Real Story | இரக்கமுள்ள மனசுக்கு இன்னொரு பெயர் மகேந்திரன்| Dinamalar

இரக்கமுள்ள மனசுக்கு இன்னொரு பெயர் மகேந்திரன்

Added : ஜன 27, 2013 | கருத்துகள் (42)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

முன்பெல்லாம் தெருவோரங்களில் குப்பைகள்தான் கிடக்கும். ஆனால் இப்போதோ பிறந்த குழந்தைகளும், நடமாட முடியாத வயதானவர்களும் கூட குப்பை கூளங்கள் நடுவே மக்கியபடி கிடக்கின்றனர்.

கிடக்கின்றனர் என்பது கொஞ்சம் மரியாதையான வார்ததை, உண்மையில் வீசியெறியப்படுகின்றனர்.

பொதுமக்களைப் பொறுத்தவரை , வீசியெறியப்பட்ட முதியவர்கள் ரத்தகாயமின்றி இருந்தால் ஒரு விநாடி நின்று பார்த்து, "ஐயோ பாவம் ' என சொல்லி செல்வார்கள், அதே வயதானவர்கள் அருவறுப்பான தோற்றத்துடனோ, ரத்த காயத்துடனோ, ஆடைகள் களைந்த நிலையிலோ, நோய் தாக்கிய நிலையிலோ இருந்தால், திரும்பி கூட பார்க்காமல் வேகவேகமாக நடப்பார்கள். அந்த முதியவர்கள் மனநோயாளியாக இருந்துவிட்டால் போதும், எதிர்திசையில் ஒட்டமெடுப்பார்கள். அவர்களைச் சொல்லியும் குறையில்லை அம்மா, மனைவி, குழந்தைகளிடம் கூட பேச நேரமில்லாத அவசர யுகத்தில் வசிக்கின்றனர்.

பொருள் தேடும் உலகில் உயிர்கள் மீதான பாசமும், நேசமும் அவ்வளவுதான்.ஆனால் எல்லோரும் அப்படியில்லை, ஒரு சிலருக்குள் இன்னமும் மனிதத்தன்மை மரித்து போய்விடாமல்தான் இருக்கிறது,அவர்களில் ஒருவர்தான் கோவை காந்திபுரத்தைச் சேர்ந்த முப்பத்தைந்து வயதாகும் மகி என்கின்ற மகேந்திரன்
கடந்த 2009ம்ஆண்டில் இவரது சகோதரி ஒருவர் திடீரென உடல்நலம் குன்றி ரோட்டில் விழுந்து கிடந்த போது, பலரும் வேடிக்கை பார்த்தார்களே தவிர ஏன் என்று கேட்டு ஒருவரும் உதவி செய்யவரவில்லை.

இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு அதனால் பாதிக்கப்பட்ட மகேந்திரன் அன்று முதல் ரோட்டில் யார் ஒதுங்கிக்கிடந்தாலும், உடனே என்ன ஏது என்று கேட்டு அவர்களை உரிய உறவினர்களிடமோ, காப்பகத்திலோ, ஆஸ்பத்திரியிலோ சேர்த்து வருகிறார்.
வீதியோரம் கிடப்பவரை பார்த்ததும் முதலில் அவருக்கு நல்ல உணவு கொடுத்து தெம்பு ஏற்படுத்துவார், பின் ஆணாக இருந்தால் முடிவெட்டி, முகச்சவரம் செய்வார், நன்றாக குளிக்க வைத்து, புது உடைவாங்கிக்கொடுத்து விடுவார், பார்ப்பவர்கள், "கொஞ்ச நேரத்திற்கு முன் ரோட்டில் கிடந்த ஆளா இது!' என்று ஆச்சசரியப்படும் அளவிற்கு ஆளை மாற்றிவிடுவார் .

அதன் பிறகு அவர்கள் அருகில் அமர்ந்து விசாரிப்பார், முடிந்தவரை அவர்களை, அவர்களது உறவினருடன் சேர்த்து விடுவார், முடியாத போது காப்பகங்களிலும், சிகிச்சை தேவை எனில் ஆஸ்பத்திரியிலும் சேர்த்துவிடுவார்.
காப்பகத்தில் சேர்த்தாலும் சரி, ஆஸ்பத்திரியில் சேர்த்தாலும் சரி , சேர்த்ததோடு தனது கடமை முடிந்ததாக கருதாமல், அவ்வப்போது போய் பார்த்து ஒரு உறவினராக, நண்பனாக நடந்து கொள்வார்.

பதினெட்டு வருடங்களுக்கு முன் காணாமல் போன மகனை நினைத்து அழுதவர்கள் முன் இந்தாருங்கள் உங்கள் பிள்ளை என்று நிறுத்தி, அந்த குடும்பத்தின் நீண்ட கால வேதனை கண்ணீரை, ஆனந்த கண்ணீராக மாற்றியுள்ளார். மன நோயாளிகள் பலர் இவரது அன்பால் மன நோய் நீங்கிப்பெற்று தற்போது திருமணம் முடிந்து நல்லபடியாக இருக்கின்றனர், தெருவோரம் கேட்பாரற்று கிடந்த பாட்டிகளும், தாத்தாக்களும் இப்போது காப்பகத்தில் உற்சாகமாக வலம் வருகின்றனர்.
ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனில்லாமல் இறந்துபோய் "அநாதை பிணங்கள்' என முத்திரை குத்தப்படுபவர்களின் உடல்களை, "நானே அவரது உறவினர் என்று தானே வலியப் பெற்று' அவர்களது உடலை மாலை மரியாதையுடன் நல்லடக்கம் செய்தும் வருகிறார்.

தீபாவளி பொங்கல் என்றால் உறவினர்களை அழைப்பது போல அரவாணிகள், உடல் ஊனமுற்றவர்ககள், முதியவர்களை அழைத்து விருந்து கொடுத்து அவர்களை மகிழ்விப்பதன் மூலம் குடும்பத்துடன் தானும் மகிழ்ந்து வருகிறார்.
ஈர நெஞ்சம் என்ற அமைப்பை ஏற்படுத்தி இத்தகைய தொண்டாற்றிவரும் மகேந்திரனின் இந்த பணிக்கு பெரும் பலமாக இருந்து உதவுபவர்கள் பாலசந்திரன், பரிமளா வகீசன், தபசுராஜ், சுரேஷ் கணபதி, கணேஷ் குமார், மணிமேகலை, வசந்திரா, மோகனசுந்தரம், செண்பகம், பழநியப்பன் ஆகிய நண்பர்களும், இவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று நம்பி தோள்கொடுக்கும் அன்னை தெரசா காப்பகம், பிரபஞ்ச அமைதி சேவாலயம், சாய்பாபா முதியோர் இல்லம், அன்பாலயம், சாய் முதியோர் இல்லம், கருணாலயம் ஆகிய காப்பகங்களும்தான்.

இவரால் நலமடைந்து பலனடைந்தவர்களின் பட்டியல் மிக நீளமானது. இப்போது கோவை வீதியில் யாரேனும் விழுந்து கிடந்தால், "கூப்பிடு மகேந்திரனை' என்று சொல்லுமளவிற்கு பிரபலமடைந்துவிட்டார்.
ஒரு வார்த்தை மகேந்திரனை வெறுமனே கூப்பிட்டு வாழ்த்தினால் கூட போதும், இன்னும் ஆயிரம் பேரை காப்பாற்றும் தெம்பும், திராணியும் அவருக்கு கிடைத்துவிடும், மகேந்திரனை வாழ்த்த விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள; 9843344991, 9600400120.

- எல்.முருகராஜ்

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
siva - CBE,இந்தியா
09-மார்-201316:00:34 IST Report Abuse
siva அண்ணா நீங்க 100 வருஷம் குடும்பத்துடன் நல்லா இருக்கனும். வாழ்த்துக்கள். god bless you . உங்கள் சேவை தொடர வாழ்த்துகள்...
Rate this:
Share this comment
Cancel
Carolin Ajitha - Sänna,ஏமன்
04-மார்-201303:11:19 IST Report Abuse
Carolin Ajitha வாழ்த்துகள்
Rate this:
Share this comment
Cancel
rajeshkumar - namakkal,இந்தியா
01-மார்-201317:11:48 IST Report Abuse
rajeshkumar மகேந்திரன் அண்ணா...உங்களை போன்றவர்கலோடு உழைக்க நானும் வருகிறேன்.
Rate this:
Share this comment
Cancel
swaminathan saudi arabia - dammam,சவுதி அரேபியா
26-பிப்-201322:09:27 IST Report Abuse
swaminathan saudi arabia அன்புள்ள அண்ணன் மகேந்திரன் அவர்களுக்கு வணக்கம் இதை படிக்கும் நண்பர்கள் உங்களை போல் இல்லாவிட்டாலும் அவரவர் தாய்தந்தையரை முதியோர் இல்லத்துக்கு அனுப்பாமல் பார்த்து கொண்டால் நீங்களும் மகிழ்ச்சியடிவிர்கள் என நம்புகிறேன் எல்லோரும் மனம் மாறி உங்கள் பணிசுமையைகுறைக்க வேண்டும் என்பதே என் ஆசை நன்றி வணக்கம் வாழ்க பல்லாண்டு
Rate this:
Share this comment
Cancel
Kovai kaliyana raman. Abu dhabi. - Abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
19-பிப்-201304:37:03 IST Report Abuse
Kovai kaliyana raman. Abu dhabi. great work , we also want to share your great work , please s your era nenjam trust bank account no , I want to share your expense... I will s money to your trust ..
Rate this:
Share this comment
Cancel
Lalitha Kannan - Coimbatore,இந்தியா
18-பிப்-201305:36:55 IST Report Abuse
Lalitha Kannan உங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள் மகேந்திரன் உங்களுடன் இணைந்து சேவை செய்ய விரும்புகிறேன்
Rate this:
Share this comment
Cancel
mahendiran.P - coimbatore,இந்தியா
15-பிப்-201317:10:12 IST Report Abuse
mahendiran.P 03/02/12 காலை தினமலர் வாரப்பத்திரிக்கையில் வந்த செய்தியை தொடர்ந்து அலைபேசியில் வாழ்த்துக்கள் குவியத்தொடங்கியது. யார் யாரோ வாழ்த்தினார்கள். என்னவெல்லாமோ சொல்லி வாழ்த்தினார்கள். நூறாண்டுகள் இல்லை இருநூறாண்டுகள் வாழவேண்டுமென்று வாழ்த்துகிறார்கள். கடவுள் என்றார்கள். மனிதாபிமானத்தின் மறு உருவம் என்றார்கள். இரக்கத்தின் இன்னொரு பெயர் என்றார்கள். எல்லா வாழ்த்துக்களும் என் செவிகளை தீண்டின. மனம் மட்டும் தவித்தது. இது ஒருவர் மட்டும் செய்யும் செயலோ சாதனையோ இல்லையே.... ஒவ்வொருவரும் தங்கள் கடமையை உணர்ந்து தங்கள் பிள்ளைகளை தாங்கள் அரவணைத்தால், தங்கள் பெற்றோரை தாங்கள் அரவணைத்தால் இது போன்ற செயல்களுக்கு இடமே இல்லையே. ஆதரவற்றவர்கள் என்பதே இல்லாமல் இருக்குமே. இதை தொடர்ந்து சில செயல்கள் மனதுக்கு சற்று இதமளித்தது. அந்த வாரப்பத்திரிக்கையை பார்த்த சில இளைஞர்கள் இனி தாங்களும் இது போல் செயல் பட போவதாக தெரிவித்தனர். ஈரநெஞ்சம் போல் ஒரு அமைப்பை உருவாக்கி தாங்களும் தங்களால் இயன்ற வரையில் தங்கள் கடமையை செய்யப்போவதாக தெரிவித்தனர். மேலும் பல்வேறு பள்ளிகளில் இந்த கட்டுரையின் சாராம்சம் குழந்தைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன் பின் குழந்தைகளும் அனைவரும் தாங்கள் தங்கள் பெற்றோரை கை விட்டு விடாமல் காலம் முழுதும் அரவணைத்து காப்போம் என்று உறுதி எடுத்துக் கொண்டனர். கடந்த ஐந்து நாட்களாக வீதியில் விடப்பட்ட தாயை இந்த கட்டுரையை படித்துவிட்டு மீண்டும் தங்களது தாயை அழைத்துக்கொண்டு சென்றார்கள் என்பதை கேட்க்கும் போது தினமலரின் கட்டுரையின் வெற்றியை உணர்ந்தேன். எனக்கு அழைத்த அநேகம் பேர் 70 வயதை கடந்த தாத்தா பாட்டி, அந்த அனைவருக்கும் மரண பயத்தை காட்டிலும் தனிமை என்ற பயமே கொல்கின்றதை முதியவர்களின் கண்ணீரால் உணரமுடிந்தது. என்னை வாழ்த்தியவர்களில் ஒருவர் மட்டும் சொன்னது மனதில் பதிந்தது. மனித நேயம் என்பதே மறைய வேண்டும், உங்கள் பாரம் குறைய வேண்டும் என்றார் அவர். ஆமாம் அனைரும் தங்கள் குழந்தைகளையும், தங்கள் பெற்றோர்களையும் பாசமுடன் பராமரித்து வந்தால் தங்கள் கடமையை சரியாக செய்தால் ஆதரவற்றவர்கள் என்பவர்களே இருக்க மாட்டார்கள். பிறகு எதற்கு மனித நேயம் தேவைப்படும்.? அப்படி ஒரு நிலைமை வரவேண்டும். அதுவே என் செயல்களுக்கு கிடைக்கும் வெகுமதியாக நான் கருதுகிறேன். நன்றி தினமலர்ருக்கு நன்றி மனம் மாற்றிய மனிதர்களுக்கு நன்றி என்னை பெற்ற அம்மா அப்பா அவர்களுக்கு நன்றி என் நண்பர்களுக்கு நன்றி ஈரநெஞ்சம் உறுப்பினர்களுக்கும் நன்றி ஈரநெஞ்சம் கொண்ட அனைவருக்கும் வணங்குகிறேன்... ~மகேந்திரன்
Rate this:
Share this comment
Cancel
Madurai murugesh - Madurai,இந்தியா
13-பிப்-201312:43:15 IST Report Abuse
Madurai murugesh இறைத்தூதருக்கு வணக்கம். யாருக்கும் கிடைக்கவொன்னா மன நிறைவும், மகிழ்ச்சியும் உங்களைச்சுற்றி இறைந்துகிடக்கிறது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உங்கள் செயல், உங்களுக்கு நிறைந்த நிம்மதியும் சந்தோசமும் கிடைக்கச் செய்கிறது. அதுவே உங்களைச்சர்ந்தோரிடமும் பரவுகிறது. ஒவ்வொரு மனிதனும் உங்களைப்போல் இருக்கத்தேவையில்லை. அவரவர் உறவுகளையாவது இந்தமாதிரி தவிக்கவிடாமல் பாதுகாத்துக்கொண்டால் போதும். இந்தநிலை மாறும். அவை குறைய வேண்டும் என்றும் உங்கள் பணி அதனால் குறைந்து போகட்டும் என்றும் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel
ravi belliraj - Ooty,இந்தியா
11-பிப்-201311:20:34 IST Report Abuse
ravi belliraj திரு மகேந்திரன் அவர்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள். நீங்கள் நீடுழி வாழ்க
Rate this:
Share this comment
Cancel
mirudan - kailaayam,இந்தியா
11-பிப்-201310:39:42 IST Report Abuse
mirudan இவர் போன்ற மனிதர்களால் தான் நாட்டில் கொஞ்சமாவது மழை பொழிகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை