No separate railway zone for Kerala | சேலம் கோட்டம் கேரளாவுக்கு எட்டாக்கனி: பரபரப்பு பேச்சுக்கு முற்றுப்புள்ளி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சேலம் கோட்டம் கேரளாவுக்கு எட்டாக்கனி: பரபரப்பு பேச்சுக்கு முற்றுப்புள்ளி

Updated : ஜூலை 08, 2012 | Added : ஜூலை 06, 2012 | கருத்துகள் (10)
Advertisement

தெற்கு ரயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ரயில்வே கோட்டங்கள் உள்ளன. இதில்,கேரளாவில் உள்ள பாலக்காடு, திருவனந்தபுரம் கோட்டங்களுடன், சேலம் கோட்டத்தையும் இணைத்து, கேரளாவில் தனியாக மேற்கு கடற்கரை ரயில்வே மண்டலம் உருவாக்க, கேரளத்தை சேர்ந்த ரயில்வே அதிகாரிகள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் ரகசியமாக முயன்று வருகின்றனர் என, கடந்த, 20 நாட்களாக சேலத்திலும், கேரளாவிலும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டதற்கு, அவர்கள் வெளிப்படையாக பதிலளிக்கத் தவிர்த்தனர். "கேரளாவில் தனி ரயில்வே மண்டலம் அமைப்பதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை,' என்று மட்டும் பொதுவாகத் தகவல் தெரிவித்தனர்.


சேலம் இணைப்பில்லை: தற்போது, தெற்கு ரயில்வே பொதுமேலாளர் பதவிக்கு, புதிதாக யாரும் நியமனம் செய்யப்படவில்லை. தென்மேற்கு ரயில்வே பொதுமேலாளர் ஏ.கே.மிட்டல், கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். இந்நிலையில், சேலம் ரயில்வே கோட்ட வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்ய, சமீபத்தில் சேலத்திற்கு மிட்டல் வந்தபோது, கேரள தனி ரயில்வே மண்டலம் குறித்து, நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, "சேலம் ரயில்வே கோட்டம் கேரளத்துடன் இணைக்கப் படாது,' எனக் கூறி விட்டு, மேலும் விளக்க விரும்பவில்லை.


கொங்கண் கேள்விக்குறி: கேரளத்தில் மேற்கு கடற்கரை ரயில்வே மண்டலம் அமைப்பதற்கு, சேலம் கோட்டத்திற்குப் பதிலாக, கொங்கண் ரயில்வேயின் குறிப்பிட்ட கி.மீ., தூரம் ரயில் பாதையை எல்லை வைத்து, மேற்கு கடற்கரை ரயில்வே மண்டலத்தை அமைக்கலாம் என, கேரள மக்கள் விரும்புவதாக பேசப்படுகிறது. கொங்கண் ரயில்வேயில், 1,034 கி.மீ., தூரம் ரயில் பாதை உள்ளது. இந்த பாதையில், கேரளாவில் இருந்து அதிகமான ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கொங்கண் ரயில்வே கார்பரேஷனில் சில மாநிலங்களும், இந்தியன் ரயில்வேயும் பங்குதாரராக உள்ளன. இதனால், கொங்கண் ரயில்வேயில் குறிப்பிட்ட கி.மீ., பாதையை சேர்த்து, கேரளத்தில் தனி ரயில்வே மண்டலம் அமைக்க சாத்தியக் கூறுகள் இல்லை என, ரயில்வே அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.


- நமது நிருபர் -


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
C.Jayabalan - chennai ambathur,இந்தியா
07-ஜூலை-201212:34:15 IST Report Abuse
C.Jayabalan The demand by keralites to annexe salem division is very narrow in desire.The salem division is a large revenue earner next to Chennai division and many important junctions such as salem,erode, coimbatore, besides the world heritage station-mettupalayam and udhagamandalam is bracketed in salem division.More intercity express trains and duranto express run in this division,hence, there is wider scope for revenue generation every year.These are the factors turn as an eye catcher for the greedy keralites and they yet again attempt for grabbing salem division into kerala circuit.Previously, they mooted carving out or upgrading mangalore into kerala so that the justification for a minimum 3 division needed for carving out a new zone so that Trivandrum,palghat and mangalore constitute kerala's desire for south west coastal railway into a new zone. But it will cost a huge amount to the state exchequer and will not be sanctioned by the fund starving railway ministry.The unethical dreams of keralites to gobble up salem or annexing mangalore into their belly will not be sanctioned in the immediate future.May be, they can plan for creating a new division with ernakulam as an additional division so that the state of kerala will have all three divisions from within the state only.May be this can be a minor mercy for the day dreaming keralites.
Rate this:
Share this comment
Cancel
Kathiresasn Sornavel - Mumbai,இந்தியா
07-ஜூலை-201212:18:44 IST Report Abuse
Kathiresasn Sornavel இது மாதிரி, நமது தமிழக அதிகாரிகள், எம் பி, எம் எல் ஏ, களுக்கு நமது தமிழக மக்கள் மீது ஏன் கொஞ்சம் கூட அக்கறை இல்லை..? நம் தமிழ் நாடு.. நமது தமிழ் மக்கள்... அவர்களுக்கு நாம் வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் இல்லை ...? மும்பையில் இருந்து திருநெல்வேலிக்கு மூன்று புதிய ரயில்கள் இந்த மாதம் முதல் இயக்க பட உள்ளது...இதில் இரண்டு புதிய ரயில்கள் கேரளா வழியாக செல்கின்றன. நமது தமிழக அதிகாரிகள், எ ம் பி, எம் எல் ஏ கள் வாய்திறக்க வில்லை. இதே போல் கன்னியாகுமரி மும்பை எக்ஸ்பிரஸ் என்று ஒன்று உள்ளது... இந்த வண்டி கன்னியாகுமரியில் புறப்பட்டு கேரளா முழுவதும் சுற்றி, மீண்டும் கோவை, ஈரோடு, வந்து மும்பை செல்கிறது .... பேருதான் எக்ஸ்பிரஸ், கேரளா முழுவதும் சின்ன சின்ன ஸ்டேஷனில் கூட நின்று தான் செல்லும். பயனகட்டனமும் அதிகம் ...இதெல்லாம் நமது அதிகாரிகளுக்கு..அரசியல் வாதிகளுக்கு தெரியாதா....? தமிழன் .. தமிழன் என்று சொல்லி அவர்கள் வாழ்கிறார்கள்.உண்மை தமிழன் உணர்ச்சி இல்லாத ஜடமாய் வாழ்கிறான்...... தமிழ் அன்னையே நீதான் எங்களை காப்பாத்த வேண்டும்
Rate this:
Share this comment
Sanghimangi - Mumbai,இந்தியா
07-ஜூலை-201217:26:52 IST Report Abuse
Sanghimangiகதிர், திருநெல்வேலிக்கு வெறும் இரண்டு வண்டிகள் தான் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது, மூன்று அல்ல. ஒன்று வாரம் மூன்று முறை பெங்களுரு வழியாக செல்லும். மற்றொன்று வாரம் ஒருமுறை மட்டுமே கொண்கன் வழியில் செல்லும். இது ஹப்பா வண்டி போல் முழுவதும் கேரளா வழியே செல்லாது தமிழகம் வழியாக செல்லும். இது கொங்கு மண்டல மக்களின் நீண்ட கால கோரிக்கையை அடுத்து கொண்கன் வழியில் ரயில் விடப்பட்டுள்ளது. கேரளா வழியாக செல்லும் ரயில்கள் கதை வேறு, இது வேறு. சாதாரணமாக மும்பையில் இருந்து கோவைக்கு வர சுமார் 31 மணி நேரமாகும். இந்த கொண்கன் வழியால் 23 மணி நேரம் மட்டுமே பிடிக்கும். இந்த வழியை கேரளா வண்டிகள் மட்டுமே ஏகபோகமாக அனுபவித்து வந்ததை மாற்றி இந்த ரயில் விட எங்களை போன்ற மக்கள் எழுதிய கடிதங்கள் ஆயிரம். நவி மும்பையில் உள்ள அனைத்து தமிழ் மற்றும் கேரள (பாலக்காடு) மக்களுக்கு இந்த ஒரு வண்டிதான் கொண்கன் வழியாக நேரடியாக செல்லும் வண்டி. சோரனூர் சென்று வண்டி மாற வேண்டிய அவசியம் இனி இருக்காது. ஆக எதையும் கண்ணை மூடி கொண்டு குற்றம் சொல்லாதிர்... வேண்டுமானால் கோவை பிக்கானர் வண்டியை மதுரை வரை நீட்டித்தால் பன்வேல் வழியாக மும்பைக்கு மேலும் ஒரு வண்டி வசதி வரும். அதை அனைவரும் வலியுறுத்துவோம்.....
Rate this:
Share this comment
Cancel
BulletRaja - Pudupatti, Rasipuram,இந்தியா
07-ஜூலை-201210:18:34 IST Report Abuse
BulletRaja கலைஞர் இதற்கும் உண்ணா விரதம் இருந்திருப்பாரோ.... அதனால் வெற்றி பெற்று இருக்கிறது...
Rate this:
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
07-ஜூலை-201207:50:51 IST Report Abuse
Pannadai Pandian இந்த மலயாளிங்கள கண்கொத்தி பாம்பா கவனிக்கணும் அசந்தா போட்டு தள்ளிடுவானுங்க.
Rate this:
Share this comment
Cancel
P. Kannan - Bodinayakkanur,இந்தியா
07-ஜூலை-201207:40:07 IST Report Abuse
P. Kannan சரி மரியா, நீங்க கூறுவது உண்மை என்று எடுத்து கொண்டாலும், ரயில்வே சம்மந்த பட்ட விஷயங்களில் தமிழ்நாடு, கேரளா அளவிற்கு வளர்ச்சி அடையவில்லை என்பது ஐந்து தடவை முதல்வராக இருந்த கலைஞருக்கு தெரியாதா? இப்பொழுது ஒன்றும் குறைந்து விடவில்லை. மத்தியில் உள்ளவர்களுக்கு உங்கள் தயவு தேவை. ஆகவே நியாயமான உங்கள் கோரிக்கைகள் அவர்களால் ஏற்றுக்கொள்ளப்படும் ? செய்வீர்களா?....... செய்தால் சிறை நிரப்பு போராட்டத்தை விட அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் ? அரசியலில் சண்டை போட்டு நேரத்தை வீனடிக்ககூடாது, சாதிக்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
07-ஜூலை-201205:33:47 IST Report Abuse
s.maria alphonse pandian கலைஞரின் கடிதத்துக்குப்பின் கேரளாவுடன் கோட்ட இணைப்பு சாத்தியமில்லை என திட்டவட்டமாக ரெயில்வே துறை அறிவித்து விட்டது....
Rate this:
Share this comment
RAAJU - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
07-ஜூலை-201209:03:30 IST Report Abuse
RAAJUகருணாநிதி என்ன கடிதம் எழுதினார்? அந்த செய்தி என்று வந்தது? இதுக்கு கடிதம் எழுதினவர் தமிழகத்தில் பல ரயில்வே பிராஜக்ட்கள் ஆமை வேகத்தில் செல்கின்றன, அதற்கும் எழுதினால் தமிழர்கள் கருணாநிதிக்கு நன்றி உள்ளவர்களாக இருப்பார்கள்....
Rate this:
Share this comment
Cancel
innocent - india,இந்தியா
07-ஜூலை-201201:50:44 IST Report Abuse
innocent kerala divisions did not give respect to salem division, when salem was in palakad. salem division stations were utilised like curry leaves, only lot of facilities provided or considered only for stations in kerala, but not to stations in salem divisions. Even Coimbatore was big city, but coimbatore lacks all the facilities needed for big railway station. coimbatore station looked like village station. Now kerala divisions want to join salem division or madurai division. By seeing the respects received by the people of salem division stations from kerala divsions, how people in madurai railway divsion will show interest in joining with kerala divsion. kerala divsion should think about the facilities providing by them to other divsions (mangalore division) also when other divsions are in their control. mangalore divsion is feeling that all the rail quota is taken by kerala division and So mangalore divsion also wants to merge with SWR. So Kerala divsion should think about giving respect to other divsions also and treat other state divsions as their child and should provide all the facilities required by other divsions. Kerala division should try to retain mangalore by giving respect to that people. Kerala thinks that tamilnadu stops their development instead of fighting with central government for the funds and allocating lands to railways.And there are more than two hundred trains running every day in each stations of kerala compared to trichy,madurai where only fourty trains are running everyday. kerala people can get train to go to any parts of tamilnadu from kerala. But tamilnadu does not have that facility. there is no train from nagercoil to thanjavur. Kerala got all the facilities and converted all the lines to broad gauge and double lines. But still tamilnadu is meter gauge lines and single lines. But kerala feels that tamilnadu stops their train development. tamilnadu will not think like that. tamilnadu also wants development to be happened in neighbouring states also.Even kerala all the facilities, they can not enjoy the facilities like, forced to travel long distances to thiruvandapuram via palakad, not in shorter distances via madurai. And super express trains stopped in every ten kilometers, because of their inside political problems. please solve your inside political problems first. we are telling for your benefit only.
Rate this:
Share this comment
Pachaitamizhan Indian - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
07-ஜூலை-201208:26:50 IST Report Abuse
Pachaitamizhan Indianநண்பர் கூறுவது முற்றிலும் உண்மை. கேரளவில் பஸ் கட்டணம் மிக அதிகம். எனவே அனைத்து ரோடுகளிலும் ரயில் இயக்கப்பட்டு, பெருவாரியான மக்கள் ரயிலையே பயன்படுத்துகிறார்கள். இங்கிருந்து செல்லும் சில எக்ஸ்பிரஸ் அங்கே சென்ற பின் பாசென்ஜெர் போல் ஆளே ஏறாத ஸ்டேஷனில் கூட நிறுத்தி செல்லும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை