புதுடில்லி
: நடப்பு நிதியாண்டில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி
வீதத்தை, 8.5 சதவீதமாக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.மத்திய அரசு
வட்டாரங்கள் கூறியதாவது: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு, முந்தைய
நிதியாண்டில், 8.25 சதவீத வட்டி வழங்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில், இந்த
வட்டியை அதிகரிக்க வேண்டும் என, தொழிலாளர்கள் தரப்பில், கோரிக்கை
எழுந்துள்ளது.
இந்நிலையில், இது தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்க,
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின், மத்திய அறக்கட்டளை வாரிய
(சி.பி.டி.,) கூட்டம், வரும், 15ம் தேதி நடக்கவுள்ளது. அதில், தொழிலாளர்
வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்படும்.
நடப்பு நிதியாண்டுக்கான வட்டி வீதம், 8.5 சதவீதமாக நிர்ணயிக்கப்படுவதற்கான
வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வருங்கால வைப்பு நிதியில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு வழங்கப்படும் வட்டி வங்கிகளில் நீண்ட கால வைப்பு நிதிக்கு வழங்கப்படும் வட்டிக்கு குறையாமல் 9% வழங்கவேண்டும் .மத்திய அறக்கட்டளை வாரிய உறுப்பினர்கள் இதனை மிகுந்த கருணையுடன் விவாதித்து முடிவு எடுக்க வேண்டும் .இதில் முக்கியமாக ஓய்வூதியம் பெறுபவர்களின் நிலையை சமூக அக்கறையுடன் பரிசீலித்து ஓய்வூதியத்தை உயர்த்துவது சம்மந்தமாக தீர்வு காண வேண்டும் .குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாயும் அதிக பட்சம் ஆயிரத்தி ஏழு நூறு ரூபாயும் பெற்று வருவது மிக மிக வேதனையான விஷயம் என்பதை நினைத்து முடிவு எடுக்க வேண்டும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.