Don’t give nod for any construction at public places, SC directs states | பொது இடங்களில் தலைவர்களுக்கு சிலை வைக்க... தடை! * மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு| Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (85)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

புதுடில்லி: "போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளிலும், பொது இடங்களிலும், சிலைகள் மற்றும் அலங்கார வளைவுகள் அமைப்பதற்கு அனுமதியளிக்கக் கூடாது' என, அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது.
கேரளாவில், தேசிய நெடுஞ்சாலையில் குறிப்பிட்ட ஒரு இடத்தில், சிலை ஒன்றை நிறுவுவதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள், ஆர்.எம்.லோதா மற்றும் எஸ்.ஜே. முகோபாத்யாயா ஆகியோர் அடங்கிய, சுப்ரீம் கோர்ட், "பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது.

பொதுநலனே முக்கியம். : இது தொடர்பாக, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: பொதுநலனே மிகவும் முக்கியம். சாலைகள் எந்த ஒரு நபரின் சொத்தும் அல்ல; சாலைகளில் இடையூறு இல்லாமல், சுதந்திரமாகச் செல்ல, ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமையுள்ளது. அதனால், சாலைகளில், சிலைகள், கோவில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் அமைத்து, குடிமக்களின் உரிமையை பறிக்கக் கூடாது. இது போன்ற நடைமுறைகள் ஓரங்கட்டப்பட வேண்டும்.சிலரை பெருமைப்படுத்துவதற்காக நிதியை செலவிடுவதற்குப் பதிலாக, அந்த நிதியை, ஏழைகளின் மேம்பாட்டிற்காக, அரசுகள் செலவிட வேண்டும். கேரளாவில், தேசிய நெடுஞ்சாலையில், குறிப்பிட்ட பகுதியில், தலைவர் ஒருவரின் சிலையை அமைக்க, மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த விவகாரத்தில், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, தற்போதைய நிலை தொடர அனுமதிக்கப்படுகிறது.

ஆனாலும், இனிமேல், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், சாலைகள் மற்றும் பொதுமக்கள் கூடும் பொது இடங்களில் சிலைகள் மற்றும் அலங்கார வளைவுகள் அமைக்க, கேரள மாநில அரசு அனுமதி வழங்கக் கூடாது. இந்த உத்தரவு, அனைத்து மாநில அரசுகளுக்கும்,

Advertisement

யூனியன் பிரதேசங்களுக்கும் பொருந்தும். அதே நேரத்தில், சாலைகளில்போக்குவரத்துக்கு பயன்படும் வகையில், தெரு விளக்குகள் அமைப்பது போன்றவற்றிற்கு, எவ்வித தடையும் இல்லை. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இது போன்ற மனு ஒன்று, இதற்கு முன் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், "சாலைகள் மற்றும் பொது இடங்களில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் உட்பட, அங்கீகாரமற்ற கட்டடங்கள் அனைத்தையும், மாநில அரசுகள் நீக்க வேண்டும்' என, ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (85)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Abdul rahim - Thanjavur,இந்தியா
20-ஜன-201320:43:34 IST Report Abuse
Abdul rahim கட்சி காரனுங்கோ சிலையையும் ஆர்ச்சையும் மற்றும் பிளக்ஸ் வச்சு தானே அரசியல் பன்னுரானுங்கோ
Rate this:
Share this comment
Cancel
dori dori domakku dori - nisova,மான்ட்செரட்
19-ஜன-201320:05:26 IST Report Abuse
dori dori domakku dori அதே போல கல்யாணம் , காதுகுத்தல் , வயசுக்கு வந்தா , கருமாதி எல்லாத்துக்கும் வீட்டுல இருக்குறவன் போட்டோ எல்லாம் போட்டு ப்ளெக்ஸ் பேனர் போடறாங்க. வீட்டு குழந்தைங்க கூட இதுல போஸ் குடுகுதுங்க . கோவில்ல தர்மகர்த்தா , EO பேர்போட்டு போஸ்டர் அடிக்கிறாங்க . இன்னும் போட்டோ ஆரம்பிகல இது டெங்கு மாதிரி பரவுகிறது . ஏன் இப்படி பப்ளிசிட்டி வெறி ஒவோவ்று மனுஷனையும் ஆட்டி படிக்குதுன்னு தெரியல . தாம்பரம் தாண்டியாச்சுனா ஒவோவ்று வார்டுளையும் இம்சை தாங்கல .தினமலர் நிருபர் ஒரு ரவுண்டு அடிச்சு , கட்டுரை எழுத்தினா புண்ணியமா போவும்
Rate this:
Share this comment
Cancel
Mohamed Nawaz - Sakaka,சவுதி அரேபியா
19-ஜன-201319:56:38 IST Report Abuse
Mohamed Nawaz சாலைகளில், சிலைகள், கோவில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் அமைத்து, குடிமக்களின் உரிமையை பறிக்கக் கூடாது. இது போன்ற நடைமுறைகள் ஓரங்கட்டப்பட வேண்டும். இந்த தீர்ப்பு இந்திய வரலாற்றில் எழுதப்பட வேண்டிய தீர்ப்பு. எப்போதோ வந்திருக்க வேண்டிய தீர்ப்பு. அப்படியே இப்போதிருக்கும் சிலைகளையும் எடுத்து வேறேதாவது ஒரே இடத்தில் தனிதனி அறைகளில் வைத்தால் அவரவர் தலிகளுக்கு வந்து மாலை அணிவித்துவிட்டு போவார்கள்
Rate this:
Share this comment
Cancel
Abdul rahim - Thanjavur,இந்தியா
19-ஜன-201318:38:06 IST Report Abuse
Abdul rahim பொது இடங்களில் இடைஞ்சலாக உள்ள சிலைகள் விளம்பரங்கள் எல்லா வற்றையும் அகற்ற உத்தரவிட்டால் இன்னும் நன்றாக இருக்கும்
Rate this:
Share this comment
Cancel
Arumugam - Paris,பிரான்ஸ்
19-ஜன-201317:46:01 IST Report Abuse
Arumugam நாட்டிலுள்ள அத்தனை சிலைகளையும் முதலில் நீக்கி விட வேண்டும். இந்த சிலைகளால் எந்த பிரயோசனமும் இல்லை. ஆனால் போக்குவரத்துக்கு இடைஞ்சல். அதுபோல் கடற்கரையில் உள்ள கல்லறைகளையும் நீக்கிவிடவேண்டும். இனி யாருக்கும் கடற்கரையில் கல்லறை கட்டுவதை அரசு தடை செய்யவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Cheenu Meenu - cheenai,இந்தியா
19-ஜன-201317:37:21 IST Report Abuse
Cheenu Meenu இந்த உத்திரவை காட்டி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கருணாநிதி பொன் விழா வளைவுவை எடுத்து விடலாம். போக்குவரத்திற்கு மிகவும் இடைஞ்சலாக உள்ளது.
Rate this:
Share this comment
Cancel
A.s. Veluswamy Velu - Avanashi,இந்தியா
19-ஜன-201317:00:13 IST Report Abuse
A.s. Veluswamy Velu சுப்ரீம் கோர்ட், பெஞ்சு நீதிபதிகள் ஆர்.எம். லோதா மற்றும் எஸ்.ஜே. முகோபாத்யாயா ஆகியோர், கேரளாவில் தேசிய நெடுஞ்சாலையில் சிலை நிறுவுவது பற்றிய விசாரனையில் பிறப்பித்த உத்தரவில் சாலைகள் எந்த ஒரு நபரின் சொத் தும் அல்ல. சாலைகளில் இடையூறு இல்லாமல், சுதந்திரமாகச் செல்ல ஒவ்வொறு குடிமகனுக்கும் உரிமை உள்ளது. குடிமக்களின் உரிமையைப் பறிக்கக்கூடாது. போக்குவரத்துக்குப் பயன்படும் வகையில் தெரு விளக்குகள் அமைப்பது போன்றவற்றிற்கு எவ்விதத் தடையும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். இந்த நல் உத்தரவை நான் (ஒரு இந்திய குடிமகன்) மதிக்கிறேன். உள்ளாட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி, மாநில ஆட்சியாளர்கள் இதை மதித்துச் செயல்படுத்தினால் வீதிகளும், கிராமச் சாலைகளும், நெடுஞ்சாலைகளும், தேசிய நெடுஞ்சாலைகளும் ஏற்படுத்தப் பட்ட நோக்கம் முழுமையாகப் பயன்பாட்டிற்கு வந்து குடிமக்களும், ஆட்சியாளர்களும் போக்குவரத்தில் இடையூ றில்லாமல் பாதுகாப்பாகச் சென்று அவர்கள் கடமைகளை நிறைவேற்றி வீடு திரும்ப முடியும் என்பதில் கடுகு அளவும் சந்தேகமில்லை.
Rate this:
Share this comment
Cancel
p.boopathy enkira Boopathiyar - chennai,இந்தியா
19-ஜன-201316:37:13 IST Report Abuse
p.boopathy enkira Boopathiyar உச்ச நீதி மன்றத்தின் உன்னதமான உத்திரவு..,சிறப்பான நீதியின் மாட்சி..,இதுபோல் செய்திகள் மக்களுக்கு நீதியின் மேல் நம்பிக்கை வலுபெறுகிறது. அரசியல் கட்சிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். தேவையற்ற சிலைகள்..,வளைவுகள்..,கொடி மேடைக்கள் போன்றவற்றை அகற்றி சாலைகள்..,சந்திப்புகள்..,நடைபாதைகள் ஆகிய இடங்கள் மக்கள் நலத்திற்காக தூய்மை ஆகவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
v.sundaravadivelu - Tiruppur,இந்தியா
19-ஜன-201315:44:14 IST Report Abuse
v.sundaravadivelu இதற்கென்று ஓர் மியூசியம் அமைத்து அங்கே எல்லா தலைவர்களின் சிலைகளையும் வைத்து.. அதற்கு ஒரு என்ட்ரன்ஸ் பீஸ் வசூல் செய்தால் அதில் ஒரு வருமானம் தானே மாநில அரசுகளுக்கு?.. பொது இடங்களில் வேண்டுமானால் பறவைகள் மிருகங்கள், போன்ற சிலைகளை ஓர் அடையாளத்துக்கு அமைத்துக் கொள்ளலாமே?
Rate this:
Share this comment
dori dori domakku dori - nisova,மான்ட்செரட்
19-ஜன-201321:18:41 IST Report Abuse
dori dori domakku doriஎன்ட்ரன்ஸ் பீஸ் வசூலா , புது டெக்னிக்கா கிளப்பி விடாதீங்க , கிளிக் ஆச்சுனா பட்டைய கிளபிடுவாங்க நம்ம தலைங்க ....
Rate this:
Share this comment
Cancel
Berlioz - paris,பிரான்ஸ்
19-ஜன-201315:20:31 IST Report Abuse
Berlioz வரவேற்க தக்க தீர்ப்பு, தீர்ப்பு அமலக்கபடுவதையும் கொஞ்சம் கவனித்தால் நன்றாக இருக்கும், எல்லாவற்றிக்கும் நீதிமன்றத்தை எதிர் பார்த்துகொண்டு இல்லாமல் ஆள்பவர்களும் பூரண ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே இதற்கு விடிவுகாலம் வரும் தீர்ப்பு வழங்கிய நீதிபதியை பந்தாடாமல் இருந்தால் சரிதான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.