DMK lambasts SL Prez ruling out greater autonomy for Tamils | ராஜபக்சேவின் சுயரூபத்தை இப்போதாவது புரிந்து கொள்ளுமா மத்திய அரசு: கருணாநிதி ஆதங்கம்| Dinamalar

ராஜபக்சேவின் சுயரூபத்தை இப்போதாவது புரிந்து கொள்ளுமா மத்திய அரசு: கருணாநிதி ஆதங்கம்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
DMK lambasts SL Prez ruling out greater autonomy for Tamils ராஜபக்சே, கருணாநிதி, கண்டனம்

சென்னை: மத்திய அரசு இப்போதாவது விழித்துக்கொண்டு ராஜபக்சேவின் சுய உருவத்தையும், குணத்தையும் புரிந்து கொண்டு, தமிழர்களின் உரிமைகளையும், வாழ்வாதாரத்தையும் காப்பாற்றிட முன்வர வேண்டும் என, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, தி.மு.க., தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலங்கையில் 65வது சுதந்திர தின விழாவில் பேசிய அந்நாட்டு அதிபர் ராஜபக்சே, தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் தர முடியாது என்றும், நாட்டை இனரீதியாக பாகுபடுத்துவது என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என்றும் அறிவித்துள்ளார். மேலும், இன வேறுபாடுகள் குறித்தும், தமிழர்கள், சிங்களர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகியோரின் கலாச்சாரத்தைப் பற்றியும் இந்த பூனையும் பால் குடிக்குமா என கேட்குமளவுக்கு பேசியிருக்கிறார். லட்சக்ணக்கான தமிழர்களை படுகொலை செய்து, லட்சக்கணக்கான தமிழர்களை இலங்கையிலிருந்து அகதிகளாக புலம் பெயரச் செய்ததோடு, அவர்களின் வாழ்வாதாரத்தையும், வீடுகள், நிலங்கள் மற்றும் அடிப்படை உரிமைகளைப் பறித்து விட்டு, நாட்டை சர்வாதிகாரப் பாதையில் செலுத்தி வரும் ராஜபக்சேவை சர்வதேச குற்றவாளியென உலக நாடுகள் பார்க்கின்றன.

சிங்கள பேரினவாத சின்னமான ராஜபக்சே, தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்குவதாக இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு உறுதி மொழி அளித்திருந்தது. தற்போது இந்த அறிவிப்பின் மூலம் அதை ராஜபக்சே மீறியிருக்கிறார். இதற்காக உலகெங்கும் வாழும் தமிழர்களும், இந்தியாவும், சர்வதேச அமைப்புகளும் கண்டனம் தெரிவிக்க வேண்டும். கடந்த 1987ம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவுடன் இலங்கை ஒப்பந்தம் ஒன்றை செய்தது. ஆனால் 25 ஆண்டுகளுக்குப்பிறகும் இதுவரை அந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்படவில்லை. ஒப்பந்தங்களை நிறைவேற்றாமல், அதற்கு எதிரான காரியங்களை மட்டுமே தற்போது இலங்கை செய்து வருகிறது. இப்போதாவது மத்திய அரசு விழித்துக்கொண்டு ராஜபக்சேவின் சுய உருவத்தையும், குணத்தையும் புரிந்து கொண்டு, தமிழர்களின் உரிமைகளையும், வாழ்வாதாரத்தையும் காப்பறிட முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்". இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (130)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Elangovan Govindasamy - Jacksonville,யூ.எஸ்.ஏ
06-ஏப்-201315:25:46 IST Report Abuse
Elangovan Govindasamy ராஜபக்ஷவை புரிந்துகொள்ளவேண்டியது கருணாநிதியா அல்லது மத்திய அரசா
Rate this:
Share this comment
Cancel
P. Kannan - Bodinayakkanur,இந்தியா
07-பிப்-201313:01:30 IST Report Abuse
P. Kannan இதில் இருந்து தெரிவது என்னவென்றால் அரசியல்வாதிகளுக்கு வயது நிர்ணயம் செய்து கட்டாய ஒய்வு அளிக்க வேண்டும். வீட்டில் தான் இந்த வயது ஆட்கள் நொச்சு நொச்சுன்னு பேசிக்கொண்டு இருப்பார்கள் என்றால் இவர் பொது இடங்களில் இது போல் பேசி மக்களை மிகவும் துன்புறுத்துகிறார். இதற்கு ஒரு தடை உத்தரவு போடுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Arvind Bharadwaj - Coimbatore,இந்தியா
07-பிப்-201309:27:18 IST Report Abuse
Arvind Bharadwaj மேற்கண்ட அறிக்கையை எழுதி வெளியிட்ட பின்னர் இந்த மனிதர் நினைத்துக் கொண்டிருப்பார், இன்னுமாடா நம்பள இந்த உலகம் நம்புது என்று.
Rate this:
Share this comment
Cancel
Chandra Sekaran - manama,பஹ்ரைன்
07-பிப்-201309:06:44 IST Report Abuse
Chandra Sekaran என்ன மறுபடியும் முதல்லேருந்தா ?????(நன்றி திரு வடிவேலு) இதையெல்லாம் கண்டுக்காதின்கப்பா
Rate this:
Share this comment
Cancel
LoLLu ThaaThaa - ?????????,இந்தியா
07-பிப்-201308:09:32 IST Report Abuse
LoLLu ThaaThaa "ராஜபக்சேவின் சுயரூபத்தை இப்போதாவது புரிந்து கொள்ளுமா மத்திய அரசு" - தலைவரே, பதவியில் இருந்தால் வாய மூடிகிட்டு இருக்காது, பதவி இல்லைன்னா உள் குத்து குத்தும் உங்க சுயரூபத்தை புரிஞ்சுகிட்டோம்
Rate this:
Share this comment
Cancel
Mani - chennai,இந்தியா
07-பிப்-201306:57:53 IST Report Abuse
Mani என்ன ஒரு வில்லத்தனம்.. இப்பவே கண்ண கட்டுதே. பெருசு, மெரினா பீச் உண்ணாவிரதம்... உம்ம் உம்ம் வண்டி ஸ்டார்ட்.
Rate this:
Share this comment
Cancel
Bala Murali - Tirunelveli,இந்தியா
07-பிப்-201303:48:22 IST Report Abuse
Bala Murali அடுத்த நாடகம் ரெடி....
Rate this:
Share this comment
Cancel
Bala Murali - Tirunelveli,இந்தியா
07-பிப்-201303:27:51 IST Report Abuse
Bala Murali நான் சொல்லல ஆளு தான் பார்க்க பொறி உருண்டை மாதிரி இருப்பாரு ஆனா நல்ல காமெடி பண்ணுவாருனு.
Rate this:
Share this comment
Cancel
Subramaniam - Prague,செக் குடியரசு
07-பிப்-201302:35:05 IST Report Abuse
Subramaniam இலங்கை பிரச்சினையில் தலையிடாதே. இதற்கு பதிலாக நாட்டை நீ விருப்பம் போல் கொள்ளையடி என்ற சோனியாவின் ஒப்பந்தத்தை ஏற்று தமிழர் உயிர்களை விலை பேசிய துரோகி இன்னும் தமிழர் உரிமை பற்றி பேசுவது அடுத்த தேர்தலில் தமிழ் மடையர்கள் தனக்கே வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையில் தான்
Rate this:
Share this comment
Cancel
lodukku paandi - guangzhou,சீனா
07-பிப்-201301:53:15 IST Report Abuse
lodukku paandi வரும் தேர்தல்களில் திமுக தோற்கபோவது அதிமுகாவின் நல்லாட்சியால் இல்லை. இவரின் பிதற்றல்களாலும், உளறல்களாலும் தான். இவர் சொன்ன மாதிரியே திமுகாவின் எதிரிகள் திமுகாவிலேயே இருக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.