Licences of 3 NGO's cancelled for funding KNPL protesters | கூடங்குளம்: 3 என்.ஜி.ஓ., அமைப்புகளின் லைசென்ஸ்கள் ரத்து| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கூடங்குளம்: 3 என்.ஜி.ஓ., அமைப்புகளின் லைசென்ஸ்கள் ரத்து

Updated : பிப் 26, 2012 | Added : பிப் 24, 2012 | கருத்துகள் (39)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

புதுடில்லி: ""மூன்று அரசு சாரா அமைப்புகள், வெளிநாடுகளில் இருந்து வந்த நிதியை, கூடங்குளம் அணு மின் திட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்கு பயன்படுத்தியது கண்டறியப்பட்டுள்ளது' என, மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறினார். அதனால், அந்த அமைப்புகளின் லைசென்ஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு நேற்று முன்தினம் பேட்டி அளித்த பிரதமர் மன்மோகன் சிங், "அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்படும் சில அரசு சாரா அமைப்புகள், கூடங்குளம் அணு மின் திட்டத்துக்கு இடையூறு ஏற்படுத்துகின்றன' என, புகார் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பிரதமர் அலுவலக விவகாரங்களுக்கான இணை அமைச்சர் நாராயணசாமி நேற்று கூறியதாவது: தொழுநோயை ஒழிப்பது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவுவது போன்ற சமூக சேவைகளைச் செய்வதாகக் கூறி, வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெற்ற, மூன்று அரசு சாரா அமைப்புகள் (என்.ஜி.ஓ.,க்கள்), அந்த நிதியை, கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிரான போராட்டத்துக்காக, தவறாக பயன்படுத்தியுள்ளன. உள்துறை அமைச்சகத்தின் விசாரணையில், இந்த விவரங்கள் தெரியவந்ததை அடுத்து, அந்த அமைப்புகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கூடங்குளம் அணு மின் திட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்காக பெருமளவு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. போராட்டத்துக்காக, அந்த பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமானோர், டிராக்டர்களில் அழைத்து வரப்படுகின்றனர். அவர்களுக்கு உணவும் வழங்கப்படுகிறது. வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தின் (எப்.சி.ஆர்.ஏ.,) விதிமுறைகளை மீறி, இந்த மூன்று அரசு சாரா அமைப்புகளும் செயல்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. விசாரணையில் தெரியவந்த விவரங்களின் அடிப்படையில் தான், பிரதமர் மன்மோகன் சிங் கருத்து தெரிவித்திருந்தார். இவ்வாறு நாராயணசாமி கூறினார்.


ஆய்வின் மூலம் எடுக்கப்பட்ட அதிரடி: அணு எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற, தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவான் அம்ப்ரோஸ் நிர்வாகத்திலுள்ள தொண்டு நிறுவனம் மற்றும் உதயகுமாரின் கூட்டாளி புஷ்பராயன் கட்டுப்பாட்டிலுள்ள தொண்டு நிறுவனங்கள் மீது, மத்திய அரசு சந்தேகம் அடைந்தது. இதன் பேரில், மத்திய உள்துறையைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள், கடந்த மாதம் 10ம் தேதி முதல் 18ம் தேதி வரை, தூத்துக்குடி வந்து, தூத்துக்குடி மல்டிபர்பஸ் சோஷியல் சர்வீஸ் சொசைட்டி (தூத்துக்குடி பல்நோக்கு சேவை சங்கம்), கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கம் உள்ளிட்ட ஆறு தொண்டு நிறுவனங்களில், அதிரடி ஆய்வு நடத்தினர். இதில், கட்டுக்கட்டாக ஆவணங்கள் சிக்கின. தொண்டு நிறுவனங்களுக்கு வெளிநாட்டிலிருந்து தான் நிதியுதவி கிடைக்கிறது என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர். மத்திய அரசு அதிகாரிகள் கைப்பற்றிய ஆவணங்களை, டில்லிக்கு கொண்டு சென்று ஆய்வு நடத்தினர். ஆய்வு முடிவில், வெளிநாட்டு நிதிக்கு சரியாக கணக்கு காட்டாத மூன்று நிறுவனங்களின், லைசென்ஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.


சென்னையில் உதயகுமார் முகாம்: அமெரிக்கா, நார்வே, சுவீடன், டென்மார்க், ஐஸ்லாந்து மற்றும் பின்லாந்து ஆகியவற்றில் இயங்கும் சில சுயநல தொண்டு நிறுவனங்களின் உதவியுடன், இந்தியாவில் செயல்படுத்தப்பட இருக்கும், கூடங்குளம், ஜெய்தாபூர் ஆகிய இரண்டு அணு மின் திட்டங்களுக்கு எதிராக மக்களை பணயமாக்கி, சிலர் போராட்டம் நடத்துகின்றனர். ஆனால், இந்திய மக்கள், அணு மின்சார உற்பத்திக்கு ஆதரவாகவே உள்ளனர் என, நேற்று முன்தினம் வெளியான பிரதமரின் பகிரங்கமான அறிவிப்பு மூலம், கூடங்குளத்தில் போராடும் உதயகுமார் கும்பலின் குட்டு மீண்டும் வெளிப்பட்டு விட்டது. இதனால், அவர் செய்வதறியாமல் திகைத்துள்ளார். போராட்டத்திற்கு கூடுதல் ஆதரவை திரட்ட அவர், இந்தியாவுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கொள்கை கொண்ட அமைப்புகளை திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர், நேற்று சென்னைக்கு அவசரமாக வந்து முகாமிட்டுள்ளார்.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Chennai,இந்தியா
25-பிப்-201223:14:33 IST Report Abuse
Balaji அதெப்படி "உதயகுமார்" இவன் ஒருத்தன TRACE செய்ய நம்ப அரசுக்கு இவ்வளவு நாளா? இல்லே இது முடியாத காரியமா? அப்படியும் இல்லேனா சும்மா வர காசு, மக்கள் வேலை வெட்டி இல்லாம சாபுட்டும்னு நல்ல என்னமா?
Rate this:
Share this comment
Cancel
Dhanabal - Thoothukudi,இந்தியா
25-பிப்-201220:44:48 IST Report Abuse
Dhanabal வாக்கு வங்கி அரசியல் காரணமாக நமது அரசியல்வாதிகள் துணிச்சலான முடிவை எடுக்க தயங்குகின்றனர்.அதன்விளைவு பிரச்சனைகள் ஜவ்வ்வவ்வ்வ் .. ஆக இழுக்கப்படுகிறது.
Rate this:
Share this comment
Cancel
john son - berlin,ஜெர்மனி
25-பிப்-201219:08:02 IST Report Abuse
john son ur right krishnan RSS,VHP ect ect are doing the same thing for two to three decades,,,
Rate this:
Share this comment
Cancel
kumar - dammam,சவுதி அரேபியா
25-பிப்-201218:32:34 IST Report Abuse
kumar வெளிநாட்டு பணம் இப்போது இல்லை முன்பிருந்தே வருகிறது மதம் மாற்றம் செய்வதற்கு. கண்டித்தவர்களை வகுப்புவாதிகள் என்று கூறினர் போலி மதச்சார்பின்மைவாதிகள்
Rate this:
Share this comment
Cancel
A R Parthasarathy - Chennai,இந்தியா
25-பிப்-201218:01:11 IST Report Abuse
A R Parthasarathy அமெரிக்காவை மையமாகக்கொண்டு செயல்படும் அரசு சாரா நிறுவனங்கள் கூடங்குளம் அணுமின் நிலையம் திட்டத்திக்கு இடையூறு விளைவிக்கின்றன என்று பிரதமர் கூறி அரும்யிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பாதிரியாரும் புஷ்பரஜனும் தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் தொழுநோயாளிகளுக்கும், ஏழை எளியவர்க்கும் உதவுவதாக கூறித்தான் நிதிபெற்று இருக்கிறார்கள். நிதியை தவறாக பயன்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அரசு சாரா அமைப்புகளின் லைசென்சுகளை ரத்து செய்யும் நடவடிக்கை எந்தவிதத்தில் நியாயம்? நல்ல நோக்கத்திற்காக அனுப்பப்படும் உதவித்தொகை தவறாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது தெரிந்தும் உதயகுமார், அவருக்கு பின்னால் இருந்துகொண்டு நிதியை தவறாக பயன்படுத்த உதவிய பாதிரியார், புஷ்பராஜன் ஆகியோரை உடனடியாக கைதுசெய்ய வேண்டாமா? ஆதாரங்கள் சரியாக இருக்குமானால் மத்திய அரசு ஏன் தாமதம் செய்கிறது?
Rate this:
Share this comment
Cancel
A R Parthasarathy - Chennai,இந்தியா
25-பிப்-201217:34:35 IST Report Abuse
A R Parthasarathy மௌன குரு வாய் மலர்ந்தருளி இருக்கிறார் வெளிநாட்டு உதவித்தொகை தவறாக பயன்படுத்தப்பட்டிருப்பதாக. ஆதாரங்களும் இருப்பதாக நாராயணசாமியும் கூறுகிறார். இன்னும் எதற்காக காத்திருக்கிறார்கள் நடவடிக்கை எடுக்க. தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு பணத்தை தவறாக பயன்படுத்தியதாக கூறி முன்று தொண்டு நிறுவனகளின் உரிமங்களை ரத்து செய்திருப்பதாக கூறுகிறார்கள். பாதிரியாரும், புஷ்பராஜனும் நிதியை தவறாக பயன்படுத்தி இருந்தால் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க தாமதம் ஏன்? மேலும், அமெரிக்காவின் அடிவருடி என்றும், பிரதமர் பொய் சொல்கிறார் என்றும் கூறும் அளவிற்கு உதயகுமார் பத்த்ரிக்கையளர்களிடம் கூறுகிறார் என்றால் அது ஒன்றே போதுமே அவர் மீது நடவடிக்கை எடுக்க. இன்னமும் எதற்காக காத்திருக்கிறார்கள்?
Rate this:
Share this comment
Cancel
Kumar KSK - Chennai,இந்தியா
25-பிப்-201217:18:34 IST Report Abuse
Kumar KSK அம்மா நினைத்தால் இதை ஒரே நாளில் முடிவுக்கு கொண்டு வர முடியும்.. ஆனால்... பண்ண மாட்டாங்க.. இது அம்மாவோட அரசியல் சாணக்யதனம்... அதிமுக இப்போ காங்கிரஸ் கூட்டு என்று இருந்திருந்தால் இந்நேரம் உதயகுமார் நிலைமை மிக மிக பரிதாபமாக ஆகிருக்கும்.. அமெரிக்க சதி குழுக்கள் மூலமாக அவரிடம் காசு வாங்கிய மக்களை தவிர வேறு யாரும் அதை பற்றி சற்றும் கவலை பட்டிருக்க மாட்டார்கள்....
Rate this:
Share this comment
Cancel
abu riyaz - Udangudi,இந்தியா
25-பிப்-201216:28:15 IST Report Abuse
abu riyaz உலகளவில் இரண்டு நாட்டு கார்நெட் ru அழைக்கப்படும் தாது மண் கிடைப்பது ஒன்று ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா. இதில் இந்தியாவில் தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி கடல் பகுதில் தான் இவ்வித மண் கிடைகிறது. இதில் ஏகபோகமகா சம்பாதிப்பவர் வைகுண்டராஜன். இவர் அம்மாவின் தீவிர விசுவாசி. ஏன் TATA கம்பனியே இந்த வியாபாரத்தில் நுழைய விடவில்லையே. இப்போது கூடங்குளம் அணு மின் நிலையம் செயல் பட்டால் அந்த பகுதியை சுற்றி மத்திய பாதுகாப்பு அதிகரிக்கும். அது இவருக்கு ஒரு பின் அடைவு. அதலால் இவரும் இந்த உதகுகுமார் என்ற தேச விரோதிக்கு உதவுகிறார். இது முற்றிலும் உண்மை. இந்த வைகுண்டராஜனின் அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களால் அப்பகுதியில் இறந்தவர்கள் ஏராளம். ஆனால் பணம் மற்றும் அரசியல் பலத்தால் கேஸ் வேறுமாதிரி பதியப்படும். இதுவும் முற்றிலும் உண்மை.
Rate this:
Share this comment
Cancel
Tamilar Neethi - Chennai,இந்தியா
25-பிப்-201214:57:57 IST Report Abuse
Tamilar Neethi நன்கொடை வாங்கி தான் HIV / AIDS இந்தியாவில் குறைக்கப்பட்டது. இப்படி பல நோய்கள், பிரச்சினைகள் தொண்டு நிருவனம்கள் கையில் எடுத்து அதை ஒழிக்க பாடுபடுகிறது . இது ஒருமுறை . இது தர்மம் செய்வது . சில நிருவனம்கள் அறியாமை தீண்டாமை பெண் அடிமை , சிசுகொலை , நீர் அறுவடை , ஜாதி கொடுமை , மத கொடுமை , வறுமை , வேலை இன்மை , சத்துகுறைபாடு இப்படி . இதை எல்லாம் அலசி பார்த்து சில நிறுவனம் ஒடுக்கப்பட்ட மக்களை ஒருகிணைதல், போராடுதல் , இப்படி வன்கொடுமை அகற்ற களம் இறங்குகிறது மக்களுடன் மக்களில் ஒருவாராய். அன்னை தெரேசாவின் மிசினரி ஒப் சாரிட்டி கூட இப்படி ஒரு தொண்டு நிறுவனம்தான். அரசால் கூடாததை அரசினால் ஏற்படும் பாதிப்பை இந்த தொண்டு நிருவனம்கள் எடுத்து பணி ஆத்துகிரது. இது நாளடைவில் பாதை மாறி வசூல் செய்வதற்கு என மாறி விட்டது . நடந்து துறந்து வெறுத்து வாழ்ந்து மக்களிடம் பணி புரிந்தா நிறுவன ஊழியர்கள் மெல்ல வளர்ந்து பறந்து பணி புரிய ஆரம்பித்தார்கள். இவர்கள் வாழ்வு கொளிக்க மக்கள் பிரச்சினைகளை வியாபாரம் ஆக்கி விட்டார்கள் . அதாவது சில நபர்கள் இப்போது தொண்டு புரிவதற்கு பணம் வசூல் பண்ணிகொடுக்க நிறுவனம் வைத்துள்ளார்கள் . இவர்கள் 100 ரூபாய் வசூல் பண்ணிவிட்டு எந்த நிறுவனம் தன பகுதி பிரச்சினை கு பணம் வசூல் பண்ண கேட்டு கொண்டதோ அவர்களுக்கு ஒரு 15 ரூபாய் கொடுத்து விடுகிறது . இந்த 15 ரூபாய் தொண்டுநிறுவனம் வாயில் போகும் . இப்படி ஏழைகளை வைத்து வாழும் நிறுவனகள் கூட அதிகம் . இது வெளியில் தெரியாது . இப்படி பட்ட நிருவனம்களின் நிதி சேகரிப்பு நிகழ்வுகள் நட்சத்திர ஹோட்டல்களில் சினிமா நடிகை நடிகர்கள் கூட்டத்துடன் கிரான் பேடி அழைப்புடன் மாணவர்கள் கேள்வி பதிலுடன் பத்துக்கு பாத்து என்பதுபோல கவர்ச்சியாய் இருக்கும் . ஊடகம் ஒளி கூட வெகுவாய் இவர்கள் மீது விழும் . 30 கோடி இந்தியர்கள் வறுமை கோட்டிற்கு கீழ் . இவர்களை வைத்துதான் இந்த சித்து விளயாட்டு. அரசு கரிசனை உடன் இருந்தால் வறியோர் இல்லாமல் திட்டம் இட்டு கடமை ஆற்றினால் , அரசு மக்கள் சார் மக்கள் பாதிக்க படாமல் திட்டம் வகுத்தால் தொண்டு நிருவனம்களின் ஆட்டம் ஒழியும். இதில் எல்லா தொண்டு நிருவனம்களையோம் குறை கூறிட முடியாது . நல்லோர் பலர் . தீயோர் பலர் . பல கோடி கறுப்பு பணம் அன்னிய நாட்டில் . அது வந்து இந்த தேச வறுமை போக்கி , மின்சாரம் கொடுத்து நதிநீர் இணைத்தால் தொண்டு நிருவனம்கள் வேறு நலப்பணியில் இறங்ககும் . லஞ்சம் தவிர் நெஞ்சம் நிவிர் என தூய்மை பணிக்கு திசை திருப்பும் இல்லை வட்டிக்கு விட்டு காசு பார்க்கும் . ஐயோ ஐயோ நிறய விசயம் இருக்கு. அது ஒன்றை ஓன்று பின்னி கிடக்கு .
Rate this:
Share this comment
Cancel
Hai Too - Tirunelveli,இந்தியா
25-பிப்-201214:09:26 IST Report Abuse
Hai Too கடந்த 30 வருசமா உலகத்தில எந்த அணுவுலையும் ஏற்படுத்தப்படவில்லை ... அமெரிக்கா உட்பட. அது ஏன்? அணுவுலை பாதுகாப்பானதுன்னு சொல்லும் அரசு.. அதை ஏன் கேரளால கைவிட்டுச்சி? அணுவுலை பாதுகாப்பானதுன்னா ... ஏன் அணுவுலை வரைவு மசோதாவ கொண்டு வரணும்?. பல வருசமா உதயகுமார் எங்க போனார்னு கேட்கிறங்க? ஆரம்பம் முதல் அணுவுலை குறித்து அவர் நெறைய வெளிவிட்டிருக்கிறார். அப்போ சப்போர்ட் இல்ல. வலியும் வேதனையும் அவனவனுக்கு வந்ததான் தெரியும். கூடங்குளம் மக்களுக்கு தெரியும். அதனால அவங்க சப்போர்ட் பண்றாங்க. நமக்கு என்ன தெரியும். யார் சொல்லியும் அணுவுலை மூடபோவது இல்ல. அதை திறப்பாங்க. சாக போறது என்னமோ தமிழன் தான். அதுக்கு தாலாட்டு பாடுறதும் தமிழின் தான். யார் செத்தாலும் பரவாயில்ல நமக்கு கரண்ட் வேணும். தண்ணி தர மறுக்கும் கர்நாடக, கேரளா அரசுக்கு ஏன் நாம் இன்றும் கரண்ட் குடுக்குறோம் ஏன்? . தமிழ்நாட்டுக்காரன் இழிச்சவயியன் அதான். கடைசியா ஒன்னு: சொந்த தமிழ்நாட்ட விட்டு அகதிய போகும் நாள் தொலைவில் இல்லை தமிழா?
Rate this:
Share this comment
Mani Vaitheeswaran - Houston,யூ.எஸ்.ஏ
28-பிப்-201204:14:21 IST Report Abuse
Mani Vaitheeswaranஅமெரிக்காவில் இரண்டு மாதங்களுக்கு முன் இரண்டு அணுவுலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தெரிந்து பேசுங்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை