தமிழகத்திற்கு மின்சாரம் வழங்க முடியாது: அமைச்சர் சுஷில்குமார் திட்டவட்டம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

தமிழகத்தில் நிலவும் கடும் மின் பற்றாக்குறையை போக்க, மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரம் வழங்க, மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை,'' என, மத்திய மின் துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்தார்.

தற்போது நிறைவுபெறவுள்ள, 11வது ஐந்தாண்டு (2007-12) திட்டத்தில், மின்சாரத் துறை ஆற்றிய சாதனைகள் குறித்து, துறையின் அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே நேற்று, டில்லியில் பத்திரிகையாளர்களிடம் விளக்கினார். அப்போது அவர் கூறியதாவது: 11வது ஐந்தாண்டு திட்டத்தில், 78 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய, 2007ம் ஆண்டு மின்துறை அமைச்சகம் இலக்கு நிர்ணயித்தது. ஆனால், எரிவாயு பற்றாக்குறை மற்றும் பருவ மழை பொய்த்ததால், ஐந்தாண்டு திட்ட நடுவில் உற்பத்தி இலக்கு, 62 ஆயிரம் மெகா வாட்டாக குறைக்கப்பட்டது. திட்டம் நிறைவுபெறுகிற வேளையில், 53 ஆயிரத்து 922 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கடந்த 8, 9, 10 ஆகிய மூன்று ஐந்தாண்டு திட்டங்களில், மொத்தமாக உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம், 11வது ஐந்தாண்டு திட்டத்தில் மட்டும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. பாரத் நிர்மான் திட்டம் மூலம், இந்தியாவில் ஒரு லட்சம் கிராமங்களுக்கு மின்சாரம் வழங்க திட்டமிடப்பட்டது. தற்போது, இந்த திட்டத்தின் மூலம், ஒரு லட்சத்து மூன்றாயிரம் கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஷிண்டே கூறினார்.


மின்சாரம் வழங்கப்படுமா? தமிழகத்தில் கடந்த பல மாதங்களாக, எட்டு மணி நேர மின் தட்டுப்பாடு நிலவுகிறது. தமிழக நிலைமையை சரிசெய்ய, மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரம் வழங்கப்படுமா அல்லது மத்திய அரசு இதற்கு வேறு திட்டம் வைத்திருக்கிறதா? என, ஷிண்டேவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்: தமிழகத்தில் நிலவும் கடும் மின் பற்றாக்குறையை போக்க, மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரம் வழங்கும் திட்டம் எதுவும், மத்திய அரசிடம் இல்லை. சென்னையை அடுத்த வல்லூரில், தேசிய அனல்மின் ஆணையமும், தமிழக மின்சார வாரியமும் இணைந்து தொடங்கிய, அனல்மின் நிலையத்திலிருந்து, 500 மெகாவாட் மின்சாரமும், விரைவில் தொடங்கவுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து, 1,000 மெகாவாட் மின்சாரமும், தமிழகத்திற்கு கிடைக்கும். இதன் மூலம் தமிழகத்தின் மின் பற்றாக்குறை சரிசெய்யப்படும் என்றார்.


- நமது டில்லி நிருபர் -


Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (47)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GG.RAJA - chennai,இந்தியா
30-மார்-201215:15:10 IST Report Abuse
GG.RAJA பாகிஸ்தானுக்கு 5000 மெகாவாட் மின்சாரம் வழங்கும் மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க மறுக்கிறது.ஐ.மு.கூ. அரசு என்று வெளியேற்றப்படுகிறதோ அன்றுதான் இந்தியாவுக்கு நல்ல காலம்.
Rate this:
Share this comment
Cancel
Ambika. K - bangalore,இந்தியா
30-மார்-201214:54:00 IST Report Abuse
Ambika. K தமிழகத்தில் குறைந்தது 10 பாராளுமன்ற இடங்களையாவது காங்கிரஸ் க்கு ஒதுக்கினால் மட்டுமே மின்சாரம் தர முடியும் என்று தான் கூறியதை தினமலர் ஏன் வெளியிடவில்லை என்றும அவர் கேள்வி எழுப்பினார்..
Rate this:
Share this comment
Cancel
rama krishnan - pollachi,இந்தியா
30-மார்-201214:25:39 IST Report Abuse
rama krishnan வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒட்டு போடும் எண்ணமும் எங்களுக்கு கிடையாது - இப்படிக்கு பொள்ளாச்சி வாக்காளன்
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
30-மார்-201213:21:08 IST Report Abuse
Nallavan Nallavan எதிர்க்கட்சிகளான தேமுதிக, திமுக-வும் அதிமுக-வுடன் கவுரவம் பார்க்காமல் இணைந்து போராடும் என்று நம்பிக் காத்திருப்போம்
Rate this:
Share this comment
Cancel
sankar.p - தேனி,இந்தியா
30-மார்-201213:11:50 IST Report Abuse
sankar.p மத்தியில் ஆட்சி தொடரும் வரை நாமும் ஏதும் கேட்க்காமல் இருப்பது நல்லது, நமக்கும் நேரம் வரும் போது பார்த்துக் கொள்ளலாம்....
Rate this:
Share this comment
Cancel
suseekaran - coimbatore,இந்தியா
30-மார்-201212:40:14 IST Report Abuse
suseekaran தினமலரே இப்பொழுது என்ன செய்ய போகிறாய்? கூடங்குளம் வேண்டும் என்று அழுதாயே, பாகிஸ்தானுக்கு கரண்ட் நமக்கு இல்லை. கர்நாடகவில் காங்கிரஸ் தலைவர் தமிழ் நாட்டிற்கு தண்ணீர் தரமாட்டோம் என்கிறார். அவருக்கு ஆதரவாக எழுது. உதயகுமார் வரும் பாராளுமன்ற தேர்தலில் தென்மாவட்ட மக்கள் முதுகில் குத்திய கட்சிகளுக்கு எதிராக பிரசாரம் பண்ண வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Raja - Bangalore,இந்தியா
30-மார்-201212:16:48 IST Report Abuse
Raja இந்த சுஷில் குமார் கு பாகிஸ்தான் காரங்க மேல இருக்குற அக்கறை கூட தமிழ்நாடு மக்கள் மேல இல்லையே பா என்ன கொடும சார் இது
Rate this:
Share this comment
Cancel
Malar Selvam - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
30-மார்-201212:13:05 IST Report Abuse
Malar Selvam பாகிஸ்தானுக்கு மட்டும் எப்படிடா மின்சாரம் கொடுக்குறிங்க.
Rate this:
Share this comment
Cancel
Nagarajan Devarajan - Coimbatore,இந்தியா
30-மார்-201212:10:50 IST Report Abuse
Nagarajan Devarajan மத்திய அரசில் உள்ள தமிழ் நாட்டு மந்திரி பசங்க என்ன கிழிக்கிறாங்க
Rate this:
Share this comment
Cancel
Nagarajan Devarajan - Coimbatore,இந்தியா
30-மார்-201212:08:11 IST Report Abuse
Nagarajan Devarajan உங்களிடம் எதற்குதான் திட்டம் உள்ளது கொள்ளை அடிப்பதை தவிர
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்