சென்னை: ""தமிழகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும், 18 ஆயிரத்து 500 ரூபாய் கடனுடன் தான் பிறக்கிறது'' என்று தே.மு.தி.க., உறுப்பினர் பாண்டியராஜன் குற்றம்சாட்டினார்.
சட்டசபையில், பட்ஜெட் மீது நடந்த பொது விவாதம்:
பாண்டியராஜன் - தே.மு.தி.க.,: இதுவரை தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்களிலேயே, அதிக நிதிப் பற்றாக்குறையாக இந்த பட்ஜெட்டில், 19 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் உள்ளது. கடன் சுமை ஒரு லட்சத்து 35 ஆயிரம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அப்படியானால், தமிழகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும், 18 ஆயிரத்து 500 ரூபாய் கடனுடன் தான் பிறக்கிறது. தமிழக பொருளாதார வளர்ச்சி, 22 சதவீதம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சராசரி வளர்ச்சி 8 முதல் 10 சதவீதம் தான். அப்படியானால், உற்பத்தி அதிகமாக கணிக்கப்பட்டுள்ளதா?
முதல்வர் ஜெயலலிதா: நிதிப்பற்றாக்குறை பற்றி பட்ஜெட் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 2.87 சதவீதம் தான் பற்றாக்குறை உள்ளது. இது, 13வது நிதிக்குழுவின் நிர்ணயித்துக்கு உட்பட்டே உள்ளது. கடன் சுமையும், 24 சதவீதம் என்பதற்கு பதிலாக, 19.6 சதவீதம் என்ற அளவில் தான் உள்ளது. எனவே, நிதி நிர்வாகத்தை இந்த அரசு திறமையாக கையாண்டு வருகிறது.
பாண்டியராஜன்: மொத்த உள்நாட்டு உற்பத்தி, 22 சதவீதம் வளர்ச்சி என்பது, அடைய இயலாத ஒன்று.
முதல்வர் ஜெயலலிதா: இந்த குறியீடுகளை நிர்ணயித்தது, 13வது நிதிக்குழுதான். அது தவறு என்கிறாரா?
ஓ.பன்னீர்செல்வம்: தொலைநோக்கு திட்டம், 2023ல் உள்ள பொருளாதார குறியீட்டை குறிப்பிடுகிறார்.
பண்ருட்டி ராமச்சந்திரன்: அவர் நிதிப் பொறுப்புடைமை சட்டம் பற்றி பேசவில்லை. தொலைநோக்கு திட்டம் பற்றி பேசுகிறார்.
பாண்டியராஜன்: வரும் ஆண்டில், 18 ஆயிரத்து 387 கோடி கடன் பெற உள்ளது. அவ்வளவு கடன் வாங்கி, அதில் 10 ஆயிரம் கோடியை வட்டியாக செலுத்தி, மீத தொகையை வைத்து, பொதுத் துறை நிறுவனங்கள் மூழ்காமல் அரசு காக்குமா? இப்படி போனால், கடன் வலையில் அரசு சிக்கவிடும்.
முதல்வர் ஜெயலலிதா: முந்தைய தி.மு.க., அரசு தான் தமிழகத்தை கடன் வலையில் சிக்க வைத்துச் சென்றது. அதிலிருந்து மீட்கத் தான் போராடுகிறோம். இவ்வாறு விவாதம் நடந்தது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர்கள் தயவுசெய்து இந்த பகுதியை வெட்டி தனமான கருத்துக்களை வெளியிட பயன்படுத்தாதீர்கள். இந்த பகுதியை தமிழகத்தில் பொறுப்புள்ளவர்களும், உங்களைவிட அறிவாளிகளும் படிக்கிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். இந்த பகுதியை ஒரு தரமானதாகவும் , அறிவு பூர்வமாக விஷயங்கள் இங்கு அலசப்படுகிறது என்பதையும் நாம்தான் உண்டாக்கவேண்டும். நமக்கும் நிறைய பொறுப்புகள் உண்டு என்பதை மறந்து விடாதீர்கள்.
பாண்டியராஜன் இப்படியெல்லாம் புள்ளி விவரம் கொடுத்தால் தானை தலைவரோ, இல்லை புரட்சித்தலைவியோ பயந்துவிடமாட்டார்கள். மக்கள் தொகை பெருக்கும் திட்டம் என்று ஒன்றை அறிவித்து விலையில்லா சிட்டுகுருவி லேகியம் கொடுத்து மக்கள் தொகையை பத்து மடங்கு பெருக்கி, பிறக்கும் குழந்தையின் கடன்சுமை 18,500 ரூபாயில் இருந்து 1,850 ருபாய் ஆக குறைத்துவிட்டோம் என்று சொல்லி உங்கள் வாயை அடைத்துவிடுவார்கள்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.