஊரு இருக்கும் வரை இந்த அவலம் தொடரும்
Rate this:
2 members
1 members
16 members
Share this comment
Shanmugam Natarajan - Neyveli,இந்தியா
09-ஜன-201306:56:06 IST Report Abuse
Shanmugam Natarajan வாய் சொல்லில் வீரரடி கிளியே ............
Rate this:
3 members
1 members
23 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.