Ranvir sena chief killed, Bihar on high alert | பீகாரில் ரன்வீர் சேனா அமைப்பின் தலைவர் சுட்டுக்கொலை: தடை உத்தரவு அமல்| Dinamalar

பீகாரில் ரன்வீர் சேனா அமைப்பின் தலைவர் சுட்டுக்கொலை: தடை உத்தரவு அமல்

Updated : ஜூன் 03, 2012 | Added : ஜூன் 01, 2012 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

பாட்னா :பீகாரில் நிலக்கிழார்களின் தனிப்பட்ட படைப் பிரிவாகச் செயல்பட்டு வந்த, தடை செய்யப்பட்ட ரன்வீர் சேனா அமைப்பின் தலைவர் பிரமேஷ்வர் சிங், நேற்று அதிகாலை, அடையாளம் தெரியாத ஆறு பேர் கொண்ட கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால், பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தில் நிலக்கிழார்கள் மற்றும் உயர் ஜாதி வகுப்பினருக்காக, ரன்வீர் சேனா என்ற படைப்பிரிவு செயல்பட்டு வருகிறது. தடை செய்யப்பட்ட இந்த அமைப்பின் தலைவர் பிரமேஷ்வர் சிங். இவர், "முகியாஜி' என செல்லமாகவும் அழைக்கப்பட்டு வந்தார். இவர் மீது, 1996 டிசம்பரில் லட்சுமண்பூரில், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 61 தலித்களைக் கொன்றது உட்பட பல கொலை வழக்குகள் உள்ளன. இதில், தலித்களைக் கொன்ற வழக்கில், பிரமேஷ்வர் சிங் விடுவிக்கப்பட்டு, இந்த ஆண்டு ஏப்ரலில் சிறையில் இருந்து வெளியே வந்தார். கடந்த 1990ம் ஆண்டுகளில், ஜகானாபாத், அவுரங்காபாத் மற்றும் நவடா மாவட்டங்களில் பல படுகொலை சம்பவங்கள் நிகழ்ந்தன. அவற்றில் பிரமேஷ்வர் சிங்கிற்கு தொடர்பு உண்டு என்றும் சந்தேகிக்கப்பட்டது. பிரமேஷ்வர் தனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில், 22 வழக்குகளில் ஜாமின் பெற்றிருந்தார். நிலக்கிழார்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்த இவர், நிலமற்ற ஏழைகளுக்கும், தலித்களுக்கும் எதிராக துப்பாக்கி ஏந்தியவர்.

சுட்டுக்கொலை: இந்நிலையில், பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டம் ஆரா அருகே நவாடா போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட கதிரா மொகல்லா என்ற இடத்தில், நேற்று அதிகாலை, பிரம்மேஷ்வர் சிங் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத ஆறு பேர், அவரை சரமாரியாக சுட்டுக் கொன்றனர். உடலில் பல இடங்களில் குண்டுகளால் துளைக்கப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே இறந்தார். இதன் பின், சுட்ட கும்பல் தப்பியோடி விட்டது. இந்த சம்பவம் குறித்து அறிந்ததும், சேனா ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். அவர்கள், முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் மாநில அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

ஊரடங்கு அமல் :படுகொலை பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த, மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் மற்றும் போலீசாரையும், ரன்வீர் சேனா ஆதரவாளர்கள் விரட்டியடிக்க முற்பட்டனர். இதையடுத்து, படுகொலை நடந்த பகுதியான ஆரா நகரில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அத்துடன் போஜ்பூர் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.படுகொலை குறித்த தகவல் அறிந்ததும், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், "போஜ்பூர் பகுதி மக்கள் அமைதியையும், நல்லிணக்கத்தையும் பேணி காக்க வேண்டும்' என, வேண்டுகோள் விடுத்தார். அத்துடன் உயர் போலீஸ் அதிகாரிகளையும் சம்பவ இடத்திற்கு அனுப்பி, சட்டம் - ஒழுங்கை பேணி காக்கும்படி உத்தரவிட்டார்.

