சென்னை:""காவிரியில் தமிழகத்திற்கு உரிய பங்கை பெறுவதிலும், தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதிலும், அரசு உறுதியுடன் செயல்படும்'' என, முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் உறுதிபட தெரிவித்தார்.
சட்டசபையில், காவிரி பிரச்னை தொடர்பாக கொண்டுவரப்பட்ட, கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது, தே.மு.தி.க.,- தி.மு.க., உள்ளிட்ட கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பேசிய பிறகு, முதல்வர் ஜெயலலிதா அளித்த பதிலுரை:காவிரி பிரச்னை தொடர்பாக, நடுவர் மன்றம் கடந்த, 2007ம் ஆண்டு பிப்ரவரி, 5ம் தேதியன்று தனது இறுதி தீர்ப்பினை வழங்கியது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணை, மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்படும் வரை, அதன் இடைக்கால ஆணை அமலில் இருக்கும் என்பது, தமிழக அரசின் நிலைப்பாடு. கடந்த, 2008ம் ஆண்டு நடந்த காவிரி கண்காணிப்புக் குழு கூட்டத்தில், அதன் தலைவரும் இந்த கருத்தை உறுதி செய்துள்ளார். தற்போது நடைமுறையில் உள்ள இடைக்கால ஆணையின்படி, நீரை விடுவிப்பதற்கான பாசன ஆண்டு என்பது, ஜூன் முதல் அடுத்த ஆண்டின் மே வரையாகும். இம்முறையே, காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கர்நாடகா கருத்து: காவிரி நதிநீர் தாவாவினை, நடுவர் மன்றம் முடிவுக்கு கொண்டு வந்துவிட்ட நிலையில், அதன் இடைக்கால ஆணை காலாவதி ஆகிவிட்டது என்றும், நடுவர் மன்ற இறுதி ஆணை இன்னமும் நடைமுறைக்கு வராத நிலையில், இடர்பாடு காலத்தில் நீரை பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் கர்நாடகாவில் பாசனம் மேற்கொள்ளுதல் உள்ளடக்கிய அனைத்து அம்சங்களுக்கும், இந்த இறுதி ஆணை ஒரு தற்காலிக ஏற்பாடாகவே இருக்கும் என, கர்நாடக அரசு கருத்து தெரிவித்து வருகிறது.கர்நாடக அரசு இக்கருத்தை கூறிய போதிலும், நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணைப்படியோ அல்லது இறுதி ஆணைப்படியோ தமிழகத்திற்கு தண்ணீர் வழங்குவதில்லை. கர்நாடக அரசு தன்னுடைய நீர்த்தேக்கங்களில் எல்லா நீர்வரத்தையும் தேக்கி, உபரி நீரை மட்டுமே தமிழகத்திற்கு வழங்கி வருகிறது.
நடுவர் மன்ற ஆணை மீறல்:மேலும், நேர்மையற்ற வகையில், பிப்ரவரி முதல் மே வரை, தனது கோடை கால பாசனத்திற்காக, அதன் நீர்த்தேக்கங்களில் இருந்து நீரை உபயோகப்படுத்தி வருகிறது. கர்நாடகத்தின் கருத்துப்படி, தற்காலிக ஏற்பாடாக இருக்கும் நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையைப் பின்பற்றினால், கோடை கால பயிர் பாசனத்திற்கு நீர் பயன்படுத்தக் கூடாது.ஆனால், கடந்த 2007-08ம் ஆண்டு முதல், 2010-11ம் ஆண்டு வரையில், கர்நாடகாவின் நான்கு பெரிய அணைகளில் இருந்து கோடை கால பாசனத்திற்கு, பிப்ரவரி முதல் மே வரையில், 42 டி.எம்.சி., முதல் 73 டி.எம்.சி., வரை நீர் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டு ஒன்றுக்கு மொத்தமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட, 103.240 டி.எம்.சி.,க்கு பதிலாக, 203 டி.எம்.சி., நீரை கர்நாடகா பயன்படுத்தியுள்ளது.
கோர்ட்டில் வழக்கு:தமிழகத்திற்கு குறுவை சாகுபடிக்கு தேவையான தண்ணீரையும் வழங்குவதில்லை. பருவமழை தொடங்கியவுடன் எல்லா நீர்வரத்தையும், தன் அணைகளில் தேக்கி வைத்து, அவை நிரம்பிய பின்னே தமிழகத்திற்கு நீர் வழங்குகிறது. இதனால், மேட்டூர் அணைக்கு நியாயமாக வந்து சேர வேண்டிய நீர் வருவதில்லை.தமிழகத்தின் உரிமையை பாதுகாக்கும் வகையில், கோடை கால பாசனத்திற்கு அணைகளில் இருந்து நீரை பயன்படுத்தக் கூடாது என, உத்தரவு வழங்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில், ஓர் இடைக்கால மனுவினை அரசு தாக்கல் செய்துள்ளது. காவிரியில், தமிழகத்திற்கு உரிய பங்கை பெறுவதிலும், தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதிலும், அரசு உறுதியுடன் செயல்படும்.இவ்வாறு அவர் பேசினார்.
அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் : காவிரி பிரச்னை தொடர்பாக பேசிய முதல்வர் ஜெயலலிதா, ""காவிரி நதியில், கிருஷ்ணராஜசாகர் மற்றும் மேட்டூர் அணைகளுக்கு இடைப்பட்ட பகுதியில், சிவசமுத்தரம், மேகதாது, ராசிமணல் மற்றும் ஒகேனக்கல் எனும் இடங்களில், புனல் மின் திட்டங்களை செயல்படுத்த, தேசிய நீர் மின் கழகம் கருதியது. இத்திட்டங்களை, தேசிய நீர் மின் கழகம் செயல்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையோடு, ஒப்பந்தத்திற்கு இசைவு தெரிவிக்கப்பட்டது.தற்போது, சிவசமுத்திரம் மற்றும் மேகதாது புனல் மின் நிலையங்கள், அம்மாநில எல்லைக்குள் இருப்பதால், அவைகளை கர்நாடக மாநிலமே செயல்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தின் இசைவு பெறாமல், பன்மாநில நதியான காவிரி ஆற்றின் குறுக்கே, எந்தவொரு திட்டத்தையும், கர்நாடக அரசு தன்னிச்சையாக மேற்கொள்ள இயலாது என தெரிவித்துள்ளோம்.
இதுகுறித்து, சுப்ரீம் கோர்ட்டிலும் ஓர் இடைக்கால மனுவை, தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. இந்த சூழலில், தமிழக அரசின் இசைவைப் பெறாமல், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில், புதிய அணையை கர்நாடகா கட்ட இயலாது. அவ்வாறு, கர்நாடகா முயற்சிக்குமானால், தமிழகம் அதை எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்காது'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
கணேஷ் முத்து....இரண்டு கழகங்களும் கிழித்தது என்ன என்று பொத்தாம் பொதுவாய் கேள்வி கேக்காதீர்கள். ஜெயா அரசு உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருமுறை தமிழகத்துக்கு சாதகமாக தீர்ப்பு வாங்கி இருக்கிறார். அதனை அரசு இதழில் வெளியிடுமுன் அவரது ஆட்சி இரண்டு முறையும் முடிந்தது. அடுத்து வந்தவர் தானை தலைவர். எந்த தானைக்கு சேனைக்கு தலைவர் என்று கேக்காதீர்கள், எனக்கு வாயில வந்துரும். இவர்தான் கடந்த பத்து ஆண்டுகளாக மத்திய அரசில் உட்கார்ந்து கொண்டு திருட்டையே கண்ணும் கருத்துமாய் கவனித்து கொண்டிருக்கிறார். இடையில் இரண்டு முறை அதாவது பத்து வருடங்கள் மாநிலத்திலும் முதல்வர். ஜெயா முதல்வராய் இருக்கும் போது எடுக்கும் நடவடிக்கைகளுகெல்லாம் மத்திய அரசில் உட்கார்ந்து கொண்டு தடை போடுவதே இவரது வேலை. இப்படி இருக்கும் போது கலைஞர் கிழித்ததென்ன என்று கேள்வி கேளுங்க, ஒத்துகறேன். அதை ஜெயா என்ன செய்தார் என்று கேக்காதீங்க. ஜெயா யாருக்கும் அசராமல் தமிழகத்தின் நலன் ஒன்றையே கண்ணும் கருத்துமாய் கொண்டிருக்கிறார். அவருக்கு என்ன தானை தலைவர் போல கர்நாடகா, கேரளா, ஆந்த்ரான்னு குடும்ப தொழிலா இருக்கு ???...
காவிரி பிரச்னையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவோம????????????? இப்படியே ஆயிரம் வருசத்துக்கு நிலை நாட்டிகிட்டே இருங்க???................. ஆனா தண்ணீர் மட்டும் கொடுக்காதீங்க??? அப்போது தான் அடுத்த election stataement ரெடி பண்ணலாம் பாருங்க????????????............. கொஞ்சம் கொஞ்சமா சாகடிக்காம முழுசா சாகடிசுடுங்களேன்??? சித்ரவதையாவது குறையும்?? குளத்தில் ஊறிய ரெண்டு மட்டைகளும் நல்ல ஆட்சி பண்ணுதுப்பா. பாவம் தமிழன்?....................... (includimg myself)

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.