கோவை விலாங்குறிச்சியைச் சேர்ந்த பத்து வயதான பிரதீபா, அங்குள்ள பள்ளி ஒன்றில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். அப்பா பூவராகவன் கூலித்தொழிலாளி. அன்றாடம் சம்பாதித்ததால்தான் குடும்பத்தை நடத்தமுடியும்.
சிரமமான சூழ்நிலையில் வளர்ந்து வந்தாலும் பிரதீபாவிற்குள் ஒரு ஆற்றல் உள்ளது. அந்த ஆற்றல் யோகா கலையின் மூலம் வெளிப்பட்டுள்ளது. மாநில அளவில் நடந்த போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றதும் அனைவரும், "யாரது பிரதீபா' என்று கேட்டு திரும்பிப் பார்த்தனர், மாநில சாதனை படைத்த கையோடு குஜராத்தில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொண்டு, மூன்றாவது இடத்தை பெற்றதும் திரும்பிப் பார்த்தவர்கள் பிரதீபாவை விரும்பி பாராட்டினர்.
தற்போது மேமாதம் மலேசியாவில் நடக்க உள்ள சர்வதேசச போட்டிக்கு தேர்வாகியுள்ளார். இதற்கான கடுமையான பயிற்சியிலும் ஈடுபட்டுள்ளார். வறுமை காரணமாக பிரதீபாவின் திறமை தடைபட்டுவிடக்கூடாது என்பதற்காக "ஈரநெஞ்சம்' அமைப்பினர் முயற்சி எடுத்துள்ளனர், அவர்களது முயற்சி பலன்தரட்டும்.சர்வதேச போட்டியில் கலந்து கொண்டு சாதனை படைக்க பிரதீபாவிற்கு வாழ்த்துக்கள்.
- எல்.முருகராஜ்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
தமிழக அரசும் இந்த பெண்ணிற்கு முடிந்த உதவிகளை செய்து பதஞ்சலி முனிவர் நம் பாரத நாட்டிற்க்கு அளித்த அரும் பெரும் பொக்கிஷமான யோகாசன கலையை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தனி பாடமாக வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.ஈர நெஞ்சம் அமைப்பினர் முயற்சி பாராட்டுக்குரியது. வாழ்க நீவிர் பல்லாண்டு என இறைவனை இறைஞ்சும். ஏழைகளுக்கு செய்யும் தொண்டு இறைவனுக்கு ஆற்றும் பணி என மனதில் உறுதி கொண்டு உங்கள் பணி சிறக்க வாழ்த்தும்.
யோகக்கலை பதஞ்சலி முனிவர் அளித்தது அல்ல அவர் காலத்துக்கு முன்பே இது பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது .... அதன் பெயர் ஹதயோகம் .... இதனுடன் புலனடக்கம் (குறிப்பாகப் பிரம்மச்சரியம்) கடைபிடிப்பதன் மூலம் குண்டலினி எழுச்சி ஏற்படுகிறது .... ஹதயோகத்தில் முக்கிய அம்சமே வித விதமான முத்திரைகள், மற்றும் ஆசனங்கள் .... நீங்கள் பதஞ்சலி அருளியதாகக் குறிப்பிடும் யோகம் (யோகம் என்ற வட மொழிச் சொல்லுக்குத் தமிழில் "இணைப்பு" என்று பொருள்.), ராஜயோகம் என்று அழைக்கப்படுகிறது .... ராஜயோகம் ஆரோக்கியத்துடன்,,,,, வீடுபேறும் அளிக்க வல்லது ,.... தூய்மையான நோக்கமுடைய (அதாவது ஆயுளை நீட்டிக்க மற்றும் விரும்பியோரை வசீகரிக்க என்ற பழுதான நோக்கங்கள் இல்லாமல்) ஹதயோகத்தை ராஜயோகத்தின் ஒரு பகுதி எனலாம் .......

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.