Advertisement
ஜெகனின் ரூ.143 கோடி சொத்துக்கள் பறிமுதல் : அமலாக்க பிரிவினர் அதிரடி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2013,04:59 IST
மாற்றம் செய்த நாள் : ஜனவரி 09,2013,10:12 IST

ஐதராபாத்:நிதி மோசடி வழக்கில், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சொந்தமான, 143 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை, மத்திய அமலாக்க பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், ஆந்திராவின், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, ஏற்கனவே கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில், சி.பி.ஐ., தாக்கல் செய்த, முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், ஜெகன் மோகன் மீதான, நிதி மோசடி வழக்குகள் குறித்து, மத்திய அமலாக்க பிரிவு, விசாரணையை துவங்கியது.

ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தையும், மறைந்த காங்., தலைவருமான, ராஜசேகர ரெட்டி முதல்வராக இருந்தபோது, ராம்கி பர்மா சிட்டி (இந்தியா) நிறுவனம், மாநில அரசிடமிருந்து, சட்டத்துக்கு புறம்பாக ஆதாயம் அடைந்திருப்பதும், இந்த விவகாரத்தில், ஜெகன் மோகன் ரெட்டிக்கு தொடர்பிருப்பதும், விசாரணையில் தெரிந்தது. இந்த விவகாரத்தில், பெருமளவு நிதி மோசடி நடந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.


இதையடுத்து, ராம்கி பர்மா சிட்டி நிறுவனத்தின், 135 ஏக்கர் நிலம் மற்றும் வங்கி டிபாசிட் , ஜெகனுக்கு சொந்தமான, ஜகதி பள்ளிகேஷன்ஸ் பி.லிட்., நிறுவனத்தின் வங்கி டிபாசிட் மற்றும் ஜெகன் கூட்டாளிகளுக்குச் சொந்தமான சொத்துக்கள் உட்பட, 143 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை, மத்திய அமலாக்க பிரிவு அதிகாரிகள், நேற்று, பறிமுதல் செய்து, முடக்கி வைத்தனர்.இந்த விவகாரம், ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (31)
Thamizhan - Alkhore,கத்தார்
10-ஜன-201300:47:03 IST Report Abuse
Thamizhan இந்த சொத்துக்கள் அனைத்தையும் ஜெகன் மோஹன் ரெட்டி, அவரது தந்தை அரசாண்டபோது (காங்கிரஸ் கட்சியில் ), அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி கொள்ளை அடித்ததே.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Thamizhan - Alkhore,கத்தார்
10-ஜன-201300:38:59 IST Report Abuse
Thamizhan இந்த அமலாக்கப் பிரிவு, கலைஞர் குடும்ப சொத்துக்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ravi ramanujam r - rajapalayam,இந்தியா
09-ஜன-201313:55:40 IST Report Abuse
ravi ramanujam r ஜெகனுக்கு இப்போது இருக்கும் ஒரே வாய்ப்பு மத்திய ஆளும் கட்சியில் உறுப்பினர் ஆகிவிடுவதுதான்.
Rate this:
1 members
0 members
17 members
Share this comment
R.Saminathan - mumbai,இந்தியா
09-ஜன-201312:49:38 IST Report Abuse
R.Saminathan சட்டத்துக்கு புறம்பாக யார் தவறு செய்தாலும் உடனே எந்த அரசாக இருந்தாலும் அவர்களை கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.,..,இன்னும் இந்தியாவில் இந்தமாரி பல கொள்ளையர்கள் இருப்பது இந்த காங்கிரஸ் தலைவர் திரு.ஜெகன் மோகன் ரெட்டி மூலம் தெரிகிறது,.இந்தியாவில் அரசியலை அறவே ஒழிக்கவும் முடியாது ,,. ஏன் என்றால் மக்கள் அப்படி..,
Rate this:
5 members
0 members
3 members
Share this comment
S.Govindarajan. - chennai ,இந்தியா
09-ஜன-201312:33:32 IST Report Abuse
S.Govindarajan. ஜகன் மோகனின் தந்தை இருக்குபோது எவ்வளவு சொத்து இருந்தது.அப்போதெல்லாம் இல்லாமல் இப்போது நடவடிக்கை எடுப்பானேன்.? ஜகன் மோகன் காங்கிரஸ் கட்சியில் இருந்தால் நடவடிக்கை இருக்காதல்லவா ? இந்த நாட்டில் பலகோடி ரூபாய் சொத்து சேர்த்தவர்களின் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்கப்பட்டதா ? எல்லோருக்கும் ஒரே மாதிரியான அணுகுமுறை தானே இருக்கவேண்டும்.?
Rate this:
0 members
0 members
20 members
Share this comment
boopatheeswaran - Coimbatore  ( Posted via: Dinamalar Android App )
09-ஜன-201312:19:03 IST Report Abuse
boopatheeswaran ஊழல் செய்தது உண்மை என நிரூபித்தும் ஏன் இன்னும் ராஐ, கனி மற்றும் மு.க குடும்பாத்தாரின் சொத்துக்களை பறிமுதல் செய்யவில்லை. ஊழல் செய்தவன் சொத்தை பறிமுதல் செய்தால் ஊழலின் தலைவனும் (சோனியா) மாட்டுவான் என்பதனாலா
Rate this:
1 members
0 members
55 members
Share this comment
Ambika. K - bangalore,இந்தியா
09-ஜன-201312:14:05 IST Report Abuse
Ambika. K எல்லாம் சரி இந்த பணம் பறிமுதல் செய்த பின் என்ன ஆகும். அத்தை கொஞ்சம் சொல்லுங்கப்பா . எதாவது முக்கியமான திட்டம் நிறைவேற்றி அதற்கு YSR செய்த ஊழல் திட்டம்னு பேர் வெக்கலமில்லெ. நம்ம மஞ்ச துண்டு KD பிரதர்ஸ் அடிச்ச துட்டுல இந்தியா முழுக்க மெட்ரோ train விடலாம் அப்படி விடற ட்ரைன்ல நம்ம ப சி துட்டுல எல்லா ஜனத்துக்கும் இலவச சாப்பாடு போடலாம் ஹ்ம்ம் ஆவுமா இதெல்லாம்.
Rate this:
1 members
0 members
10 members
Share this comment
மும்பை தமிழன் - mumbai,இந்தியா
09-ஜன-201312:00:37 IST Report Abuse
மும்பை தமிழன் சோனியா வுக்கு எதிராக யார் வேலை செய்தாலும் இதே கதி தான்
Rate this:
1 members
0 members
6 members
Share this comment
மும்பை தமிழன் - mumbai,இந்தியா
09-ஜன-201311:59:16 IST Report Abuse
மும்பை தமிழன் இவர் காங் இல் இருந்திருந்தால் சாமரம் வீசி இருப்பார்கள் மத்திய அரசு கண்டனத்துக்கு உரியது
Rate this:
1 members
0 members
6 members
Share this comment
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
09-ஜன-201310:59:38 IST Report Abuse
Swaminathan Nath இது காங்கிரஸின் போலி நாடகம், பிடிகாதவர்களை பழி வாங்கும் நடவடிக்கை ,, ஏன் கனி, ராஜா, கருணா மீது நடவடிக்கை எடுக்க வில்லை., அவர்கள் அதரவானர்கள், மக்கள் புரிந்து கொள்ளவேண்டும், அதற்காக ஜகன் நல்லவர் என்று நான் சொல்ல வில்லை.
Rate this:
1 members
1 members
75 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.