, TTD budget for 2012-13 crosses Rs. 2,000-crore mark | 2000 கோடியை தாண்டியது திருப்பதி தேவஸ்தான பட்ஜெட்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

2000 கோடியை தாண்டியது திருப்பதி தேவஸ்தான பட்ஜெட்

Updated : மார் 04, 2012 | Added : மார் 04, 2012 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
, TTD budget for 2012-13 crosses Rs. 2,000-crore markரூ. 2000 கோடியை தாண்டியது திருப்பதி தேவஸ்தான பட்ஜெட்

திருமலை: திருப்பதி கோயிலில் பல்வேறு இனங்களின் வரவு- செலவுகள் மூலம் இந்தாண்டு ரூ. 2010 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளதாக பட்ஜெட் தாக்கலின் போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில், திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியத்தின் சார்பில் 2012-2013-ம் ஆண்டிற்கான வருடாந்திர பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்‌ஜெட்டில் முதல்முறையாக ரூ. 2010 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இதற்கான ஒப்புதலை தேவஸ்தான வாரியம் அளித்தது. திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியத்தின் கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்திற்கு பின்னர் ‌தேவஸ்தான தலைவர் கே. பப்பிராஜூ,நிர்வாக அதிகாரி எல்.வி. சுப்ரமணியம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திருப்பதி கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 800 கோடியும், இதனை வங்கியில் டிபாசிட் வைத்ததன் மூலம் வட்டியாக ரூ. 475 கோடியும், கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை (2010-2011) விட ரூ. 70 கோடி அதிகமாகும். பக்தர்கள் அளித்த தலைமுடி காணிக்கை விற்பனை மூலம் ரூ. 145 கோடியும், ஆர்ஜிதசேவை டிக்கெட்டுகள் விற்பனை மூலம் ரூ. 43 கோடி மற்றும் இதர வருவாய் இனங்கள் மூலம் ரூ.72.50 கோடியும் வசூலாகியுள்ளது. மேலும் பிரசாதம் விற்பனையில், முக்கியமாக லட்டு விற்பனையில் இந்தாண்டு ரூ.137.5 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றை தவிர இந்தாண்டு வி.‌ஐ..பி.கள் சிறப்பு தரிசன டிக்கெட் சிறப்பு தரிசனம் உள்ளிட்ட பல்வேறு தரிசனங்கள் வாயிலாக டிக்கெட்டுகள் விற்பனை மூலம் ரூ.169 கோடியும், வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் டோல்கேட் வரி, மற்றும் ஷாப்பிங் கடைகள், ‌ஹோட்டல்கள் ஆகியவற்றின் மூலம் 92.56 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது.


செலவினங்களாக , ‌கோயிலின் உள்கட்டமைப்பு முதலீடுகளாக ரூ.533.7 கோடியும், ஊழியர்கள் சம்பளம் உள்ளிட்டவைகளுக்காக ரூ.336 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramaniam - Prague,செக் குடியரசு
05-மார்-201203:40:29 IST Report Abuse
Subramaniam கியூவில் மக்களை குழந்தைகளை முதியோர்களை மணித்தியாலங்கள் நிற்கவைத்து வருத்தி அவர்களின் மனநிலையை மிருகமாக்கி அதை பெருமையாக ரசிக்கும் பரிபாலன சபையே உன் வருமானத்தை பார்க்க வரும் பக்தர்களின் நலனுக்கும் அடி நசி படாமல் கடவுளை தரிசிக்கவும் வழி செய்ய பயன்படுத்து.
Rate this:
Share this comment
Cancel
Rekha - Cary,யூ.எஸ்.ஏ
04-மார்-201220:37:55 IST Report Abuse
Rekha The interest comes from this amount can be used for upgrading govt hospitals throughout India and they can even start some more hospice in some remote area... that will be helpful to soooo many people and this will make Govinda much more happy...
Rate this:
Share this comment
Cancel
Babu. M - tirupur,இந்தியா
04-மார்-201216:41:08 IST Report Abuse
Babu. M நம்ம ஊருலயும் டாஸ்மாக் கடைய எல்லாம் மூடிட்டு ஒரு வெங்கடசலபதி கோவில் கிளை ஓபன் பண்ணலாமா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை