Koodankulam protest : Truth vs Hype | கூடங்குளம் போராட்டமும்... ஆயர்களின் ஆதரவும்...: விசுவாசிகள் சந்தேகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கூடங்குளம் போராட்டமும்... ஆயர்களின் ஆதரவும்...: விசுவாசிகள் சந்தேகம்

Added : மார் 11, 2012 | கருத்துகள் (48)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Advertisement
கூடங்குளம் போராட்டமும்... ஆயர்களின் ஆதரவும்...: விசுவாசிகள் சந்தேகம்

கூடங்குளம் போராட்ட ஆதரவு தொண்டு நிறுவனங்களுக்கு, வெளிநாட்டு நிதி வரத்தை ரத்து செய்ததால், மத்திய அரசு மீது கத்தோலிக்க அமைப்புகள் அதிருப்தி அடைந்துள்ளன. ஆனால், பிரச்னையை தீர்க்க தேவாலயங்கள் ஏன் முன்வரவில்லை என, பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.


ஆலய வளாகத்தில்...:கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டம், நெல்லை மாவட்ட கடலோர கிராமமான இடிந்தகரையில், லூர்து மாதா கிறித்துவ ஆலய வளாகத்தில் பந்தலிட்டு நடத்தப்படுகிறது. இந்த போராட்டத்தை லூர்து மாதா ஆலய பாதிரியார் ஜெயக்குமார், அனைத்து விதமான உதவிகளும் செய்து வருகிறார்.
போராட்டம் நடக்கும் ஆலய வளாகம், கத்தோலிக்க பிஷப்களின் கட்டுப்பாட்டில் உள்ள தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்ட ஆயரின் நேரடி நிர்வாகத்தில் உள்ளது.
போராட்டத்திற்கு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவான் அம்ப்ரோஸ் நேரடி ஆதரவு தந்து, போராட்ட களத்தில் பலமுறை பங்கேற்றார்.


வழக்குகள்:மேலும், சேரன்மகாதேவி பாதிரியார் மைபா ஜேசுராஜன், கூத்தங்குளி பாதிரியார் ரட்சகநாதன், கூடங்குளம் பாதிரியார் பதேயூஸ் ராஜன், கூட்டப்புளி பாதிரியார் சுசிலன் உள்ளிட்டோரும் நேரடியாக போராட்டத்தில் பங்கேற்றனர். போலீஸ் அனுமதியின்றி நடக்கும், இந்த போராட்டத்தில் கலந்து கொண்டதாக, இவான் அம்ப்ரோஸ் உட்பட ஆறு பாதிரியார்கள் மீதும், கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் வழக்குகள் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், கிறிஸ்துவ தொண்டு நிறுவனங்கள் மூலம், கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதியுதவி வருவதாக, மத்திய அரசு குற்றஞ்சாட்டியது. மத்திய உள்துறை அதிகாரிகள், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில், 12 தொண்டு நிறுவனங்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.இதில் தூத்துக்குடி மறை மாவட்ட நிர்வாகத்திற்குட்பட்ட தூத்துக்குடி பல்நோக்கு சேவை சங்கம், தூத்துக்குடி மறைமாவட்ட சங்கம் ஆகிய தொண்டு நிறுவனங்களின், வெளிநாட்டு நிதியுதவி பெறும் உரிமை எண்ணை மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது.இதனால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வெளிநாட்டு நிதிவரத்து முடங்கிவிட்டது. இந்த நடவடிக்கையால், கத்தோலிக்க பேராயர் தலைமையிலான ஆயர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுதொடர்பாக, கடந்த சில தினங்களுக்கு முன், பேராயர் சின்னப்பா அளித்த பேட்டியில், "இந்த போராட்டம் கிறித்துவ போராட்டமல்ல. கூடங்குளம் போராட்டத்திற்கு நாங்கள் நிதியுதவி தரவில்லை' என கூறியுள்ளார்.


ஆதரவும், சந்தேகமும்:போராட்டத்திற்கு தார்மீக அடிப்படையில் ஆதரவு அளிப்பதாக, அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேச்சு, பொது மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. கிறித்துவ நிறுவனங்கள் உதவி செய்யவில்லை என்றால், எதற்காக கிறித்துவ ஆலய வளாகத்தில் போராட்டம் நடக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது.திருநெல்வேலி மாவட்டத்திற்கு தொடர்பில்லாத கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த உதயகுமாரும், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரிலுள்ள அமலி நகரை சேர்ந்த இடிந்தகரை பாதிரியார் ஜெயக்குமாரும், முதல்முறையாக ஏன் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தை துவக்கி வைத்தனர். எங்கோ நடக்கும் போராட்டத்திற்கு தூத்துக்குடியில் உள்ள மறை மாவட்ட ஆயர் இவான் அம்ப்ரோஸ் ஏன் நேரில் வந்து பங்கேற்க வேண்டும் என, சந்தேகங்கள் எழுந்துள்ளன.


கேள்விகள்:பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், கூடங்குளம் போராட்டத்திற்கு மதத்திற்கு அப்பாற்பட்டு ஆதரவு தருவதாக கத்தோலிக்க ஆயர்கள் கூறுகின்றனர். இதேபோல், கேரளாவுக்கு எதிரான, தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்ச்சி போராட்டமான முல்லைப்பெரியாறு பிரச்னையில், ஏன் பங்கேற்கவில்லை. கர்நாடகாவிற்கு எதிரான காவிரி பிரச்னையில் ஏன் கலந்து கொள்ளவில்லை. மின்வெட்டுக்கு எதிராகவும், தமிழகத்திற்கு மத்திய அரசு கூடுதல் மின்சாரம் தராததை எதிர்த்தும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்தும் நடைபெறும் போராட்டங்களில் ஆயர்கள் ஆதரவு தராதது ஏன்? என பல்வேறு கேள்விகளும், சந்தேகங்களும் நடுநிலையாளர்கள் மத்தியில் எழுந் துள்ளன.மத்திய அரசின் சார்பிலான விஞ்ஞானி ஆபிரகாம் முத்துநாயகம் தலைமையிலான நிபுணர் குழுவின் மீதும், தமிழகத்தில் சிறந்த பல்கலையான அண்ணா பல்கலை பேராசிரியர் இனியன் தலைமையிலான நிபுணர் குழு மீதும், உலகில் சிறந்த இந்திய விஞ்ஞானியாக கருதப்படும் அப்துல்கலாம் மீதும், அவர்களது அறிவியல் ரீதியிலான ஆய்வறிக்கைகள் மீதும், கத்தோலிக்க ஆயர்களுக்கு நம்பிக்கை வரவில்லையா?


புதிர்:எந்த அறிவியல் பூர்வ ஆய்வையும் மேற்கொள்ளாத, சொன்னதையே திரும்ப
திரும்ப சொல்லும் விதண்டாவாதியான உதயகுமார் மற்றும் பீதியூட்டும் குழுவினர் மீதுதான், பிஷப்கள் நம்பிக்கை வைத்துள்ளார்களா என்ற கேள்விகள் அனைவர் உள்ளத்திலும் எழுந்துள்ளன. இதற்கு தார்மீக ரீதியான, மனசாட்சியும், உளஉறுதியும் கொண்ட பதில்களை, ஆயர்கள் மீது அளவற்ற பற்று கொண்ட மதத்திற்கு அப்பாற்பட்ட விசுவாசிகளான தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர்.இந்திய மக்களின் வரிப்பணமான 14,000 கோடி ரூபாய் பணத்தை, பல ஆண்டுகள் ஆய்வுகளின் போதும், அதற்கு பிறகும், அணுமின் நிலையமாக அமைக்கும் வரை, இந்த ஆயர்களும், தார்மீக ஆதரவளிக்கும் ஆலய வளாகங்களும் என்ன செய்து கொண்டிருந்தன என்பது விடை தெரியாத மில்லியன் அமெரிக்க டாலர் கேள்வியாக உள்ளது.


- நமது சிறப்பு நிருபர் -


Advertisement




வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-மார்-201200:53:33 IST Report Abuse
நாசிர் உசைன் - தமிழன்டா கருணாநிதி இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்தால் அடுத்த கணமே அனைவரும் ஜெயிலில் இருப்பார்கள். கூடங்குளம் அனுமின்நிலையும் அடுத்த 5 மாதத்தில் செயல்பட ஆரம்பித்து விடும். தயவு செய்து அணுமின் போரட்ட குழுவிற்கு உங்களுடைய பொன்னான அதரவை தெரிவுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ப்ளீஸ் கருணாநிதி அவர்களே.... நாளையே உங்கள் தளபதி மற்றும் கழக உடன்பிறப்புகளுடன் கடற்கரையில் உண்ணாவிரதம் இருங்கள்.
Rate this:
Share this comment
Cancel
a chellam - doha,கத்தார்
12-மார்-201219:51:03 IST Report Abuse
a chellam எல்லோரும் உதய குமாரையும் தொண்டு நிறுவனங்களையும் மட்டுமே குறை சொல்லுகிரீர்கள். உங்கள் அணு உலை திட்டத்தில் உண்மையும், நேர்மையும் இருந்தால் ஆரம்பிக்க வேண்டியது தானே. மொத்தத்தில் கூடங்குளம் இடத்தேர்வு செய்ததில் ஆயிரம் தில்லுமுல்லுகள் அவற்றிற்கு சரியான பதிலழிக்க முடியாமல் திணறுகிறது யென்பதே உண்மை. உண்மை அதுதான் எனவே அணுமின் உலை செயல்படுவது என்பது சிரமம். அல்லது அதை சுற்றி 25 கிமீ சுற்றளவுக்குள் உள்ள மக்களை அப்புரபடுதினால் அதன் பின் யாரும் இதனை எதிர்க்கமாட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Miller Solomon - Singapore City,சிங்கப்பூர்
12-மார்-201219:30:49 IST Report Abuse
Miller Solomon மில்லர்-சிங்கப்பூர் தமிழ் நாட்டில் காசு கொடுத்தால் படித்தவர்,படிக்காதவர் என எல்லோரும் எதனைப் பற்றியும் யோசிக்காமல் போராட்டத்தில் குதித்து விடுகிறார்கள். பிறகு கரண்ட் இல்லை, தண்ணீர் இல்லை என்று சொன்னால் யாரை குறை சொல்வது.இந்த போராட்டத்தால் யார்,யாரெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள்,யார் பயனடைகிறார்கள் என்று, சற்று இனிமேலாவது விழித்துப் பாருங்கள் போராட்டத்தில் ஈடுபடும் ஒவ்வொருவரும் யாருடைய எதிர்காலம் பாதிக்கப்படுகிறது என்று நன்றாக யோசித்துப்பாருங்கள். வாழ்க பாரதம், வளர்க பாரதம்.ஜெய்கிந்த்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X