திருப்பாச்சேத்தி:மதுரையில் கள்ள நோட்டு மாற்றுவதில் ஏற்பட்ட பிரச்னையில்,வியாபாரியை கும்பல் காரில் கடத்தியது.கடத்தல் கும்பலை தடுத்த போலீசார் மீது கும்பல் துப்பாக்கியால் சுட்டனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் பேரையூர் கூட்டுறவு சொசைட்டியில் வேலை பார்க்கிறார்.இவர், புதுக்கோட்டையை சேர்ந்த குமார் என்பவரிடம் ரூ.7 லட்சம் கொண்டு வந்தால் ரூ.14 லட்சம் கள்ளநோட்டு தருவதாக கூறியுள்ளார்.இன்று மாலை குமார் திருப்பரங்குன்றம் வந்துள்ளார்.ரூ.7 லட்சத்தை அவரிடம் வாங்கிய நிலையில்,ரூ.14 லட்சத்தை ராஜேந்திரன் கொடுக்கவில்லை.இதில் தகராறு ஏற்பட்டதால் ராஜேந்திரனை,குமார் தலைமையிலான கும்பல் அவர்கள் வந்த "போர்டு ஐகான்' காரில் கடத்தினர்.தகவல் அறிந்த திருப்பரங்குன்றம் போலீசார் மதுரை போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
கடத்தல் கும்பல் பூவந்தி வழியாக தப்பி செல்வதாக போலீசாருக்கு தெரியவந்ததையடுத்து சிவகங்கை போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். இந்நிலையில்,மானாமதுரை டி.எஸ்.பி., வெள்ளத்துரை சிவகங்கைக்கு வந்து விட்டு மதுரைக்கு காரில் சென்றுள்ளார். கடத்தல் குறித்த தகவல் இவருக்கும் வந்துள்ளது.போலீசார் கூறிய கடத்தல் காரை சிவகங்கை அருகேயுள்ள முத்துப்பட்டியில் பார்த்துள்ளார். அந்த காரை டி.எஸ்.பி.,பின் தொடர்ந்து,விரட்டிய போது கடத்தல் கும்பல் காரை ரோட்டிலேயே விட்டு,விட்டு மற்றொரு "செவர்லெட்' காரில் தப்பினர்.(டிஎன்.55 ஏடி.6066, இதில் வக்கீல் சிம்பள் உள்ளது). வேம்பத்தூர்,திருப்பாச்சேத்தி, படமாத்தூர் ஆகிய ஊர்களின் வழியாக கடத்தல் கும்பல் தப்பிக்கலாம் என்பதையறித்த டி.எஸ்.பி., அனைத்து வழியிலும் போலீசார் வருமாறு இன்ஸ்பெக்டர் சுந்தரமாணிக்கத்திடம் கூறினார்.கடத்தல் கும்பல் வீரவலசை வழியாக,பச்சேரி விலக்கு அருகே வந்துள்ளனர்.அப்போது போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்தனர்.போலீசை கண்டதும் கடத்தல் கும்பல் காரிலிருந்து இறங்கி தப்பினர்.விரட்டிய போலீசிடமிருந்து தப்பிப்பதற்காக கடத்தல் கும்பலின் தலைவர் குமாரின் நண்பர் சத்தியமூர்த்தி போலீஸ் மீது துப்பாக்கியால் சுட்டார்.இதில் டி.எஸ்.பி.,வெள்ளத்துரை டிரைவர் பூமி கீழே விழுந்து தப்பினார்.குமார் மட்டும் தப்பிய நிலையில், கும்பலால் கடத்தி வரப்பட்ட ராஜேந்திரன் உட்பட சத்தியமூர்த்தி, சரவணன்,மகாராஜன்,பிரபாகரன் உட்பட 5 பேரை போலீசார் பிடித்து திருப்பாச்சேத்தி ஸ்டேஷனில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.