எதிர்க்கட்சிகள் கண்டனம்:பிரமேஷ்வர் படுகொலை குறித்து, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் கூறுகையில், ""படுகொலை சம்பவம் குறித்து, விரிவான விசாரணை நடத்த வேண்டும். சி.பி.ஐ., விசாரணை நடத்தி, சம்பவத்தில் நடந்த அனைத்து உண்மைகளையும் கண்டுபிடிக்க வேண்டும்,'' என்றார். அதேபோல், காங்கிரஸ், லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகளும் சி.பி.ஐ., விசாரணை கோரியுள்ளன.

துவக்கப்பட்டது எப்போது?பீகாரில் உள்ள வலதுசாரி உயர் ஜாதி இனத்தவர்களால், "ரன்வீர் சேனா' அமைப்பு 1994ல் உருவாக்கப்பட்டது. இதை பிரமேஷ்வர் சிங் தோற்றுவித்தார்.ரன்வீர் பாபா என்ற ராணுவ வீரர், போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள பேலூர் கிராமத்தில் இருந்த மேல்தட்டு மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் போராடினார். இவரது பெயர் இந்த அமைப்பிற்கு சூட்டப்பட்டது.இது, தலித், நக்சலைட்களுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்கிறது. மத்திய அரசு, இந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பு என வகைப்படுத்தியுள்ளது. பீகார் அரசு, ஜூலை 1995ல் ரன்வீர் சேனா அமைப்பை சட்டப்படி தடை செய்து உத்தரவிட்டது. அது, இன்று வரை அமலில் உள்ளது.பீகார் லட்சுமண்பூரில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 61 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் மட்டுமின்றி, மியான்பூர் மற்றும் பதானிதோலா ஆகிய இடங்களில் படுகொலைகளுக்கும் பிரமேஷ்வரின், ரன்வீர்சேனா அமைப்பே காரணம் என, தெரிவிக்கப்பட்டது.

போலீசார் தெரிவிக்கும் தகவலின்படி, ரன்வீர் சேனா அமைப்பானது, 1995 மற்றும் 2000ம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில், 29 படுகொலை சம்பவங்களுக்கு காரணமாக இருந்துள்ளது.பாட்னா பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலை பட்டம் பெற்ற பிரமேஷ்வர், 2002ம் ஆண்டில் பாட்னாவில் கைது செய்யப்பட்டார். இதுவரை 22 வழக்குகளில் ஜாமின் பெற்றிருந்தார். லட்சுமண்பூர் படுகொலைகள் வழக்கில், கடந்த ஆண்டு ஏப்ரலில், பீகார் கோர்ட், 16 பேருக்கு மரண தண்டனை விதித்தது. 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. அந்த நேரத்தில், ஆரா நகரில் உள்ள சிறையில், மற்ற சில வழக்குகள் தொடர்பாக பிரமேஷ்வர் அடைக்கப்பட்டிருந்தாலும், அவர் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதால், தண்டனையில் இருந்து தப்பினார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
manokaran - kanchipuram,இந்தியா
02-ஜூன்-201217:08:38 IST Report Abuse
manokaran ஏழைகளின் கண்ணீர் வீணாகாது. ஆயுதம் எடுத்தவன் ஆயுதத்தால் அழிவான். அதுதான் உண்மை . கந்தன்,சென்னை
Rate this:
Share this comment
Cancel
J.GANDHI - PUDUCHERRY,இந்தியா
02-ஜூன்-201214:48:34 IST Report Abuse
J.GANDHI THIS IS CORRECT DECISION.
Rate this:
Share this comment
Cancel
Ganesh prabu - Delhi,இந்தியா
02-ஜூன்-201211:58:35 IST Report Abuse
Ganesh prabu வினை விதைத்தவன் வினை அறுப்பான்........... சார் எத்தனை பேரை இப்புடி கொன்னாரோ????
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X