திருப்பதியில் வி.ஐ,பி.,க்கள் தரிசனத்திற்கு தடை வருகிறது: பக்தர்கள் எதிர்ப்பு காரணமாக அதிரடி

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
திருப்பதியில் வி.ஐ,பி.,க்கள் தரிசனத்திற்கு தடை வருகிறது : பக்தர்கள் எதிர்ப்பு காரணமாக அதிரடி

"திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் ஆங்கில புத்தாண்டு தினம், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சாமி தரிசனம் செய்ய வந்திருந்த வி.ஐ.பி.,க்களுக்கு சாமி தரிசனம் செய்விப்பதில், தேவஸ்தான நிர்வாகம் முக்கியத்துவம் வழங்கவில்லை என அவர்கள் கருதினால், பெரிய மனதுடன் மன்னித்து விடும்படி வேண்டுகிறேன்,' என, திருப்பதி தேவஸ்தான போர்டின் சேர்மன் பாபிராஜூ தெரிவித்தார்.

திருப்பதியில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு லட்சோப லட்சம் பக்தர்கள், சாமி தரிசன செய்ய வருவார்கள்.இவ்வாறு வருபவர்கள் தரிசனம் செய்ய, பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், இந்தாண்டு கூட்டத்தை கட்டுப்படுத்தவும், அதே சமயம் வரக்கூடிய பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுளை செய்யும்பொருட்டு, நாடு முழுவதும் உள்ள தேவஸ்தான தகவல் மையங்கள் மூலம், முன்பதிவு செய்து கொண்டு வருபவர்களுக்கு சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. திருப்பதியில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரையாக வருவேன் என உறுதியளித்த பக்தர்களுக்கு, 100 ரூபாய் தரிசன டிக்கெட்டும், நேரடியாக திருமலைக்கு வந்து தரிசனத்திற்கு வருபவர்களுக்கு, 300 ரூபாய் டிக்கெட்டும் வழங்கப்பட்டது.

பாதயாத்திரைக்கு முக்கியத்துவம் : இவ்வாறு முன்பதிவு பெற்றவர்கள் இந்தியா முழுவதிற்கும், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர். டிக்கெட் வாங்கியவர்கள் 5 மற்றும் 6ம் தேதிகளில் அனுமதிக்கப்பட்டனர்.
குறிப்பாக, பாதயாத்திரை பக்தர்கள் தரிசனத்திற்கு செல்ல, வெகுசிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வராஹக சாமி சன்னிதியில் துவங்கி, புஷ்கரணி வழியாக முகத்துவாரம் வழியாக அனுமதிக்கப்பட்டனர். கோவில் பிரதான கோபுரத்திற்கு எதிரே இருந்த இடத்தில், பிரத்யேகமாக பந்தல் போட்டு, தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு பக்தராக செல்லும்படி பாதை அமைக்கப்பட்டு இருந்தது. ஒவ்வொரு பக்தரும் ஒன்றரை மணி நேரத்திற்குள் சாமி தரிசனம், வைகுண்ட வாசல் தரிசனம் முடித்துவிட்டு திரும்பும் வகையில், சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

முன்னேற்பாடு முக்கியம் : முன்பதிவு பத்து நாட்களுக்கு முன்பே முடிந்துவிட்டதால், 5 மற்றும் 6ம் தேதிகளில் திருமலைக்கு வந்த பக்தர்கள் உடனடியாக தரிசனம் பார்க்க முடியவில்லை. அவர்களுக்கு இரண்டு நாள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும், வி.ஐ.பி.,க்களுக்கும் தனி ஏற்பாடு செய்வது நிறுத்தப்பட்டு இருந்தது. பொதுவாக, திருமலையில் சாமி கும்பிட வருவது என்றால், ரயில் பயணத்திற்கு எப்படி முன்பதிவு செய்து வருவோமோ அதுபோல் ஒரு மாதம், அல்லது குறைந்த பட்சம் பத்து நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்துவிட்டு வந்தால் எளிதாக இருக்கும் என்ற நிலைமை உருவாகி விட்டது. இந்த ஏற்பாட்டை, அடிக்கடி திருமலைக்கு வரும் பக்தர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இதன் காரணமாக, வி.ஐ.பி.,க்களுக்கு தரிசன ஏற்பாடு செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. வைகுண்ட ஏகாதசியன்று திருமலைக்கு வந்த வி.ஐ.பி.,க்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றமடைந்தனர். ஆனால், பக்தர்கள் தரப்பில் இதற்கு அமோக வரவேற்பு இருந்தது. கூட்டம் இல்லாத நாட்களில் வி.ஐ.பி.,களுக்கு முன்னுரிமை வழங்கலாம் என்று கருத்து எழுந்துள்ளது.

இந்நிலையில், திருப்பதியில் நிருபர்களிடம் பேசிய திருப்பதி தேவஸ்தான போர்டின் சேர்மன் பாபிராஜூ கூறியதாவது:
வைகுண்ட ஏகாதசி தினத்தன்று சொர்க்கவாசல் தரிசனம் செய்ய வந்திருந்த மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், நீதிபதிகள், வி.ஐ.பி.,க்கள் போன்ற பதவி அந்தஸ்து பெற்றுள்ளவர்களை, மூன்று பிரிவுகளாக பிரித்து வைகுண்டம்-1 வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். வி.ஐ.பி.,டிக்கெட் பெற்ற மேலும் சிலர் வைகுண்டம், 17, 25 வளாகம் மற்றும் செல்லார் கியூ வரிசை வழியாகவும், கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

தொலை தூர தரிசனம் : வி.ஐ.பி.,க்களை கோவிலில் சாமி தரிசனம் செய்யவிடாமல், தொலைதூர தரிசனம் செய்வித்து அனுப்பி விட்டதாக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மேலும் முக்கிய அதிகாரிகள் பலரும், திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் மீது மாநில அரசிடம் புகார் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. தெய்வ சன்னிதியில் அனைத்து பிரிவு பக்தர்களும் ஒன்று என்ற எண்ணத்துடன், வைகுண்ட ஏகாதசி தினத்தன்று சாமி தரிசன விஷயத்தில் பிரச்னைகள் ஏற்பட்டிருக்கலாம். யாருடைய மனதையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை. சில நேரங்களில் சிறு தவறுகள் நடக்கின்றன. இந்த அனுபவத்தை கவனத்தில் கொண்டு, இனி எதிர்காலத்தில் தவறுகள் நடக்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, அவர் தெரிவித்தார். மேலும், திருமலையில் சாமி தரிசனம் செய்ய வரும் வி.ஐ.பி.,க்களுக்கு முக்கியத்துவம் வழங்குவதை ரத்து செய்ய வேண்டுமென முடிவு செய்துள்ளேன். இதுகுறித்து, தேவஸ்தான போர்டின் ஆலோசனைக் கூட்டத்தில் உறுப்பினர்களுடன் ஆலோசித்து அதற்கான முடிவு மேற்கொள்ளப்படும். இவ்வாறு பாபிராஜூ கூறினார். இந்த நிலையில் வைகுண்ட ஏகாதசி தினத்தன்று, 4,700 வி.ஐ.பி., டிக்கெட்டுகள் வழங்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக ஏராளமானோர் தேவஸ்தான நிர்வாகம் மீது புகார் கூறியுள்ளனர்.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (46)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bharadwaj Narayanaswamy - Chennai,இந்தியா
12-ஜன-201206:22:28 IST Report Abuse
Bharadwaj Narayanaswamy கடந்த 7 ஆம் தேதி பிரணாப் முகர்ஜி, சந்திர பாபு நாயுடு திருப்பதி வந்ததால் 300 ருபாய் டிக்கெட் வாங்கியும் குழந்தை களுடன் 7 மணி நேரம் தரிசன த்திற்கு காத்திருந்தோம். இவர்களையும், தேவஸ்தான உழியர்களையும் கடவுள் மன்னிக்கவே மாட்டார்.
Rate this:
Share this comment
Cancel
devi - chennai,இந்தியா
11-ஜன-201219:18:33 IST Report Abuse
devi இதை செம்மையாக முறைபடுத்த வேண்டும்.இதை முன்னெடுத்து செய்பவர் நீடூழி வாழ vum
Rate this:
Share this comment
Cancel
Dindigul Nana - Erode,இந்தியா
11-ஜன-201217:45:45 IST Report Abuse
Dindigul Nana கடவுள் முன்பு அனைவரும் சமம்
Rate this:
Share this comment
Cancel
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Hindu American Foundation,யூ.எஸ்.ஏ
11-ஜன-201216:54:13 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) இறைவனுக்கு பிடிக்காத குணங்களுள் முதலாவது, &39தான்&39 என்கிற அகந்தை கொண்டவர்களை.. அந்த அகந்தை இல்லாதவர்களுக்கு தான், முதல் சொர்க்கம் திறக்கும் என்று கூறப்பட்டுள்ளது.. VIPகளுக்கு புரிந்தால் சரி..
Rate this:
Share this comment
Cancel
sujatha1584 - vellore,இந்தியா
11-ஜன-201214:42:26 IST Report Abuse
sujatha1584 அண்ணா ஹசாரே அவர்களே இதற்காகவாவது உண்ணா விரதம் இருந்து , இந்த மாதிரி பணம் வாங்கிகொண்டு பெரிய மனிதர்களை , உயர்ந்த ஜாதி ஆட்களை , சாமியை தரிசனம் செய்யும் முறைக்கு முற்றுபுள்ளி வையுங்கள் . காங்கிரஸ் , பிஜேபி , விஎச்பி ,ஆர் எஸ் எஸ் , சிவசேனா, அம்பானி , விஜய்மல்லையா ,தெலுகுதேசம் , பகுஜன் சமாஜ் , முலாயம் பார்ட்டி , அமர்சிங் , அதிமுக , திமுக , ரஜினி , விஜயகாந்த் ,சசிகலா போன்ற யாரையும் வி.ஐ .பி . தரிசனத்திற்கு உள்ளே விடக்கூடாது என்று போராட்டம் நடதுவிர்களா ??/
Rate this:
Share this comment
Cancel
Vijeandran - Bangalore,இந்தியா
11-ஜன-201213:36:59 IST Report Abuse
Vijeandran வி ஐ பிகளுக்கு ஸ்பெஷல் டிக்கெட் இருக்க கூடாது.... கோவிலுக்குள் செல்ல இரண்டே வழி தான் இருக்கா வேணும்... ஒன்று எல்லோரும் செல்லும் பொது வழி.... மற்ற ஒரு வழி முதியவர்கள், கால் ஊனம் உள்ளவர்கள், கார்பமாக உள்ள பெண்கள் செல்ல
Rate this:
Share this comment
Rengan - India,இந்தியா
12-ஜன-201208:51:58 IST Report Abuse
Renganகுருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோவிலில் இது போன்று இரண்டே வழி உண்டு. ஒன்று எல்லோரும் செல்லும் பொது வழி.... மற்ற ஒரு வழி முதியவர்கள், கால் ஊனம் உள்ளவர்கள், கார்பமாக உள்ள பெண்கள் செல்ல...... ஆனால் அங்கே உள்ள மற்றொரு விதிமுறையான வேஷ்டி, துண்டுடன் மட்டும் செல்ல வேண்டும் என்பது சரியல்ல. கூட்ட நெரிசலில் வேஷ்டி, துண்டை காப்பாற்றவே படாத பாடு பட்டு விட்டேன். நிம்மதியாக சாமி கும்பிட முடிய வில்லை. பேன்ட், சட்டை அணிந்து வர அனுமதித்தால், அதுவே சம நீதியாகும். நீண்ட கால வழிபாடு பழக்கத்தை மாற்ற முடியாது என கூற முடியாது....
Rate this:
Share this comment
Cancel
trp - coimbatore,இந்தியா
11-ஜன-201212:52:17 IST Report Abuse
trp யார் அந்த vip கள்.அவர்களும் மனிதர்கள் தானே ,மனிதர்களுக்குள் என்ன பாகுபாடு வேண்டிக்கிடக்குது .ஆண்டவன் சன்னதியில் அனைவரும் என்பது எங்கும் எப்போதும் நடைமுறைப்படுத்த வேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
Krishna Kumar - Chennai,இந்தியா
11-ஜன-201212:51:41 IST Report Abuse
Krishna Kumar கருத்து பதிவு செய்யும் பொழுது &39 என்று வருகிறதை நிறுத்த என்ன செய்ய வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
rajaram avadhani - Tiruchy,இந்தியா
11-ஜன-201211:52:09 IST Report Abuse
rajaram avadhani ஆண்டவன் முன் அனைவரும் சமம். வரவேற்கப்பட வேண்டிய நடவடிக்கை
Rate this:
Share this comment
Cancel
Babu. M - tirupur,இந்தியா
11-ஜன-201211:41:10 IST Report Abuse
Babu. M சட்டத்தின் முன் அனைவரையும் சமமாக நினைப்பது இல்லை சாமியின் முன்பு கூட நினைக்க கூடாதா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.