தலைமுறை இடைவெளியால் தடுமாறும் தி.மு.க., | தலைமுறை இடைவெளியால் தடுமாறும் தி.மு.க.,| Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (11)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

பிப்ரவரி 3ம் தேதி, தி.மு.க., தலைவர் கருணாநிதியைப் பொறுத்தவரை மறக்க முடியாத நாளாக மாறிவிட்டது. அன்று, மிக இயல்பாகத் துவங்கிய பொதுக்குழுக் கூட்டம், அந்தி மயங்கும் நேரத்தில் அனல் மயமாகிவிட்டது. வழக்கத்துக்கு மாறாக, தி.மு.க., பொதுக்குழுவில் நிறைய பேருக்கு பேசும் வாய்ப்பளிக்கப்பட்டது. திண்டுக்கல் லியோனி பேசுகையில், "மாவட்டச் செயலர்கள் எல்லாம் கோடி கோடியாக பணம் குவித்திருக்கின்றனர்' என்றார். இதற்கு பயங்கரமான கைதட்டல் கிடைத்தது. நிச்சயமாக, இதில் கருணாநிதி சந்தோஷப்பட்டிருக்க முடியாது. காரணம், மாவட்டங்கள் சம்பாதித்து விட்டனர் என்றால், அதற்கு தலைமையின் ஆசியும் இருப்பதாகவே அர்த்தம். அடுத்து பேசிய வழக்கறிஞர் ஜோதி, "பணக்காரர்களுக்குத் தான் கட்சியில் சீட் கொடுக்கின்றனர்; ஏழை, எளியவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்' என, பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதற்கு, கட்சியில் பலமான வரவேற்பு கிடைத்தது. பூச்சி முருகன் "நீ பார்த்தியா' என எதிர்ப்புக் குரல் எழுப்பியபோது, பொதுக்குழு உறுப்பினர்களே வெகுண்டெழுந்து அவரை வாய் மூடச் செய்தனர். இதிலும் கருணாநிதி திருப்தியடைந்திருக்க முடியாது. ஏனென்றால், சீட் ஒதுக்கீடு, முழுக்க முழுக்க அவரது மேற்பார்வையில் நடந்த விஷயம்.


அடுத்து பேசிய திருச்சி சிவா, "கட்சிக்கு இரண்டு சேனல்கள் இருக்கின்றன. ஆனால், கலைஞர் "டிவி' மட்டும் தான் கட்சிக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கலைஞர் "டிவி'யைப் போலவே மற்றொரு சேனலும் செயல்பட்டால், பொதுமக்களை ஈர்க்க முடியும்' என, பெயரைக் குறிப்பிட்டே போட்டுத் தாக்கினார். இதற்கு எழுந்த கைதட்டல், மொத்த பொதுக்குழுவில், வேறு எதற்கும் எழவில்லை. இதையும், கருணாநிதி அமைதியாகத் தான் வேடிக்கை பார்த்தார். கட்சித் தொண்டர்கள் மத்தியிலேயே அந்தச் சேனல் மீது எவ்வளவு அதிருப்தி இருக்கிறது என உணர்ந்து கொள்வதைத் தவிர, அவர் செய்வதற்கு எதுவும் இருக்கவில்லை. அடுத்து வந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் பேச்சில், ஆட்சேபிக்கத்தக்க கருத்து எதுவுமே இல்லை. "தலைவர் இருக்கும்போதே, இன்னொருவரை தலைவராக முன்னிறுத்துவது சரியா' என்பதே அவரது பேச்சின் அடிநாதமாக இருந்தது. இதில், கருணாநிதிக்கு 100 சதவீத உடன்பாடு இருக்கவே செய்யும். ஆனால், ஆறுமுகத்தின் பேச்சுக்கு பொதுக்குழுவில் எழுந்த எதிர்ப்பு தான், அவருக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கும். கூட்டத்தில், மிகப் பெரும்பான்மையானோரின் ஆதரவு ஸ்டாலினுக்கு இருந்தது. அழகிரி ஆதரவாளர் மன்னன், கனிமொழி ஆதரவாளர் செங்கை சிவம் உள்ளிட்ட மிகச் சிலரே, ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கு எதிர் கோஷம் எழுப்பினர். ஆனால், அவர்களால் ஈடு கொடுக்க முடியவில்லை. ஆறுமுகத்தின் கேள்வி, பொதுக்குழுவில் இருந்த யாருக்குமே உறுத்தவில்லை. ஸ்டாலினா, அழகிரியா என்பது தான் அவர்களது மோதலாக இருந்தது. இது, நிச்சயம் கருணாநிதியின் மனதில் தைத்திருக்கும். அதனால் தான் அவர் தனது பேச்சில், "அடுத்த பொதுக்குழுவில் தலைவர் தேர்தல் நடத்துவோம். நான் போட்டியிடுகிறேன். விரும்புபவர்கள் போட்டியிடலாம்' என, அறைகூவல் விடுக்க வேண்டியதாயிற்று.
இதுகுறித்து, தி.மு.க.,வின் முக்கிய பிரமுகர் கூறியதாவது: இது ஒரு நுணுக்கமான பிரச்னை. கருணாநிதி விலக வேண்டும் என, தி.மு.க.,வில் யாருமே விரும்பவில்லை. ஆனால், அவருக்கு 89 வயதாகி விட்டது.

Advertisement

முன்பெல்லாம், ஒரு கிளைச் செயலர் பற்றிய பிரச்னையானாலும், தலைவர் தலையிட்டு, தீர்த்து வைப்பார். இப்போது அவரை அனைவராலும் பார்க்க முடிவதில்லை. தள்ளாமை காரணமாக, ஒவ்வொரு விஷயத்துக்கும் அவரை தொந்தரவு செய்வதில், தொண்டர்களுக்கும் ஒரு தயக்கம் இருக்கிறது. இதனால், தி.மு.க.,வில் மிகப் பெரிய தலைமுறை இடைவெளி ஏற்பட்டுள்ளது. மேலும், தற்போதைய தமிழக அரசியல் களம் வேகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ போன்றோர், சம வயதுடையவர்களாக திகழ்கின்றனர். பா.ம.க.,விலும் அன்புமணி தலையெடுத்துவிட்டார். தி.மு.க.,விலும், அடுத்தது ஸ்டாலினா, அழகிரியா எனத் தெளிவாக அடையாளம் காட்டப்பட்டால் தான், தொண்டர்கள் மத்தியில் பிளவு இல்லாமல், தெளிவாக அணுக வசதியாக இருக்கும். கட்சியும் வேகமெடுக்கும். இதை, தனக்கு எதிரான கட்சியின் மனோநிலையாகப் பார்க்காமல், தலைமுறை இடைவெளியை நிரப்பும் முயற்சியில் தலைவர் இறங்க வேண்டும். அவ்வாறில்லாமல், அவர் தொடர்ந்து மவுனம் காத்து வந்தால், இந்த மோதல் மேலும் மேலும் விஸ்வரூபம் எடுக்கவே செய்யும். அது, கட்சிக்கு எந்த விதத்திலும் நல்லதல்ல. இவ்வாறு அந்த பிரமுகர் கூறினார். தனது பொதுக்குழு பேச்சின் இறுதியில், ஒரு விஷயத்தை கருணாநிதி குறிப்பிட்டார்... "பொதுக்குழுவைப் பற்றிய, இப்போதுள்ள தி.மு.க.,வைப் பற்றிய ஒரு காட்சியைக் காட்டியதற்கு நன்றி' என்றார். அவரது இந்தப் பேச்சிலேயே அடங்கியிருக்கிறது, "தி.மு.க., இப்போது பழைய நிலையில் இல்லை; நிறைய மாறிவிட்டது; நிறைய எதிர்பார்க்கிறது' என்ற தகவல்!

- நமது சிறப்பு நிருபர் -
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (11)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dhandapani Shanmugam - riyadh,சவுதி அரேபியா
05-பிப்-201221:19:54 IST Report Abuse
Dhandapani Shanmugam திரு மு க அவர்கள் மனவேதனை அடைவது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை, காரணம் இப்போது திமுகவில் அனைத்து மேல் மட்ட பதவிகளும் அவரது குடும்பத்தினர்கள் மட்டுமே உள்ளனர், உர மந்திரி இந்த 3 வருட காலத்தில் ஒரு முறையாவது பாராளு மன்றத்தில் பேசி இருப்பாரா? அந்த அளவிற்கு திறமை வாய்ந்த நெஞ்சு உரமிக்க மந்திரி. mp பதவி கிடைத்த மகளோ கட்சியையும், தமிழ் நாட்டு மானத்தையும் திகர் சிறையில் வைத்துவிட்டார். அந்த அளவிற்கு நேர்மையின் எடுத்தகாட்டு. இதைவிடவா மன வேதனை வேண்டும். நல்ல வேலை கேரளா, கர்நாடக, ஆந்திராவில் இந்த கட்சி இல்லை, ஒரு வேளை இருந்திருந்தால், மனைவி, துணைவி, இணைவி, மகள், பேரன் கொள்ளு பேரன் அனைவருக்கும் பதவி கொடுக்க வசதியாக இருந்து இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Ashok Raja - London,யுனைடெட் கிங்டம்
05-பிப்-201216:51:56 IST Report Abuse
Ashok Raja கருணாநிதியே தமிழகத்துக்கு ஒரு சாபக்கேடு இதுல அந்தாளோட பயலுக வேற தலைவராகனுமா?
Rate this:
Share this comment
Cancel
Mani Kannu - Chennai,இந்தியா
05-பிப்-201215:10:16 IST Report Abuse
Mani Kannu தலைவர் அவர்கள் தனது திறமை அனைத்தையும் தனது வாரிசுகளுக்கு பிரித்து கொடுத்துள்ளதால் தான் இப்போது யாரை தேர்ந்து எடுப்பது என்பதை முடிவு செய்ய முடியாமல் கழகம் திணறி வருகிறது.. அரசியல் திறமையை தளபதிக்கும், அடாவடி தனத்தை அஞ்சா நெஞ்சனுக்கும், ஊழல் திறமையை கவிதாயினிக்கும், குள்ளநரி தனத்தை ஆசை பேரனுக்கும் கற்று கொடுத்து நன்றாக பழக்கி விட்டு இருக்கிறார். அவர்களும் அந்தந்த வேலைகளை செவ்வனே செய்வதால், யாரை தலைவராக கொள்வது என்று உடன் பிறப்புகள் குழம்புகின்றனர். தலைமையை பல்வேறு பிரிவுகளாக பிரித்து ஒவ்வொருவரையும் தலா ஒரு பிரிவுக்கு தலைவராக்குவது தான் சாலச்சிறந்த செயலாகும். தலைவர் உடனே நடவடிக்கை எடுப்பார் என ஆவலுடன் எதிர் பார்க்கும் உடன் பிறப்பு.
Rate this:
Share this comment
Cancel
T.R.Radhakrishnan - Nagpur,இந்தியா
05-பிப்-201214:53:50 IST Report Abuse
T.R.Radhakrishnan தி.மு.க.வின் நிலைமை குரங்கு கையில் அகப்பட்ட பூமாலை கதை ஆகிவிட்டது.
Rate this:
Share this comment
Cancel
RAMAN - Chennai,இந்தியா
05-பிப்-201210:33:16 IST Report Abuse
RAMAN முழுகிகொண்டிருக்கும் கப்பல்லுகு யார் கேப்டன் என்று போட்டி. என்ன பைத்தியகார கட்சி திமுக.
Rate this:
Share this comment
Cancel
Sundeli Siththar - Hyderabad,இந்தியா
05-பிப்-201208:55:18 IST Report Abuse
Sundeli Siththar கலைஞரை வெளியே போ என்று யாரும் கூறவில்லை... ஸ்டாலினா, அழகிரியா, கனிமொழியா என்று முடிவுசெய்ய முடியவில்லை என்பதற்காக 89 வயதிலும் நாற்காலியை கெட்டியாக பிடித்துக் கொண்டு, கட்சியை எந்த வழியில் கொண்டு செல்வதென்பது தெரியாமல் இருப்பது அவலத்தின் உச்சகட்டம். ஸ்டாலினை தலைவராக்குங்கள். அழகிரியை செயலராக்குங்கள்.. கனிமொழியை பொருளாளர் ஆக்குங்கள். உதயநிதி ஸ்டாலினை இளைங்கரணி தலைவராக்குங்கள். துறைநிதியை தென்மண்டல பொறுப்பாளர் ஆக்குங்கள். கனிமொழியின் மகன் சிறுவன் என்பதால் ஒன்று அரவிந்தநாரை மேற்க்குமண்டல பொறுப்பாளர் ஆக்கலாம்.. அல்லது கட்சி விதிமுறைகளை தளர்த்தி 5 வயதுக்கு மேற்பட்ட கருணாநிதி குடும்பத்தினர் கட்சியில் எந்த பொறுப்புக்கும் வரலாம் என்று மாற்றி, அவரை மேற்கு மண்டலத்தின் பொறுப்பாளர் ஆக்கலாம்.
Rate this:
Share this comment
villupuram jeevithan - villupuram,இந்தியா
05-பிப்-201211:09:37 IST Report Abuse
villupuram jeevithanமற்ற நிதிகளுக்கு பதவி கிடையாதா?...
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
05-பிப்-201207:33:40 IST Report Abuse
villupuram jeevithan அண்ணா இருந்த போது கட்சி தலைவர் பதவி காலியாக இருந்தது. அதிமுகவிலும் எம்ஜிஆர் காலத்திலும், இப்போதும் கட்சி தலைவர் பதவி காலியாக வைத்திருக்கிறார்கள். ஆனால் கருணா திமுகவில் இந்த பதவியை நிரப்பிவிட்டார். காலி பண்ண மனது வரவில்லை விட்டுவிட்டுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
alagi - b,பெர்முடா
05-பிப்-201206:45:39 IST Report Abuse
alagi தலைவருக்கான ஒரு ஸ்டைல் ,ஒரு தோற்றம் ,அண்ணன் அழகிரிக்கு தாங்க இருக்கு ஒரு மஞ்சள் சால்வை போட்டு பாருங்க எப்படி இர்ருக்கும் ,அனா ஸ்டாலின் kantravi
Rate this:
Share this comment
Cancel
Nishanthan Sathananthasivam - luhansk ,உக்ரைன்
05-பிப்-201205:15:03 IST Report Abuse
Nishanthan Sathananthasivam அவர் முந்நிலையில் சலசலப்பை உண்டாக்குவது நன்றி மறந்தது வாக்காளர்கள் மட்டுமல்ல உடன்பிறப்புகளிலும் இருக்கின்றார்களோ என எண்ணத்தோன்றுகின்றது...அது யாருக்கு ஆதரவாக அல்லது எதிர்ப்பாக இருந்தாலும் சரி...கடமை..கண்ணியம்..கட்டுப்பாடு,,,காப்போம்.
Rate this:
Share this comment
Cancel
CUMBUM P.T.MURUGAN - TRICHY,இந்தியா
05-பிப்-201204:32:18 IST Report Abuse
CUMBUM P.T.MURUGAN அங்கே என்னடா என்றால், ஜெயா, விஜயகாந்த் சண்டை. இங்கே என்னடாவென்றால்,அழகிரியா?ஸ்டாலினா? என்று கேள்வி. போங்கள், இந்த வாரம் நடக்க கூடாததெல்லாம் நடந்து முடிந்து விட்டது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.