Show for President Pratibha Patil cost Navy Rs 23 crore | ஜனாதிபதியின் ஒரு நாள் விழாவுக்கு ரூ.23 கோடி செலவு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஜனாதிபதியின் ஒரு நாள் விழாவுக்கு ரூ.23 கோடி செலவு

Updated : மே 26, 2012 | Added : மே 24, 2012 | கருத்துகள் (135)
Advertisement

புதுடில்லி: கடற்படை அணிவகுப்பு மரியாதையை ஏற்க, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பங்கேற்ற ஒரு நாள் நிகழ்ச்சிக்காக, 23 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. விருந்தினர்களுக்கு, "மினரல் வாட்டர் பாட்டில்' வழங்குவதற்கு மட்டுமே, 12 லட்சம் ரூபாய் செலவாகியுள்ளது. சம்பிரதாய நிகழ்ச்சி: இந்திய கடற்படையின் தயார் நிலை மற்றும் தளவாடங்களின் திறன் ஆகியவற்றை, ஜனாதிபதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்கும் சம்பிரதாய நிகழ்ச்சி, ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நிகழும். ஜனாதிபதியாக பிரதிபா பாட்டீல் பொறுப்பேற்ற பின், கடந்தாண்டு டிசம்பர் 20ம் தேதி மும்பையில் இந்நிகழ்ச்சி நடந்தது. கடற்படையைச் சேர்ந்த, 81 கப்பல்கள், நான்கு நீர்மூழ்கி, 44 கடற்படை விமானங்கள் மற்றும் இந்திய கடலோர பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை பிரதிபா பாட்டீல் ஏற்றுக் கொண்டார். இந்த ஒரு நாள், சம்பிரதாய நிகழ்ச்சிக்காக, கடற்படை சார்பில், எவ்வளவு பணம் செலவிடப்பட்டது என்பது குறித்த விவரங்களை தெரிவிக்குமாறு, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், எஸ்.சி.அகர்வால் என்பவர் கோரியிருந்தார்.

இதற்கு கடற்படையின் மேற்கு கமாண்டரின் தலைமையகம் அளித்துள்ள பதில்:

பிரத்தியேக நாற்காலி: ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பங்கேற்ற நிகழ்ச்சிக்காக மொத்தம், 23 கோடி ரூபாய் செலவானது. விருந்துக்காக, 30 "டைனிங் டேபிள்,' 60 "டைனிங்' நாற்காலிகள், வி.ஐ.பி.,க்கள் அமர பிரத்தியேக நாற்காலிகள் மற்றும் கூலியாட்கள் செலவுக்காக மட்டும், 26 லட்சத்து, 96 ஆயிரம் ரூபாய் செலவானது. ஜனாதிபதி சார்பில், 960 விருந்தினர்களுக்கு உணவு விருந்து வழங்க, 17 லட்சத்து 57 ஆயிரம் ரூபாயும், போர் கப்பலில் ஜனாதிபதியின் பயணத்துக்காக அழைக்கப்பட்ட 760 பேருக்கு, உணவு வழங்க, 2 லட்சத்து, 11 ஆயிரம் ரூபாயும் செலவானது. வந்திருந்த விருந்தினர்களுக்கு தலா, 83 ஒரு லிட்டர் "மினரல் வாட்டர் பாட்டில்'கள் வழங்குவதற்காக மட்டும், 12 லட்சம் ரூபாய் செலவானது. "பிரஷ்'ஷான காய்கறிகள், மளிகை சாமான்களுக்கு, 28 லட்சத்து 14 ஆயிரம் ரூபாயும், ஒட்டு மொத்தமாக பணியாளர்களுக்கு கூலித்தொகைக்கு ஒரு கோடி ரூபாயும் செலவானது.

செயற்கை நீருற்று: நிகழ்ச்சியை ஒட்டி, மும்பை விஜயா கார்டனில் சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மாற்றங்களை மேற்கொள்ள, 14 லட்சம் ரூபாயும், "ஆபீஸர்ஸ் மெஸ்' பகுதியில் படிக்கட்டுகளை சீரமைக்க, 14 லட்சம் ரூபாயும், முல்லா ஆடிட்டோரியம் அருகே, புதிதாக செயற்கை நீரூற்று அமைக்க ஆறு லட்சம் ரூபாயும் செலவிடப்பட்டது. ஜனாதிபதி வருகைக்காக, பல்வேறு கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்காக மட்டும், 11 கோடியே, 67 லட்சம் ரூபாய் செலவானது. இவ்வாறு கடற்படை அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளது. பணவீக்கம், விலைவாசி ஏற்றம், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற பல்வேறு பிரச்னைகளால், பொருளாதாரம் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நிலையில், சம்பிரதாயத்துக்காக ஒரு நாள் நடக்கும் நிகழ்ச்சிக்கு, 23 கோடி ரூபாயை வீணடித்திருப்பது, கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (135)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karthik raju - thanjavur,இந்தியா
27-மே-201211:58:26 IST Report Abuse
karthik raju தனிபட்ட மனிதருக்கு மரியாதையை கொடுப்பதாக நினைத்து மக்கள் வரி பணத்தை விரையும் செய்வது சரியா?
Rate this:
Share this comment
Cancel
karthik raju - thanjavur,இந்தியா
27-மே-201211:55:49 IST Report Abuse
karthik raju 23 கோடி 23 ஆஈரம் குடும்பத்தின் வாழ்வின் புது வாழ்வு அரசு செய்வது தவறு
Rate this:
Share this comment
Cancel
Badri Narayanan - Madurai,இந்தியா
26-மே-201212:59:55 IST Report Abuse
Badri Narayanan There lot of difference has come nowodays between rich and poor ,so instead of sping money like this please try to reduce the prices of all things required for a common man ..indias well wisher K.Badri,Madurai
Rate this:
Share this comment
Cancel
Suresh Babu - Salem,இந்தியா
25-மே-201222:13:57 IST Report Abuse
Suresh Babu முன்னால் ஜனாதிபதி .2020. ல் இந்தியா வல்லரசு நாடாகும் என்றார். ஆனால் இந்த பட்டியம்மா பதவியில் இருக்கும் வரை இந்தியா இன்னமும் 2020 வருசம் ஆனாலும் வல்லரசு ஆகாது. எப்படி வல்லரசு ஆகும் இந்த மாதிரி தண்டசெலவு மற்றும் இந்த பாட்டியம்மா விமானபயண பாக்கி இன்னமும் இருக்கிறது. இப்படி கடனோடு கடனாக இந்தியாவை மொட்டை அடிக்கனும் என்று முடிவு செய்து விட்டார் ...இதற்கு ஆங்கிலேயனே பரவாயில்லை. பாதை,மலைபாதை,,பாலம்,அனைகள் என்று நிறைய செய்துவிட்டு கொல்லைஅடித்தான். ஆனால் இந்த பாட்டியம்மா பதவியை எந்தஅளவுக்கு பயன் படுத்தமுடியுமோ அந்தஅளவுக்கு அதற்க்கு மேலும் பயன்படுத்திவிட்டார் இந்த பட்டியோடு இது முடியாது அடுத்து வரும் நபருக்கு இது மறைமுகமாக சொல்லிகுடுத்துவிட்டு போகுது இப்படிதான் தண்டசெலவு செய்யனும் என்று...சேலம் ,சுரேஷ்பாபு,மாலத்தீவு
Rate this:
Share this comment
Samir - Trichy,இந்தியா
26-மே-201213:06:09 IST Report Abuse
Samirஇவனுங்கெல்லாம் கோடிகளில் புரண்டு புரண்டு, கடைசியில் நம்பளை போன்ற சாதாரண மக்கள் சிங்கிள் டீ குடிப்பதற்கு கோடி ரூபாய் கொடுக்கவேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை. காத்திருங்கள் மக்களே....
Rate this:
Share this comment
Welcome Al-Hass - Bangkok,தாய்லாந்து
27-மே-201209:31:59 IST Report Abuse
Welcome Al-Hassஆம் சகோதரா நம்நாடு 2020 வருஷம் பின்தங்கி போய்விடும் போல் இருக்கிறது பொருளாதரத்தில்... வீண் செலவுகளுக்கு மக்கள் தலையில் தான் கை வைகிறார்கள் இப்போது மீண்டும் பெட்ரோல் விலையேற்றம்.. இதுபோல் போனால் வெகுவிரைவில் இந்தியா சோமாலியாவை விட கீழே சென்றுவிடும் .. இங்கிலாந்து அரசியே தன் செலவுகளை மிகவும் குறைத்துகொண்டதாக ஒரு செய்தியில் படித்தேன் அனால் இங்கு மக்கள் பணத்தை வாரி இறைத்து கொண்டிருகிறார்கள். இதை கேட்க யாருமே இல்லையா ......
Rate this:
Share this comment
Cancel
Arp Peter - sivagangai ,இந்தியா
25-மே-201221:46:12 IST Report Abuse
Arp Peter இது அரசின் அதிகாரபூர்வ விழா??????, என்ன கமாண்ட எழுதுனாலும்???கொள்ளயடிக்குற, கோடிய நிருதப்போரானா? தினமலரு, கமாண்ட எழுதுற நாமளுதையா, கேன.....?????? கோவத்த அடக்கிக தண்ணிய குடுசுக்குவ வேறவழி? ,,,,குளிர்பானம்...ஐயோ....கண்மாத்தன்னியதே.
Rate this:
Share this comment
Cancel
arun - chennai,இந்தியா
25-மே-201220:34:16 IST Report Abuse
arun பாட்டி,,,,,,, நீங்க தாத்தா பணத்தை இப்டி செலவு செய்வீங்களா??? ........இப்டி செலவு செய்தா ரிட்டைடு ஆன பிறகு தாத்தாவை என்ன வேலைக்கு அனுப்பி சம்பாதிக்க சொல்ல போறீங்க......
Rate this:
Share this comment
Cancel
kalaiselu - somanur,இந்தியா
25-மே-201219:50:46 IST Report Abuse
kalaiselu நாம் இன்னும் காலனி ஆதிக்கத்தில் இருந்திருந்தால் கூட நம் நாடும் நம் வாழ்வும் மிக சுபிக்சமாக இருந்திருக்க கூடும். நமது முன்னோர்கள் ( வெள்ளையர்களிடம் இருந்து நம்மை மீட்டு கொள்ளையர்களிடம் அடகு வைத்த புண்ணியவான்கள் ) நமக்களித்த வரம் இது. விரும்பி ஏற்று வாழ்வை தொடர்வதை தவிர வேறு வழி ஏது?
Rate this:
Share this comment
Cancel
m.viswanathan - chennai,இந்தியா
25-மே-201219:45:25 IST Report Abuse
m.viswanathan இந்தியா போன்ற ஒரு நாட்டுக்கு ஜனாதிபதி என்ற பதவியே தேவை தானா ? இவர்கள் செய்கின்ற அலம்பகள் மறைமுக சர்வாதிகார ஆட்சி போல் உள்ளது. வாழ்க பிரதீப் புகழ்
Rate this:
Share this comment
Cancel
jaikrish - LONDON,யுனைடெட் கிங்டம்
25-மே-201219:05:52 IST Report Abuse
jaikrish இந்த ஆயா "ஓய்வு" ( உழைத்து களைசுட்டங்க ) பெற்ற பின்பும் பென்சன்,பாதுகாப்பு,அரசு பங்களா என கிட்டத்தட்ட பதவியிலிருக்கும்போது அனுபவித்த, கிட்டத்தட்ட அனைத்து அம்சங்களும் கிடைக்கப் பெறுவார் என்பது இன்னும் கொடூரம்.வெளிநாட்டு பயணம் மட்டும் அரசு செலவில் இருக்காது என்பது மட்டும் ஆறுதல்.
Rate this:
Share this comment
Cancel
Rag Nat - London,யுனைடெட் கிங்டம்
25-மே-201218:51:05 IST Report Abuse
Rag Nat we don't need President & Governors post in India,Its totally a waste of govt money
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை