தேர்தலில் ஜெயிச்சாச்சு: விஜயகாந்த் அறிவிப்பு | தேர்தலில் ஜெயிச்சாச்சு: விஜயகாந்த் அறிவிப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேர்தலில் ஜெயிச்சாச்சு: விஜயகாந்த் அறிவிப்பு

Updated : மார் 19, 2012 | Added : மார் 17, 2012 | கருத்துகள் (49)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சென்னை: ""சங்கரன்கோவில் இடைத்தேர்தலை பொறுத்தவரை, நாங்கள் வெற்றிப் பெற்று விட்டதாகவே கருதுகிறோம்,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: தேர்தல்களை முறையாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்கே தேர்தல் கமிஷன் அமைக்கப்படுகிறது. அதற்கு உறுதுணையாக இருப்பது மாநில அரசின் கடமையும், பொறுப்பும் ஆகும். ஆனால், சங்கரன்கோவில் இடைத்தேர்தல் நடக்கும் விதத்தை பார்க்கும் போது, தேர்தல் கமிஷனும், ஆளுங்கட்சியின் கைப்பாவையாக செயல்படும் போலீசும், எந்த வகையிலும் திருந்தவில்லை என்பதையே காட்டுகிறது. நான் அங்கு, ஆறு நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்த போது ஆளுங்கட்சியினர் வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைத்தனர். இதை தடுக்க வேண்டிய தேர்தல் அதிகாரியும், பார்வையாளர்களும் என்ன செய்கின்றனர் என்பது தெரியவில்லை. அவர்கள் இதை தடுக்காதது மட்டுமல்ல; முழுக்க, முழுக்க ஆளுங்கட்சிக்கே துணை போகின்றனர் என, நான் கருதுகிறேன். அமைச்சர்கள், 32 பேர், தொகுதியில் வேலை செய்தது, முதல்வர் ஜெயலலிதா, 10 இடங்களில் பிரசாரம் செய்தது, அளவின்றி பணத்தை வாரி இறைத்தது, அதிகார துஷ்பிரயோகத்தை வரம்பு மீறி செய்தது ஆகியவை, எங்களால் ஏற்பட்ட பயத்தால், விளைந்த சாட்சிகள். இந்த இடைத்தேர்தலை பொறுத்தவரை, நாங்கள் வெற்றி பெற்றதாகவே கருதுகிறோம். இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
19-மார்-201215:22:58 IST Report Abuse
Rangarajan Pg நீங்க ரொம்ப நல்ல வருவீங்க தம்பி. உண்மையாக சொல்கிறேன். . உங்கள் எண்ணம் பேச்சு கனவு எல்லாமே வெற்றி வெற்றி தான். நிஜமாகவே வெற்றி பெறாவிட்டாலும் அந்த கனவு இருக்கிறதே அது ஒன்றே போதும். இப்பொழுது இல்லா விட்டாலும் எப்பொழுதாவது,,, அதாவது நீங்கள் தற்போதைய கருணாநிதி போன்று பழுத்த வயது அடைந்து விட்ட பின்னராவது,, ஆட்சி கட்டிலில் ஏறி படுக்க வைக்கும் கனவு உங்களுடைய கனவு.. மக்கள் பிரச்சினைக்காக உழைக்க நீங்களும் தான் எவ்வளவு ஆர்வம் காட்டுகிறீர்கள். உங்களை எல்லாம் தலைவராக அடைவதற்கு உங்கள் கட்சிகாரர்கள் எவ்வளவு புண்ணியம் செய்தார்களோ. ஆகட்டும், அது தான் வெற்றி பெற்று விட்டீர்களே, இனி என்ன, மக்களின் துயரினை துடைக்க வேட்டியை மடித்து கட்டி கொண்டு களத்தில் இறங்குங்கள். உங்களுக்காக தான் மக்கள் எல்லோரும் பல பல பிரச்சினைகளுடன் WAITING ... COME ON START .
Rate this:
Share this comment
Cancel
babu - tiruchi,இந்தியா
19-மார்-201200:57:42 IST Report Abuse
babu நிச்சயமாக அத்தனை பேரும் ராஜினாமா செய்ய போகின்றனர். சவால் விடுவது பெரிய விஷயம் இல்லை. எதிரில் அமர்ந்த எல்லோரும் கை நீட்டி பேசியதை கேட்பதற்கு ரசிகர் இல்லை. அ தி மு க வெற்றி பெற்றால் அதை விட கேவலம் சவாலுக்கு இல்லை சட்ட மன்றத்தில் நிச்சயம் கேட்பார்கள் யார் இல்லாமல் யார் என்பது நிரூபணம் ஆனால் கதை முடிந்தது
Rate this:
Share this comment
Cancel
thamodaran chinnasamy - chennai,இந்தியா
18-மார்-201216:29:58 IST Report Abuse
thamodaran chinnasamy திரும்பவும் சொல்றேன் திரும்ப திரும்பச் சொல்றேன் .......................உளறாதே......................
Rate this:
Share this comment
Cancel
ganesanmani - doha,கத்தார்
18-மார்-201216:18:57 IST Report Abuse
ganesanmani அப்துல் கலாம் கனவு காணுங்கள்னு சொன்னத, நம்ம விஜயகாந்த் கனவு கண்டு சொல்றாரு இது தப்பா ?
Rate this:
Share this comment
Lingeswaran T - chennai,இந்தியா
19-மார்-201200:20:39 IST Report Abuse
Lingeswaran Tகனவு கண்டே எதிர்க்கட்சி தலைவராக உள்ளார் ........
Rate this:
Share this comment
Cancel
thamodaran chinnasamy - chennai,இந்தியா
18-மார்-201216:18:01 IST Report Abuse
thamodaran chinnasamy உளறாதே ........................................................உளறாதே
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Vijendra Rao - Bangalore,இந்தியா
18-மார்-201216:05:03 IST Report Abuse
Srinivasan Vijendra Rao பயத்தில் உளற ஆரம்பித்து vittar
Rate this:
Share this comment
Cancel
meganathan - Muscat,ஓமன்
18-மார்-201216:03:59 IST Report Abuse
meganathan Super comedy of this year. You have replaced vadivel&39s role.
Rate this:
Share this comment
Cancel
இரா. சந்திரன் - தமிழகம்  ( Posted via: Dinamalar Android App )
18-மார்-201215:06:04 IST Report Abuse
இரா. சந்திரன் சரிடேய்.. இதே போல் பல தி்ருப்தி் வெற்றிகள் கிடைத்து நம்ம மருத்துவர் ஐயாபோல நிழல் சட்டசபை அமைத்து ஆயுள் முழுவதும் இப்படியே தி்ருப்தி் நிழல் முதல்வராக இருக்க வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
Rajan - Yishun,சிங்கப்பூர்
18-மார்-201214:56:32 IST Report Abuse
Rajan இவன் காமெடிக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. இவன் பேச்ச கேட்டுட்டு அந்த முத்துகுமார் சட்டசபைக்கு போய்ட போறான். பார்த்துக்கோங்க....
Rate this:
Share this comment
Cancel
Krish - delhi,இந்தியா
18-மார்-201213:51:00 IST Report Abuse
Krish நல்லது ... அப்படியே ஜெயித்த அந்த MLA வை தனது கோயம்பேடு கட்சி அலுவலகத்துக்கு அழைத்து வந்து அங்கு சட்டசபை போல ஒரு செட் போட்டு ,ராயபுரம் ஜெயகுமார் போல ஒருவரை டூப் போட வைத்து தனது MLA வுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து விட வேண்டியதுதானே..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை