சென்னை : மாநிலத்தின், மொத்த மின் உற்பத்தி, 10 ஆயிரம் மெகாவாட்டை எட்டியது. கடந்த சில நாட்களாக, மின் உற்பத்தி அதிகரித்து வருவதால், மாவட்டங்களில் நிலவும் மின்வெட்டு குறைந்து வருகிறது. தமிழகத்தில் நிலவும் 4,000 மெகாவாட் மின் பற்றாக்குறையால், பல மாவட்டங்களில், 14 மணி நேரத்திற்கு மேலாக, மின் தடை உள்ளது. பருவ மழை பொய்த்தது உள்ளிட்ட பல காரணங்களால், கடந்தாண்டு இறுதி வரை, 7,000 முதல், 8,000 மெகாவாட் மட்டுமே, மின்சாரம் உற்பத்தியானது.
கடந்த சில நாட்களாக, 10 ஆயிரம் மெகாவாட் அளவிற்கு, மின் உற்பத்தி அதிகரித்தது. நேற்று காலை நிலவரப்படி, மொத்த மின் உற்பத்தி, 9,538 மெகாவாட்டாக உயர்ந்தது. மின் உற்பத்தி அதிகரிப்பால், பிற மாவட்டங்களில், மின் வெட்டு நேரம் ஓரளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மின்வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "புதிய மின் உற்பத்தி நிலையங்களிலிருந்தும், மத்திய தொகுப்பிலிருந்தும் மின்சாரம் கிடைப்பது சற்று அதிகரித்துள்ளது. மின் உற்பத்தி உயர்வால், மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டு உள்ளது' என்றார்.
கோடை காலம் துவங்க, இரண்டு மாதம் உள்ளது. அப்போது, மின் தேவையின் அளவு உயர்ந்து, மின்வெட்டு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என்ற கருத்தும்நிலவுகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.