Jaya writes a letter to center | விமான நிலையத்துக்கு எம்.ஜி.ஆர்., பெயர் ; ஜெயலலிதாகடிதம் - Jayalalitha | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

விமான நிலையத்துக்கு எம்.ஜி.ஆர்., பெயர் ; ஜெ.,கடிதம்

Updated : ஜன 20, 2013 | Added : ஜன 18, 2013 | கருத்துகள் (250)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
"சென்னையில் திறக்கப்படவுள்ள, இரண்டாவது உள்நாட்டு விமான நிலையத்துக்கு எம்.ஜி.ஆர்., பெயர் வைக்க வேண்டும்' என, முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை: "சென்னையில் திறக்கப்படவுள்ள, இரண்டாவது உள்நாட்டு விமான நிலையத்துக்கு எம்.ஜி.ஆர்., பெயர் வைக்க வேண்டும்' என, முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து, விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் அஜீத் சிங்கிற்கு அவர் எழுதியுள்ள கடிதம்:சென்னையில் அதிகரித்து வரும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணிகளின் வசதிக்காக, இரண்டாவது உள்நாட்டு விமான நிலையத்தை கட்டியுள்ளது வரவேற்கத்தக்கது. தற்போதுள்ள, சென்னை உள்நாட்டு விமான நிலையத்துக்கு காமராஜர் பெயரும், சர்வதேச விமான நிலையத்துக்கு அண்ணா பெயரும் வைக்கப்பட்டுள்ளது.


இவர்களின் வரிசையில், முதல்வராக இருந்தவரும், தமிழக மக்களின் மனதில் என்றும் நிலைத்திருப்பவருமான எம்.ஜி.ஆர்., பெயரை, விரிவாக்கப்பட்ட உள்நாட்டு விமான நிலையத்திற்கு வைப்பது பொருத்தமாக இருக்கும். எனவே, விரிவாக்கப்பட்ட விமான நிலையத்தை திறக்கும் முன், எம்.ஜி.ஆர்., பெயர் வைப்பதற்கான, அறிவிப்பை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (250)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
p.saravanan - tirupur,இந்தியா
23-ஜன-201310:40:17 IST Report Abuse
p.saravanan ஊழல் மிகுந்த அரசியல் வாதிகள் மத்தியில் மக்கள் திலகம் எவ்வளவோ பரவாஇல்லை . முதலில் நல்ல பெயரை வாங்க வேண்டும் பிள்ளைகளே . நம்நாடு என்ற தோற்றத்தில் நாளை வளரும் முல்லைகளே.
Rate this:
Share this comment
Cancel
yaseen mubarak - bangalore,இந்தியா
22-ஜன-201301:01:35 IST Report Abuse
yaseen mubarak I think சென்னை உள் நாட்டு விமான நிலயம் 2 is the best name.Please don't keep any political leaders name (From ADMK, DMK, Congress, BJP and any other parties all over india) to any govt property. Please remember our anna, kamarajar, MGR are some of the best CM in tamil nadu .If now we keep MGR name to the airport after 50 years one Chief minister can request to keep Jayalalitha or Karunaniti name to some other new airport in chennai or tamilnadu. Best way to the name keep that city name i.e chennai international/domestic airpot 1,2,3.... madurai international/ domestic airport1,2,3....Trichy Inter/Dome 1,2,3.......coimbatore inter/dome 1,,2,3..... Infuture.....(i.e 2100) Yaseen Mubarak- Mandya
Rate this:
Share this comment
Cancel
Ganesh Punyakotti - Parlin,NJ,யூ.எஸ்.ஏ
20-ஜன-201302:38:24 IST Report Abuse
Ganesh Punyakotti இப்போ பேர் வைக்கிறது தான் பிரச்னையா? போய் புள்ளகுட்டிகளுக்கு ‌பேர் வையுங்கடா...
Rate this:
Share this comment
Cancel
Shan Velan - Ann Arbor,யூ.எஸ்.ஏ
20-ஜன-201301:29:04 IST Report Abuse
Shan Velan வள்ளுவன் தன்னை உலகினுக்கே-தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்றார் பாரதி. ஆகா வள்ளுவர்-பாரதி என்று வைத்தால் பொருத்தமாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Chandru K - Paris,பிரான்ஸ்
20-ஜன-201300:36:37 IST Report Abuse
Chandru K எம்.ஜி.ஆர். என்ன செய்தார்? என்று கேட்பவர்களுக்கு....... ஒரு சம்பவம்: இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து காங்கிரஸ் கட்சியே இந்தியாவை ஆண்டு கொண்டு வந்து இருந்தது. குறிப்பாக ஒரு குடும்பம் ( இங்கே திருவாரூர் குடும்பம், மன்னார்குடி குடும்பம், தைலாபுர குடும்பம் விஜயராஜ் குடும்பம் மாதிரி ) தலைமுறை வழியே ஆட்சி புரிந்து வந்தது. நெருக்கடி நிலை அமுல் படுத்தியதில் ஆட்சியை ஜனதா கட்சியிடம் இழந்தது....... பிறகு, உத்திரபிரதேச தொகுதியில் வெற்றி பெற்றதும் செல்லாது என உச்ச நீதிமன்ற தீர்ப்பால் திகைத்து போய் நின்ற முன்னாள் பாரத பிரதமர் இந்திரா மறுபடியும் பாராளுமன்றத்துக்கு அமரர் எம்.ஜி.ஆர். உதவியுடன் வெற்றி பெற்று போனார். இதுக்கும் எம்.ஜி.ஆர் மக்களுக்கு பணிபுரிந்ததுக்கும் என்ன சம்பந்தம் என் நினைக்கலாம்...... இங்குதான் சூட்சமமே அடங்கி இருக்கிறது. இந்திரா வெற்றி பெற்றது தமிழ் நாட்டில் அல்ல கர்நாடாகாவில். இத்தனைக்கும் எம்.ஜி.ஆர். ஒரு கன்னடரும் அல்ல. 1967 லேயே மக்கள் திலகத்தின் எங்க வீட்டு பிள்ளை பெங்களூரில் வெள்ளி விழா கண்டது. ( அப்போது மக்கள் தொகையும் மிக குறைவு ) அண்டை மாநிலத்தாலும் மக்கள் மத்தியில் அவருக்கு எந்த அளவுக்கு செல்வாக்கு இருந்தது என்பதற்கு இது ஒரு எடுத்து காட்டு. காவேரி தண்ணி பிரச்சனை வரும்போது அதனால்தான் அவரால் ஆட்சியில் இருந்தபோது எளிதாக தமிழ் நாட்டுக்கு தேவையான தண்ணிரை பெற முடிந்தது. அதுமட்டுமல்ல அங்கு இருந்த அனைத்து முதல்வருமே புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் மேல் தனி மதிப்பும் மரியாதையும் வைத்து இருந்தார்கள் ( ஹெக்டே அதிலும் முதல்வர் குண்டுராவ் எம்.ஜி.ஆரின் பரம ரசிகர் ) ஒரு முறை நடந்த சம்பவம் கன்னட பத்திரிகையில் வெளிவந்தது. கர்நாடகா நீர்பாசன துறை அமைச்சர் வீட்டுக்கு தொலைபேசியில் நான் மதிய சாப்பாட்டுக்கு பெங்களூர் வருவதாக எம்.ஜி.ஆர் சொன்னார். நாட்டுக்கே சாப்பாடு போடுகிறவர் நாம் வீட்டுக்கு சாப்பிட வருகிராரா என்று பதறி போய் தடபுடலாக ஏற்பாடு செய்ய சொல்லி குடும்பத்தோடு காத்திருந்தார். புரட்சி தலைவரும் மதிய விருந்தை ஒரு பிடி பிடித்து கொண்டு இருந்த போது, விக்கல் வந்தது. பதறி போய் உடனே தண்ணீர் தந்து இருக்கிறார்கள். ஆனால் நம் முதல்வர் மறுத்து விட்டார். எங்கள் தமிழ் நாட்டில் பயிர்கள் வாடுகிறது, திறந்து விடுகிறேன் என்று சொல்லுங்கள் நான் தண்ணீர் குடிக்கிறேன் என்று சொல்ல உடனே அமைச்சர் கர்நாடக முதல்வரை தொடர்பு கொள்ள.... உடனே தண்ணீர் திறந்து விட பட்டது. கடிதம் எழுதுவது, பேட்டி கொடுப்பது குறை சொல்வது இதெல்லாம் செய்ய மாட்டார்...... வாத்தியார் பாணியே தனி. யாரை எங்கே அடிக்கணுமோ அங்கே அடிச்சி எப்படி அடிக்கணுமே அப்படி அடிச்சி காரியத்தை கச்சிதமா முடிப்பார். இப்படிதான் மலையாளிகளுக்கே புட்டு கொடுத்து முல்லை பெரியாறு அணையை நவீன தொழில் நுட்ப முறையில் வலிமை படுத்தினார், ஆந்திராவில் அன்று ஆண்டவனாக பாக்கபட்ட என்.டி.ஆருக்கே ஆண்டவனே ஆண்டவனே என்று சொல்லி லட்டு கொடுத்து இந்திரா முன்பாக சென்னைக்கு கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தம் செய்தார். 2009 இல் மட்டும் மக்கள் திலகம் உயிரோடு இருந்திருந்தால், பக்கத்து தீவில் 1 1/2 லட்சம் தமிழ் மக்கள் காப்பாற்ற பட்டு இருப்பார்கள். அதனால்தான் அண்ணாவும் சரி ஆருயிர் நண்பர் என்று சொல்லி கொள்பவரும் சரி நேருவின் மகளாய் இருந்தாலும் சரி வேலுபிள்ளை மகனாய் இருந்தாலும் சரி இவர் நம் பக்கம் இருந்தால் வெற்றி நம் பக்கம் என்று அனைவரும் நம்பினார்கள். அதனால்தான் அன்றே அண்ணா அன்றே தீர்கதரிசனமாய் சொன்னார். இந்த கனி ( கனிமொழி அல்ல ) யார் மடியில் விழுமோ என்று எல்லாரும் ஏங்கி கொண்டு இருந்தார்கள். ஆனால் அது என் மடியில் வந்து விழுந்தது. நான் அதை என் இதயத்தில் எடுத்து வைத்து கொண்டேன். எம்.ஜி.ஆர். என் இதயக்கனி என்று" அதே போல் இன்று வங்க கடலோரம் அண்ணா சமாதி இடது பக்கத்தில் தமிழ் நாட்டின் ஒளிவிளக்கு கலங்கரை விளக்காய் நம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வாழ்ந்து கொண்டு இருக்கிறார்......விஞ்ஞானம் எவ்வளவு முக்கியமோ அந்த அளவு வரலாறும் முக்கியம். ஐரோப்பிய நாடுகளில் பொதுவாக வரலாற்றை சொல்லி கொடுத்து விட்டுத்தான் விஞ்ஞானம் போதிப்பார்கள். வாக்குகளுக்காக அம்மா சொன்னாலும் விமான நிலையத்துக்கு புரட்சி தலைவர் பெயர் வைப்பது நாம் வரும் தலை முறைகளுக்கு சொல்லும் சரித்திரமாகும். ஐரோப்பாவில் உள்ள மிகபெரிய மூன்று விமான நிலையங்களில் ஒன்று பாரிசில் உள்ள விமான நிலையம். இதற்க்கு இங்கு மக்கள் ஆட்சி புரிந்த சார்ல் தே கோல் CHARLES DE GAULLE என்று வைத்து இருக்கிறார்கள். இவர் சர்ச்சிலுடன் இணைந்து இரண்டாவது உலக போரில் ஹிட்லரை எதிர்த்து வென்றவர். பிறகு தேர்தலில் வெற்றி பெற்று பிரெஞ்சு அதிபராக பொறுப்பேற்றார். அறிவார்ந்த தினமலர் வாசகர்களே, உங்கள் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு மனசாட்சியை தொட்டு இப்போது சொல்லுங்கள் எம்.ஜி.ஆர். பெயரை வைக்கலாமா....... வேண்டாமா....?
Rate this:
Share this comment
dori dori domakku dori - nisova,மான்ட்செரட்
20-ஜன-201307:52:16 IST Report Abuse
dori dori domakku doriமகாபாரதத்தில் ஒரு கதை ஏழைகளுக்கு வாரி வழங்கி தான தர்மங்கள் அளவில்லா செய்த மன்னன் முடிவில் பிரம லோகத்தை அடைந்து போகங்களை அனுபவிகின்றான் . ஆனால் ஒவோவ்று நாளும் மதிய அளவில் ஆள் "அப்ஸ்கான்ட் " ஆவது வழக்கம் . ஒரு நாள் பொருக்க முடியாத சபையில் இருந்த தேவர்கள் முனிவர்கள் பிரும்மாவை கேள்வி கேட்க்க . அவர் இவர்களை அவன் கிளம்பிய வுடனே , இவர்களை இமய மலை சாரலில் ஒரு நீர் நிலை அருகில் அழைத்து செல்கின்றார் . அங்கு காட்சியை கண்டு அனைவரும் திடுகின்றனர் . காட்சி : மன்னன் நீர் நிலையில் உள்ள உடலை , வெட்டி தின்கின்றான் . இன்னும் நெருங்கி பார்க்கும்போது அந்த இறந்த உடல் அவன் உருவத்தை கொண்டுள்ளது . கடைசியில் பிரம்மனை - என்ன கொடுமை இது என அனைவரும் கேட்க்க . பிரம்மா சொல்கிறார் இவன் அரசாட்சி நடத்திய காலத்தில் "எல்லா தான தர்மங்களும் செய்தான் " அதனால் அதன் பலனாக உயர்ந்த இந்த பிரம்ம லோகத்தை அடைந்தான் . ஆனாலும் ஒவோவ்று நாளும் மதிய அளவில் பசி பசி என என்னிடம் வேண்டுவான் . இங்கோ பசி தாகம் என்பதே கிடையாது . ஜான கண் கொண்டு பார்த்தபோது இவன் பசி என்று வந்தவனுக்கு இவன் வாழ் நாளில் ஒருநாளும் "சோறு இட்டது கிடையாது " அந்த பாவமானது பசி ரூபத்தில் இவனை தொடர்கின்றது . அதற்கு இவனுக்கு இவன் உடலை ஒவோவ்று நாளும் உண்டு பசியாரவேண்டிய விதி ஏற்பட்டது . என இக்கதை முடிவு பெறுகின்றது . சந்துரு இப்போது உங்கள் விஷயதிருக்கு வருவோம் : திரு ராமச்சந்திரன் அவர்களுக்கு ஆயிரம் பெருமைகள் இருந்தாலும் , மனிமகுடத்தின் சிகரம் வைரகல் போல - தான் உண்ணும் முன்பு அனைவருக்கும் உணவு படைத்த பெருமை இன்றளவும் அவர் புகழை மங்காமல் காப்பாற்றுகிறது. ஆதலால் நீங்கள் கேட்கும் கேள்விக்கு பதில் - வைக்கலாம் , வைக்கலாம்...
Rate this:
Share this comment
Cancel
udanpirappu3 - chennai ,இந்தியா
19-ஜன-201323:21:19 IST Report Abuse
udanpirappu3 ஜெய்,சேகரன் எல்லாம் ஜெயலலிதாவை பிரதமர் நாற்காலியில் உட்காரவைக்க நாள் குறித்துள்ளனரோ????MGR நாடு என ஏன் வைக்கக்கூடாது ???? ஜெயா பிரதமரான உடன் முதல் பாராளுமன்றத்தீர்மானமாக நிறைவேற்றுவர் என திடமான நம்பிக்கையுடன் இருக்கவும் ???????
Rate this:
Share this comment
Cancel
Gilbert karunagaran - Istres ,பிரான்ஸ்
19-ஜன-201322:50:49 IST Report Abuse
Gilbert karunagaran 46 ஆண்டுகளாக திரைப்படத்துறையை சேர்ந்த தலைவர்கள் மட்டுமே முதல்வர் பதவியை வகிக்க தகுதி பெற்ற, தமிழகத்தின் தலைநகர் விமான நிலையத்திற்கு, முதல் சினிமா படத்தை உலகுக்கு அறிமுகம் செய்த "LUMIERE Brothers" அவர்களின் பெயரை சூட்டி கௌரவிக்கலாம்
Rate this:
Share this comment
Cancel
MSG - Kanagawa,ஜப்பான்
19-ஜன-201322:26:06 IST Report Abuse
MSG முக்கிய பிரச்னைகளை கவனத்தில் கொள்ளுங்கள். மின்சாரம் தண்ணீர் போன்ற ஹை லெவல் பிரச்னைகளை தீர்க்கறத உட்டுட்டு போகாத ஊருக்கு வழியத் தேடாதீர்கள்.
Rate this:
Share this comment
Cancel
navasathishkumar - MADURAI,இந்தியா
19-ஜன-201322:02:38 IST Report Abuse
navasathishkumar ஜெயா வராங்க ன்னு ஒரு மந்திரி சொன்னா அவங்க பதவி போயிரும் , "அம்மா" னு தான் கூப்பிடனும் , கலைஞர் னு சொன்னாதான் கருணாநிதிக்கு பெருமை , டாக்டர் னு சொன்ன மருத்துவர் ஐயாவுக்கு மகிமை , ஏர்போர்ட்டுக்கு பேர்வச்சா கால் டாக்ஸி முதல் சுண்டக்கடலை காரங்க வரை எங்க தலைவன் பேரை சொல்ல வைக்க இந்த கொடுமையா ? அம்மா நீங்க ஜெயான்னு மக்களை அழைக்க அனுமதிங்க அப்புறம் தலைவன் பெயரை வைங்க ...வெள்ளைக்காரன் கூட தலைவர்ன்னு தான் அந்த ஏழை பங்காளனை அழைக்கவேண்டும் நன்றிமா -மதுரை என். நவசதீஷ் குமார் .
Rate this:
Share this comment
Cancel
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
19-ஜன-201320:49:07 IST Report Abuse
Baskaran Kasimani தலைவர்களின் பெயரை இடத்துக்கும் பொருள்களுக்கும் வைத்துத்தான் அவர்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் நிச்சயம் அவர்கள் கூட அதை விரும்ப மாட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை