ஷி்ல்லாங் : விரைவில் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் நிச்சயம் வெற்றிவாகை சூடுவேன் என்று அ.தி.மு.க., தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் உள்ளிட்டவற்றின் ஆதரவுடன் களமிறங்கியுள்ள புருனோ அஜிடோக் சங்மா கூறியுள்ளார்.
செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த சங்மா கூறியதாவது, அமெரிக்காவில், கறுப்பர் இனத்தை சேர்ந்த பாரக் ஒபாமா அதிபர் ஆகும் போது, இந்திய திருநாட்டில், பழங்குடியினத்தை சேர்ந்த நான் ஜனாதிபதி ஆக முடியாதா?. நான் இதுவரை நடைபெற்றுள்ள அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டுள்ளேன். இதுவரை, நான் போட்டியிட்ட எந்த தேர்தலிலும் தோல்வியடையவில்லை. ஒவ்வொரு தேர்தலின் போதும், எனக்கு ஓட்டு வித்தியாசம் அதிகரித்துள்ளது. இதற்கு மக்கள் மற்றும் கடவுளின் கிருபை தான் காரணம்.
அ.தி.மு.க,. பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகளுடன் ஆதரவை பெற்ற நான், தேர்தலில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக உள்ளது என்று அவர் கூறினார்.
ஜூலை 19ம் தேதி நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி, அ.தி.மு.க., பா.ஜ. ஆதரவு பெற்ற வேட்பாளர் சங்மா உள்ளிட்ட 42 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பிரணாப் மனு நிராகரிப்பு : சங்மா கோரிக்கை : ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் பிரணாப் முகர்ஜியின் மனுவை நிராகரிக்க வேண்டும் என்று அ.தி.மு.க , தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சங்மா கூறியுள்ளார். நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பாக பிரணாப்பும், அ.தி.மு.க., தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக சங்மாவும் போட்டியிட்டுள்ளனர். இருவரும் தங்களுக்காக நாடு முழுக்க ஆதரவு திரட்டி வருகின்றனர். இந்நிலையில் தேர்தலில் பிரணாப் நிற்க சங்மா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுபவர் எந்த ஒரு துறையிலும் பதவி வகிக்க கூடாது. ஆனால் பிரணாப் இந்திய புள்ளியல் துறையின் தலைவராக இருக்கிறார். எனவே அவர் ஜனாதிபதி தேர்தலில் நிற்க கூடாது என்று கூறியுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
எதுக்கு என்ன உதாரணத்தை எடுத்து கதைக்க வேணும் என்ற விவஸ்த இல்லையா ? ஒபாமா கறுப்பு இனம் என்பதைவிட அவர் படிப்பு, பார்த்த உத்தியோகம் அஜிடோக் சங்மாவுக்கு இருக்கா என்ன ? முழு நாட்டு தேர்தலில் ஜெயித்து அதிகாரம் பெறும் அமெரிக்க ஜனாதிபதி பதவி வேறு சும்மா இத்தாலிய அம்மாவுக்கு ஜால்ரா அடிக்க துணை போகும் இந்திய ஜனாதிபதி நியமனம் வேறு. மயில் வான்கோழி டான்ஸ் கதை இவருக்கு தெரியுமோ????
எப்படியாயாவது பதவி பிடிக்க உங்களுக்கு பிரணாப் பதவி பொறுப்பு விலக வில்லை என்று தகவல் கொடுத்து உள்ளார்கள், அதாவது பெரும்பாலும் தாழ்த்தப்பட்டவர்கள் இன்று அரசு பதவிகளில் உட்கார்ந்து உங்களை போன்றவர்களுக்கு தகவல் தெரிவிக்கிறார்களா இது போன்ற தகவல்கள் கிடைத்தாலும் தங்களுக்கு அறிந்தாலும் அதனை முறை படி தெரிவித்து பிரணாப் PORUPPUKALIL IRUNTHU விலக செய வேண்டும் அதை விடுத்தது அவர் மனுவை நிராகரிக்க வேண்டும் என்பது பதவிக்காக கொலையும் செய்யும் அரசியல் நடையாக தெரிகிறது இது போன்ற குறுகிய மனம் உள்ளவர்கள் இந்த பதவிக்கு வர கூடாது ஜெயா எப்படி இவருக்கு ஆதரவு தெரிவித்தார் , அது சரி ஒபமா பெர்சனாலிட்டி என்ன உன் பெர்சனாலிட்டி என்ன, யோவ் அவர் பாஸ்கட் பால் விளையாட்டு வீரர், அவர் நிற்கும் போது அவர் கால் முட்டியை தான் நாம் பார்க்க முடியும், அவர் சும்மா அங்கு ப்ரெசிடென்ட் ஆக வில்லை இங்கு உங்கள் தனி திறமை என என்று மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் உங்களுக்கு ஆதரவு என்று அம்மா அறிவித்து இருப்பது காங்கிரஸ் கூட்டணி என்னிடம் வரதே என்று சொல்வதற்கு தான், பழங்குடியின் மீது பரிவு அல்ல, விருப்ப பட்ட படி சங்மா குடியரசு தலைவரானால் நன்று என்று நினைத்தோம் ஆனால் இவர் பிளேக் மெயில் செய்வது போல் மனு நிராகரிப்பு இந்திய அரசியலில் ஒரு அருவருப்பு
அமெரிக்காவில் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஒபாமா அதிபர் ஆகும் போது, இத்தாலியை சேர்ந்த சோனியா ஏன் பிரதமாராக கூடாது, அந்த காரணத்தை சொல்லி தானே அன்று காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறினீர்????????, பின் அதே காங்கிரஸ் கட்சியில் உம்முடைய மானத்தை அடமானம் வைத்து, அதே சோனியாவை சென்று பார்த்து நீங்கள் செய்ததற்கு மன்னிப்பு கேட்டு, உம் மகளுக்கு மந்திரி பதவி வாங்கினீரே அப்போதெல்லாம் இந்த நியாயம் உமக்கு தெரியவில்லையோ??
ரெண்டு பேரும் அந்த ஒன்னும் இல்லாத பதவிக்கு அடிசுகிரானுன்களே தவிர, ஜெயச்சா என்ன பண்ணுவேன் ன்னு சொல்ல மாட்டேன்றானுங்க. ஜனாநிதிபதிக்கு ஆட்சிய கலைக்குர அதிகாரம் இருக்கு, அரசாங்கம் சரியாய் செயல் படலன்ன ஆட்சிய கலசுடுவேன் ன்னு சொல்லி வோட்டு கேட்குரானுன்களா ?. இந்த பன்னாட போன வாரம் சோனியா வ வெளி நாட்டவர் ன்னு சொன்னதுக்கு மன்னிப்பு கேட்டான். இப்படி பொம்பள கால்ல விளரவன்லாம் ஜனாதிபதி ஆனா நாடு விளங்கிடும் . இவனுங்க ரெண்டு பேரையும் விட என் அப்பா ரொம்ப நல்ல மனிதர். பேசாம அவர அன்னபோச்டா தேர்து எடுத்துடலாம், ஏன்னா அவரு எங்க அம்மா வையே சத்தம் போட்டு பேசுனது இல்ல, இந்த பதவிக்கு இது போதாதா?
ஜனாதிபதி தேர்தலில் நிற்பவர் எந்த ஒரு பதவியும் வகிக்கக்கூடாது. ஆனால் பிரணாப் புள்ளி இயல் துறையில் தலைவராக பொறுப்பில் இருக்கிறார். நிதி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அவருக்கு இது எஏன் தோணவில்லை? அதையும் ராஜினாமா செய்திருக்க வேண்டியது தானே? சங்மாவின் கோரிக்கை நியாயமானதே
காங்கிரசின் கை கூலியாக செயல் படாமல் தனிச்சையாக செயலாற்றும் தேர்தல் ஆணையமாக இருந்தால் பிரணாபின் வேட்புமனு நிராகரிக்கப்படவேண்டும். ஜனாதிபதி பொறுப்புக்கு விண்ணப்பிப்பவர் எந்த ஒரு பதவி பொறுப்பிலும் இருக்ககூடாது என்ற அடிப்படை கருத்தைக்கூட அறியாத இவர் ஐம்பது ஆண்டுகாலம் அரசியல் அனுபவம் உள்ளவராம். இவரெல்லாம் ஜனாதிபதி ஆனால் இந்திய விளங்கினர்போல தான்.
அமெரிக்க அதிபர் ஒபாமா எங்கே.. பதவிக்காக எதையும் செய்யத்துணியும் இந்த சங்மா எங்கே? ஒப்பீட்டுக்கும் ஒரு அளவு வேண்டாமா? தாம் சார்ந்த கட்சி தம்மைத் தூக்கி எறிந்தாலும், தன் மகளின் அமைச்சர் பதவி போனாலும்கூடப் பரவாயில்லை, தனக்கு ஜனாதிபதி பதவி கிடைத்தால் போதும் என அலையாய் அலையும் இவரெல்லாம் ஜனாதிபதியானால் நாட்டைக்கூட அடுத்தவனுக்குக் காட்டிக்கொடுக்க தயங்கமாட்டார் என்பது மட்டும் மறுக்கமுடியாத உண்மை.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.