அறிவியல் ஆயிரம் | அறிவியல் ஆயிரம்| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : டிச 10, 2011

அறிவியல் ஆயிரம்


களை வளர்ப்போம்


மழைக்காலத்தில் பச்சைப் போர்வையை விரித்தாற் போன்று, மனிதர்களின் கால்தடம் படாத இடங்களில் எல்லாம் செடிகள் வளர்கின்றன. இவற்றைக் களைச்செடிகள் என்கிறோம். வயல்களில், தோட்டங்களில் விளையும் களைச் செடிகளை அழிக்க, களைக்கொல்லிகளைப் பயன் படுத்துகிறோம். வயல்களில் களையெடுத்தல் என்பதே ஒரு பணியாக இருந்தது. ஆனால் "மண்ணின் ரகசியங்கள்' என்னும் புத்தகம், களைச்செடிகளை "மண்ணின் பாதுகாவலர்கள்' என கூறுகிறது. ஏனெனில் களைச் செடிகளின் வேர்கள் தான் பூமிக்கு அடியில் பல்லாயிரக்கணக்கான சதுரடிகளுக்குப் பின்னிப் படரும் தன்மையைப் பெற்றுள்ளன.இவ்வாறு பின்னிப் படர்ந்துள்ள களைச் செடிகளின் வேர்கள் தான் பூமிக்கு அடியில் உள்ள ஈரப்பதத்தை தரை மட்டத்திற்கு கொண்டு வருகின்றன. மனிதர்களால் பயிரிடப்படும் செடிகளின் வேர்கள் அவ்வாறு பரவுவதில்லை..


தகவல் சுரங்கம்


ஆத்தங்குடி கற்கள்


வெயில் காலத்தில் குளிர்ச்சியையும், குளிர் காலத்தில் வெப்பத்தையும் தரும் கிரானைட், அனைவரின் பட்ஜெட்டுக்கும் ஏற்றதாக இல்லை.மார்பிளைப் பயன்படுத்திய தரைகளோ, குளிர் காலத்தில் அதிக குளிர்ச்சியாய் உள்ளன. பழங்காலத்தில் ஆத்தங்குடியில் தயாரிக்கப்பட்ட பூக்கற்களோ அதிக குளிர்ச்சியும் இல்லாமல், வெப்பமும் இல்லாமல் மீடியமாய் இருக்கும். இவற்றை பாலீஷ் செய்ய வேண்டிய தேவை இல்லை. செட்டிநாட்டு வீடுகளில் ஆத்தங்குடி கற்கள் தான் பயன்படுத்தப்படும். காரைக்குடி அருகில் உள்ள ஆத்தங்குடியில் தயாரிக்கப்பட்டதால் தான், ஊரின் பெயரையொட்டி காரணப் பெயர் வந்தது. இன்று ஆத்தங்குடியிலே பூக்கற்களின் உற்பத்தி குறைந்து விட்டது. பழைய செட்டிநாட்டு வீடுகளில் இருந்து பெயர்த்து எடுக்கப்பட்ட கற்கள் தான் விற்கப் படுகின்றன. காரைக்குடி பழைய பொருட்கள் கடையிலும், ஆத்தங்குடி கற்கள் விற்பனைக்கு வந்து விட்டன. உற்பத்தியாகும் கற்கள் வெளிநாடு களுக்கு தான் ஏற்றுமதியாகின்றன..


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X