புதுடில்லி: "ஏர்-இந்தியா நிறுவனத்தில், தேவைக்கு அதிகமாக, 256 பைலட்கள் உள்ளனர்' என, அந்நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, வெளிநாடுகளுக்கு இயக்கப்பட்ட விமானங்களை, ஏர் இந்தியா நிறுவனமும், உள்நாட்டு விமானச் சேவையை இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனமும் நிர்வகித்து வந்தன. ஆனால், 2007ம் ஆண்டு, இவ்விரு நிறுவனங்களும் இணைந்து, தற்போது ஏர்-இந்தியா நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் சார்பில் இயக்கப்படும், வெளிநாடு மற்றும் உள்நாட்டு சேவைகளுக்கு, 494 பைலட்கள் போதுமானது. ஆனால், இருப்பதோ 750 பைலட்கள் என, ஏர்-இந்தியா நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இவர்களில் இந்திய பைலட்கள் கில்டு சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள பைலட்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மே 7ம் தேதி முதல், வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினர். போராட்டம் 58 நாட்கள் நீடித்தது. டில்லி உயர் நீதிமன்றம் தலையிட்டதால், போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. போராட்டத்தில் கலந்து கொண்ட பைலட்களின் எண்ணிக்கை, 434 பேர். போராட்டம் நடந்து கொண்டிருக்கும்போது, உள்நாட்டு விமான சேவைகளையும், இந்நிறுவனம் நடத்தியது. போராட்டத்தில் பங்கேற்ற, 101 பைலட்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இருப்பினும், இந்நிறுவனம் விமான சேவைகளை பெருமளவு சமாளித்து இயக்கிக் காட்டியது.
உள்நாட்டில் டில்லி, மும்பை, கோல்கட்டா, சென்னை உட்பட பல்வேறு இடங்களில் இருந்து, இயக்கப்பட வேண்டிய விமான சேவைகள் 45. போராட்டம் காரணமாக, 45 சேவைகளில், 38 சேவைகளை, ஏர்-இந்தியா நிறுவனம் திறம்பட இயக்கியது. இந்நிறுவன பைலட்களில், வெளிநாடு விமான சேவையில் ஈடுபடும் பைலட்கள், 80 மணி நேரமும், உள்நாட்டு விமான சேவையில் ஈடுபடும் பைலட்கள், 72 மணி நேரமும், பணியாற்ற வேண்டும் என்பது தான் நிறுவன விதி. இதன் அடிப்படையில் தான், அவர்களுக்கான சம்பளம் மற்றும் அலவன்சுகள் கணக்கிடப்பட்டு வழங்கப்படுகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஊரான் வீடு நெய்யே கதை தான். அரசாங்கப்பணம் - எப்படிப்போனால் என்ன என்ற எண்ணம் தான் காரணம். பெரும்பாலான அரசு துறை இப்படித்தான் இயங்குகிறது. air india லாபத்தில் இயங்க வேண்டும் என்றால் முதலில் சேவைத்தரம் மேம்பட வேண்டும். விமான சிப்பந்திகள் பயணிகளை ஏதோ வீணாய்போனவர்களை கவனிப்பது போல கவனித்தால் யார் பயணம் செய்வார்கள்?
இந்த ஏர் இந்தியா விமான நிறுவனம் வேலை செய்யும் உயர் அதிகாரி முதல் கடைசி ஊழியர் வரை அனைவரையும் முற்றிலும் மாற்ற வேண்டும். அப்பொழுதுதான் இந்த நிறுவனம் லாபத்தில் நடக்கும். இப்பொழுது உள்ள ஊழியர்கள் அனைவரும் வெட்டிச் சம்பளம் வாங்குகிறார்கள். நஷ்டக்கணக்கு காண்பிக்கும் இவர்களுக்கு ஒரு போராட்டம் ஒரு கேடு. ஏர்இந்தியா விமானம் சென்ற அனைத்து வழித்தடத்திலும் தற்போது ஜெட் ஏர்வேஸ் விமானம் போகிறது. அவர்களுக்கு மட்டும் எப்படி லாபகரமாக நடத்த முடிகிறது?உயர்பதவி வகிக்கும் அதிகாரிகள் மற்ற நிறுவனகளுக்கு விலைபோகிறார்கள். இவர்கள் வாங்க வேண்டியதை வாங்கிக்கொண்டு,மற்ற நிறுவனகளுக்கு வழிவிடுகிரார்கள். ஏனென்றால் இது பொதுசொத்துதானே. இவன் அப்பன்வீட்டு சொத்தில்லையே. இவர்கள் நிறுவனத்தில் வேலை செய்யும் விமான பணிப் [பாட்டிகளுக்கு] பெண்களுக்கு,பணி ஓய்வு என்பதே கிடையாது போலிருக்கு சாகும்வரை வேலைகொடுக்கும் ஒரே நிறுவனம் ஏர்இந்தியா விமானம் நிறுவனம்தான்.மாவா,பான்பராக் போடும் பா[ட்டிகளை]ர்டிகளை பணிப்பெண்களாக வைத்துயிருக்கும் ஒரே நிறுவனம் ஏர்இந்தியா விமானம் நிறுவனம்தான்.
ஏற் இந்தியாவின் தரங்கெட்ட நிர்வாகம் முதல் காரணம். சவுதி அரேபியா, டம்மாமிலிருந்து வாரம் இரு முறை சென்னை மற்றும் திருவனந்தபுரத்திற்கு நேரடி விமானம் இருந்தது. இதை ஊத்தி முடி ஜெட் ஏர்வேய்ஸ் எனும் தனியார் நிர்வனத்துக்கு நல்ல வருமனத்தை ஏற்படுத்தி கொடுத்து வருகிறார்கள். இந்த செக்டார், வசூல் ராஜா செக்டார். கேரளா மற்றும் தென் தமிழ் நாடு மக்கள் இதனால் பெரும் பயன் பெற்று வந்தார்கள். ஜெட் ஏர்வேய்ஸ் இந்த வாய்ப்பை சரியாக பயன் படுத்தி பயணிகளிடம் அடிக்கும் கொள்ளை மற்றும்,சாமான்கள் எடை விசயத்தில் நாற்பது கிலோவை முப்பது ஆக்கி கார்கோ சாமான்களை ஏற்றி பயணிகளை வதைக்கிறார்கள். இதை கூட புரியாத ஏர் இந்திய நிர்வாகம் இந்திய மக்களுக்கு என்ன சேவை செய்ய போகுறது ? நஷ்டத்தை மக்கள் மீது ஏற்றபோவ்து மட்டும் சரியாக நடை பெறுகிறது...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.