கோவை: மாநிலம் முழுவதும் மின்சாரத்தை சமமாக பங்கிட வலியுறுத்தி, சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் தொழில் முனைவோர் அழைப்புவிடுத்திருந்த ஒருநாள் ஸ்டிரைக், கோவையில் வெற்றி பெற்றது. இதனால், சுமார் 300 முதல் 500 கோடி ரூபாய் வரை, உற்பத்தி இழப்பு ஏற்பட்டது.மின்சார பற்றாக்குறையால், சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் தினமும் 16 மணி நேர மின்வெட்டு அமலில் உள்ளது. இதனால், தொழில் துறையினர் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இருக்கும் மின்சாரத்தை அனைத்து மாவட்டங்களுக்கும் சமமாக பகிர்ந்தளிக்க கோரி, பல்வேறு கவன ஈர்ப்பு போராட்டங்களை நடத்திய தொழில் துறையினர், நேற்று ஒருநாள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.இதற்கு ஆதரவு தெரிவித்து இன்ஜினியரிங் உதிரி பாகம், மோட்டார், பம்புசெட், மின்சாதன விற்பனை கடைகள், கோவையில் மூடப்பட்டிருந்தன. இதனால், சுமார் 300 முதல் 500 கோடி ரூபாய் வரை, உற்பத்தி இழப்பு ஏற்பட்டது.காட்மா, கொடிசியா, சீமா, சிஸ்பா, டாக்ட், காப்மா, கொசீமா, கவுமா, சீயா உள்ளிட்ட தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் அடங்கிய மின் நுகர்வோர் ஒருங்கிணைப்புக்குழுவினர், நேற்று காலை கலெக்டர் கருணாகரன் மற்றும் டாடாபாத்தில் உள்ள மின் வாரிய தலைமை பொறியாளர் தங்கவேலு ஆகியோரிடம் மனு அளித்தனர்.ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பாலசுந்தரம் கூறியதாவது:
தமிழகத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் 8-10 சதவீதம் மின்சாரம் கூடுதலாக தேவைப்படுகிறது. புது தொழில் திட்டங்கள் ஏதாவது வந்தால், தேவை இன்னும் அதிகரிக்கும். "இந்த ஆட்சியில் மின் தட்டுப்பாடு மட்டுமே ஒரே பிரச்னை' என்கிறார் முதல்வர்.
அதாவது, இப்பிரச்னையை தேர்தல் கண்ணோட்டத்தில் மட்டுமே அரசு பார்க்கிறது. தட்டுப்பாடு தொடரும் பட்சத்தில், தேர்தலில் நிச்சயம் பாதிப்பு இருக்கும். ஸ்டிரைக்கில் கோவையில் 90 சதவீத நிறுவனங்களும், ஒசூர், மதுரை, ஈரோடு உள்ளிட்ட பிற மாவட்டங்களில் 70 சதவீத நிறுவனங்களும் மூடப்பட்டன. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, ஒருங்கிணைப்புக்குழுவினருடன் ஆலோசித்து, முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
கோவை, திருப்பூர் மாவட்ட சிறு, குறுந்தொழில் முனைவோர் சங்கத் (காட்மா) தலைவர் ரவிக்குமார் கூறுகையில், ""மின்சாரத்தை பகிர்ந்து வழங்கினால், அனைத்து மாவட்டங்களுக்கும் தினமும் பகலில் குறைந்தது எட்டு மணி நேரம் தொடர்ந்து மின்சாரம் கிடைக்கும். இதன் மூலம் பிரச்னைக்கு தற்காலிக தீர்வு காணலாம். ஆனால் இக்கோரிக்கையை செயல்படுத்த, அரசு தயங்குவது ஏன் எனத் தெரியவில்லை. மின்வெட்டு பிரச்னைக்கு "2013 டிசம்பரில் தீர்வு கிடைத்து விடும்' என்கிறார் முதல்வர். அதாவது, ஓராண்டு இப்பிரச்னையை சந்தித்தாக வேண்டும் என, மறைமுகமாக கூறுகிறார். ஆண்டு இறுதி வரை காத்திருக்க தயார். அதுவரை இருக்கும் மின்சாரத்தை பகிர்ந்து வழங்க வேண்டும்,'' என்றார்.
சென்னைக்கு பிரியாணி கோவைக்கு கஞ்சியா?
"காட்மா' சங்கத் தலைவர் ரவிக்குமார் கூறும்போது, ""2013 டிசம்பரில் மின்தட்டுப்பாடு பிரச்னை தீர்வதற்குள், பல நிறுவனங்கள் மூடப்பட்டு விடும். கோவையின் ஆர்டர்கள் சென்னை, வெளி மாநிலங்களுக்கு கைமாறி விடும். அரசு தாய் போன்றவள். அனைத்து குழந்தைகளுக்கும் சமமாக உணவு வழங்க வேண்டும். ஆனால் சென்னை குழந்தைக்கு மட்டும் பிரியாணியும், கோவை குழந்தைக்கு கஞ்சியும் வழங்கப்படுகிறது. பஞ்சம் தீரும் வரை எல்லா குழந்தைகளுக்கும் ரசம் சாதம் வழங்க தாய் முன்வர வேண்டும்,'' என, வேதனையுடன் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
தமிழர்களே, கோவை நமக்கு வழி காட்டுகிறது. தமிழகம் முழுவதும் ஒன்று பட்டால் இந்த போராட்டத்திற்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும். இதில் எந்த கட்சிகளையும் நம்பி பயன் இல்லை. நமக்கு நாமே என்று தெருவில் இறங்கி போராடினால் ஒழிய நமது உரிமை இந்த மாதிரி சூறையாடப் பட்டுக் கொண்டே இருக்கும். அடுத்த கட்ட போராட்டத்தை கோவை அறிவிக்கும் போது நாம் எல்லோரும் கலந்து கொள்ள வேண்டும்.
சென்னையில் மின்வெட்டை 3 மணி நேரமாக ஆக்கலாம்...இதனால் தொழில்கள் பாதிக்காது என்றால் 3 மணி நேரம் சேர்ந்தாற்போல செய்யாமல் காலை மதியம் மாலை என ஒருமணிநேரம் மின் வெட்டு சென்னையிலும் செய்யலாம்...3 மணி நேரம் சேர்ந்தாற்போல செய்வது சரியல்ல... சென்னை பகுதியில் அதிகமாக குளிர் பதன பெட்டிகள் உள்ளன. அவை 1 மணி நேரத்திற்கு மேல் மின்வெட்டை தாங்காது. உணவில் இயற்கையாகவே குறைந்த அளவில் உள்ள கிருமிகள் (சல்மொனலோஸ் போன்றவை ) வளர்ந்து பெருகி விட்டால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்...அதனால் தொடர்ந்து மின்வெட்டை செய்வது நல்லதல்ல...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.